Header Ads



திரு­டர்­க­ளாக உள்­ளனர் என சொன்னதற்காக ஜனாதிபதியும், பிரதமரும் என்னிடம் விளக்கம் கேட்டனர்

பிர­தான கட்­சி­களில் உள்­ள­வர்­க­ளி­லேயே திரு­டர்கள் உள்­ளனர். தற்­போது ஊழலில் ஈடு­ப­டு­ப­வர்கள் யார் யார் என்­பது எனக்கு நன்­றாக தெரியும். இதற்­கான ஆதா­ரமும் உள்­ள­தாக பிர­தி­ய­மைச்சர் ரஞ்சன் ராம­நாயக்க தெரி­வித்தார்.

பிர­தான கட்­சி­களில் உள்­ள­வர்கள் கூட்­டாட்சி அர­சாங்­கத்­தி­லி­ருந்து வில­கு­வ­தாக எச்­ச­ரித்­துள்­ளமை தொடர்பில் ஊட­க­மொன்­றுக்கு வழங்­கி­யுள்ள செவ்­வி­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­துள்ளார். அவர் மேலும் குறிப்­பிட்­டுள்­ள­தா­வது,

ஐக்­கிய தேசிய கட்சி, ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்னணி மற்றும் பொது எதி­ரணி ஆகிய பிர­தான கட்­சி­களில் உள்­ள­வர்­களே திரு­டர்­க­ளாக உள்­ளனர். இது தொடர்பில் அண்மையில் பாரா­ளு­மன்­றத்தில் பேசும் போது­கூட நான் குறிப்­பிட்­டி­ருந்தேன். இதற்­கான ஆதா­ரங்­களும் என்­னிடம் உள்­ளன. அத­னால்தான் நான் இக்­க­ருத்தை பாரா­ளு­மன்­றத்தில் குறிப்­பிட்­டி­ருந்தேன். பாரா­ளு­மன்­றத்தில் நான் ஆற்­றிய உரை தொடர்பில் ஜனாதி­ப­தியும் பிர­த­மரும் என்னிடம் விளக்கம் கேட்­டி­ருந்­தனர். அது எனது கருத்து என்­ற­ப­டியால் பின்னர் அதனை விட்­டு­விட்டேன். ஆனால் கடைசி பாரா­ளு­மன்ற அமர்­விலும் கூட பிர­தான கட்­சி­களில் உள்­ள­வர்கள் எந்­த­வித ஊழலையும் செய்­யா­த­துபோல் வெளிக்­காட்ட முனை­கின்­றனர். இது தொடர்பில் பேசு­கின்­றனர்.

சில சிரேஷ்­டத்­து­வ­மா­ன­வர்­களும் அர­சாங்­கத்தில் இருந்­து­கொண்டு இவ்­வாறு எதிர்­முனை பேச்­சு­களை தொடுப்பது சரியா எனவும் பாரா­ளு­மன்­றத்தில் நான் ஆற்றிய உரை தொடர்பிலும் கேள்வியெழுப்பியிருந்தனர். ஆனால் பிரதான கட்சிகளில் உள்ளவர்களிலேயே திருடர்கள் உள்ளனர் என்பதை என்னால் உறுதியாக கூறமுடி யும் என்றார்.

No comments

Powered by Blogger.