Header Ads



மக்தப்புக்கு போக ஆசைப்படும் மகள், குடிகார கணவன், யாசகம் கேட்கும் தாய்..!

-Abu Ariya-

கண்ணீரை வரவழைத்த நிகழ்வு?

இன்று -20- நடுமதிய நேரம் 1.00 மணியளவில் 45வயது மதிக்கத்தக்க சகோதரி ஒருவர் என் வீட்டின் பின்புறமாக வந்து நின்றார்.

பார்ப்பதற்கு அடக்கமான மரியாதை நிறைந்த ஒரு தாய். அவரது வரண்ட ததும்பிய குரலிலிருந்து மிகவும் பசியாக இருக்கிறது. கொஞ்சம் சாப்பிடத்தாருங்கள் என ஏக்கத்தோடு முனுமுனுக்கலானார்.

அவரது பசி தீர்ப்பதற்கான ஏற்பாடு அல்லாஹ்வுடைய உதவியைக் கொண்டு நடைபெற்ற போது,

கண்ணீரோடு வார்த்தைகளைக் கொட்டினார்.

'நான் பக்கத்துக் கிராமத்திலிருந்து வருகிறேன். எனது கணவர் குடிகாரர் குடும்பத்தை கவனிப்பது கிடையாது. அதனால் கடுமையான வறுமையில் இருக்கிறோம். நான் ஒருபோதும் பிச்சைக்கு போனது கிடையாது. இன்று எனது கடைசிக் குழந்தையின் ஆசையை நிறைவேற்றுவதற்காக பஸ் ஏறி வெட்கம் களைந்து வந்திருக்கிறேன்.

சாதாரணமான மத்ரஸாவில் குர்ஆன் ஓதிக்கிட்டு இருந்த என் பிள்ளை இப்போ அவள்ற கூட்டாளிகளோடு சேர்ந்து மக்தப்புக்கு போக ஆசைப்படுகிறாள். அதற்கு சேர்ப்பதென்றால் 1600/= பணம் தேவை. அக்கட்டணத்தை செலுத்துவதற்காகத்தான் இவ்வாறு வீடு வீடாகச் செல்கிறேன். "

என அழுது புலம்பினால்.

சகோதரர்களே! இவ்வாறு பல குடும்பங்களை வறுமையானது பலவந்தமாக இந்நிலைக்கு(கையேந்தல்) அழைத்துச் செல்கிறது.

#இது சமூகத்திற்கான வறுமை ஒழிப்புத்திட்டத்திற்குரிய ஸதக்கா சார்ந்த நம்பிக்கை நிதியத்திற்கான தேவையை வேண்டி நிற்கிறது.

9 comments:

  1. சாதாரண மக்களும் மக்தபில் ஓத வேண்டும் என்ற ஒரு சலுகை சரத்தை ஏன் உலமா சபை மக்தப் மத்ரசா விதிகளில் கொண்டுவர வில்லை?மக்தப் பிரச்சினை சகல ஊர்களிலும் பெரும் பிரச்சினையாக உள்ளது,அரபி கற்கை நெறியை மட்டுமே கற்றுக்கொண்ட இளம் உலமாக்கள் ஏதாவது துறை சார்ந்த தொழிலை தேட முடியாத நிலையால் அவார்களுக்கு தொழில் வழங்கும் நோக்கோடு ஆரம்பிக்கப்பட்ட இந்த மக்தப் திட்டம் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்கள் வெளியில் சொல்ல முடியாமல் வெந்துபோய் உள்ளனர் ஒரு குடும்பத்தில் 2 .3. பிள்ளைகள் மக்தப் போவதாக இருந்தால் அவர்களின் கதை என்னவாகும்,வசூல்/வரியை நிர்னயிக்கும்போது கீழ் உள்ளவர்களை கவனத்தில்கொள்ள வேண்டும்,

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் உலமா சபையை தொடர்பு கொண்டீர்களா?

      Delete
  2. மக்தபுக்கு பணம் கட்ட ஏழை பெண் பிச்சை எடுக்க வேண்டுமா?

    ReplyDelete
  3. இது மக்தபின் தேவை மாதிரம்மல்ல,பசியின்கோரம்,படிப்பின்தாகமும்,சமூகத்தின்தூக்கமும்,பொறுப்பாளர்களின் பொடுபோக்கும்.

    ReplyDelete
  4. இதற்கான பொறிமுறையை ACJU நடைமுறை படுத்தியே இருக்கிறது

    ReplyDelete
  5. என்றாலும் சிலர் இவ்வாறு மக்தப் பெயரை வைத்துக் கேட்டால் பிச்சை கிடைக்கலாம் என்ற யுக்தியைக் கையாளவும் முடியும்

    ReplyDelete
  6. பணம் செலுத்த வசதியில்லாத பிள்ளைகள் மக்தபிலிருந்து துறத்தப்பட்ட சம்பவங்களும் இடம்பெற்றுள்ளது.

    ReplyDelete
  7. Dear Brothers,
    We are all living in an era in which the Muslims are being attacked in all aspects. Sadly our own community also opens the way for those who wants to attack by creating competition amongst us. Each one of us think that our opinion is THE best and all the others are wrong. We never try to listen to both sides of a story. There will be 99 benefits in a project and 1 error, we will be smart enough to identify that error and publish it so that everyone can laugh loud at us.
    Anyhow with regard to the matter raised here, I would like to highlight the below points. There is a Maktab in our Masjid in which nearly 200 students are being educated. I’m being looking after its operations for few years since inception.
    1. Maktab is owned by the Masjid/Madrasa which runs it.
    2. ACJU will provide the Syllabus, System, Training and Support service
    3. It is the responsibility of each MR (“Maktab Representative” Who is assigned by the boards of trustees to look after the Maktab) to look into all matters of Maktab. Which also includes making arrangements for the students who need financial assistance
    4. Procedure for assistance
    a. Identify students with financial difficulties
    b. Speak to a donor from the locality or in the surrounding localities.
    c. Arrange the monthly fee of the student through a donor.
    5. ACJU has provided this training to all MR, Maktab Principal and Maktab Teachers
    6. It is a very big mistake to expect ACJU to come and conduct Maktab in each and every Masjid. It is the responsibility of each Muslim of the locality to make arrangements for the dheeni education of their children.
    7. A student will pay an admission fee of Rs. 1500/- for his first year book and uniform. A monthly fee of Rs. 500/- (which means Rs. 17/- a day). I need not to say the amounts our community is spending for the other affairs which has taken high priority in our lives.
    Alhamdulillah we (in our Masjid) have made arrangements for 10 students who have financial difficulties. Likewise I know many masjids around the country have done such arrangements. I think this matter should have been handled by the person to whose house this mother visited and not published it. Are we such a poor community that to arrange Rs. 1500/- we need to publish an article raise funds?
    Why have we become so mean that we never think of highlighting the benefits of this system but make few negative areas such an issue? Is it because we don’t want our younger generation not learn the dheen? Or is it because we want to condemn all projects of ACJU?
    I know it’s not South Africa and it is Sri Lanka where most of the Muslims speak and read Tamil. Unfortunately I can’t write Tamil.
    Please forgive me if I have hurt anyone in writing this comment.

    ReplyDelete

Powered by Blogger.