July 19, 2017

எந்த நாட்டவராயினும், எவ்வித நிபந்தனையுமின்றி தலை துண்டிக்கப்படும் - சவூதி

இஸ்லாமிய சட்டங்களோடு முரண்படும் எந்த சர்வதேச சட்டத்தையும் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் : சவூதி அரேபியா திட்டவட்ட அறிவிப்பு....!!

உலகமே உற்றுநோக்கி கொண்டிருக்கும் சர்வதேச சாம்ராஜ்ஜியமான சவூதி அரேபியா, இஸ்லாமிய சட்டங்களோடு முரண்படும் எந்த  சர்வதேச சட்டத்தையும் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பில்...

ஆணும் பெண்ணும் திருமணம் செய்வது என்பது இறைவனுடைய விதி, அதற்கு மாற்றமாக ஆணும் ஆணும் திருமணம் செய்வது பெண்ணும் பெண்ணும் திருமணம் செய்வது போன்ற செயல்களுக்கு சில நாடுகள் அங்கீகாரம் வழங்கியுள்ளன மேலும் இதை சர்வதேச சட்டங்களாக மாற்றுவதற்கு பல நாடுகள் முயற்சித்து வருகின்றன. இதனை சவூதி அரேபியா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது.

கருத்து சுதந்திரம் என்ற பெயரில் இஸ்லாத்தை கேளி கிண்டல் செய்வதை எந்த சூழலிலும் சவுதி அரேபிய பொறுத்து கொள்ளாது. மத உணர்வுகளை புண்படுத்துவதுதான் கருத்து சுதந்திரம் என்றால் அந்த கருத்து சுதந்திரத்தை நாங்கள் எதிர்க்கிறோம்.

அத்து மீறி தகாத உறவுகளில் ஈடுபடுவோர் பிடிபட்டால், அவர் எந்த நாட்டவர் ஆயினும், எந்த வித நிபந்தனையும் இன்றி தலை துண்டிக்கப்படுவர்.

மேற்கண்டவாறு சவூதி அரேபியா கடுமையாக கூறியுள்ளது.

சவுதி அரேபியாவில் சில பெரும் குற்றங்களுக்கு நிபந்தனையற்ற மரண தண்டனை சட்டமாக உள்ளது, அவையாவன,

1. கடவுளை திட்டுதல். (Blasphemy) (கைது செய்யப்பட்ட மூன்று நாட்களுக்கு இஸ்லாம் போதிக்கப்படும். கருத்தை மாற்றாவிட்டால் தண்டனை நிறைவேற்றப்படும்)
2. தன்னை தானே நபி என்றழைப்பவர் (Prophecy/Apostasy) (கைது செய்யப்பட்ட மூன்று நாட்களுக்கு இஸ்லாத்தின் நபித்துவம் பற்றி போதிக்கப்படும். கருத்தை மாற்றாவிட்டால் தண்டனை நிறைவேற்றப்படும்)
3. விபச்சாரம் (Adultery) (திருமணமாகாத ஆண்கள்/பெண்களுக்கு 100 சவுக்கடி | திருமணமாகி இருந்தால் மரண தண்டனை)
4. உயிரை கொள்ளும் ஆயுதங்களுடன் திருடுதல் (Armed Robbery)
5. கொள்ளை (Burglary)
6. விமானங்களை கடத்துதல் (Aircraft Hijacking)
7. போதை வஸ்துக்கள் வைத்திருந்தல்/தயார் செய்தல்/கடத்துதல்/உதவி செய்தல் (Drug Handling/Manufacturing/Smuggling)
8. ஓரின சேர்க்கை (Sodomy, homosexuality, or lesbianism (If a man or woman is sodomized by their own consent, then they will also be sentenced to death along with the sodomizer)
9. பொது இடங்களில் உருவ வணக்கம் செய்தல் (Idolatry)
10. கொலை செய்தல் (Murder)
11. கற்பழிப்பு (Rape)
12. இராஜத்துரோகம் (Sedition)
13. சூனியம் செய்தல் (Sorcery)
14. பயங்கரவாத செயல் (Terrorism)
15. பொது இடங்களில் நாத்திகம் பேசுதல் (Atheism)

இவைகளுக்கு நிபந்தையற்ற மரண தண்டனை வழங்கப்படும். இந்த அனைத்து சட்டங்களும் மார்க்க அறிஞர்களின் கீழ் நடைமுறை படுத்தப்படும். சவுதி அரசோ அல்லது அரசரோ இதில் ஈடுபட அனுமதி இல்லை.

இந்த மாதிரி கடுமையான சட்ட கோட்பாடுகள் தான் இன்னமும் சவுதியை ஒரு அமைதி பூங்காவாக வைத்திருக்கிறது.

Warren அவர்களின் கூற்றின் படி 400 ஆண்டுகளுக்கும் மேலாக சவூதி அரேபியா அமைதி நாடாக அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

2 கருத்துரைகள்:

மாற்றுமத,அன்புச் சகோதரர் சகோதரிகள் மற்றும் பண்பாடு கலாச்சாரம் அமைதியாகவும் பாசத்தோடும் மற்ற மக்களிடையே அன்புடன் அரவணைத்து வாழ்ந்து கொண்டிருக்கும் சகல மக்களுக்கு இதை நாம் ஒவ்வொருவரும் பகிர்ந்து கொள்ள வோண்டிய ஆக்கமாகும்,ஏனெனில் இது மனிதானால்,ஆக்கப்பட்டதல்லா,நம்மை உருவாக்கி நாம் நல்ல விதமாக வாழ இறைவன் வகுத்துக் கொடுத்ததாகும் களங்கம் இல்லா உள்ளத்துடன் தயவுசெய்து சிந்திக்கவும்

I wish those Muslim brothers who always oppose Saudi to read this again and again.

Post a Comment