July 20, 2017

ஞானசாரர், நீதிமன்றில் சப்தமிடுவதாக அறிந்தேன் - பிரதி சொலி­சிற்றர்

-MFM.Fazeer-

எக்­னெ­லி­கொட வழக்கு விசா­ரணை நிறை­வ­டைந்த பின்னர் நான் மன்றை விட்டு வெளி­யே­றினேன். இதன் போது என்­னிடம்  வந்த பொலிஸ் அதி­காரி ஒருவர் கல­கொட அத்தே ஞான­சார தேரர்  மன்றில் சப்­த­மி­டு­வ­தாக கூறினார்.

இத­னை­ய­டுத்து நான் உட­ன­டி­யாக மீண்டும் நீதி­மன்­றுக்குள் சென்றேன் என பிரதி சொலி­சிற்றர் ஜெனரல் திலீப பீரிஸ் மேன் முறை­யீட்டு நீதி­மன்றில் நேற்று சாட்­சி­ய­ம­ளித்தார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் 25 ஆம் திகதி ஊட­க­வி­ய­லாளர் பிரகீத் எக்­ன­லி­கொட காணாமல் ஆக்­கப்­பட்­டமை குறித்த வழக்கு நீதி­மன்­றத்தில் நடந்த போது,  ஞான­சார தேரர் ஹோமா­கம நீதிவான் நீதி­மன்­றுக்குள் அத்து மீறி­யி­ருந்தார்.

இதன் போது நீதி­மன்ற வளா­கத்தில் வைத்து பிரசாத் எக்­ன­லி­கொ­டவின் மனை­வியை அச்­சு­றுத்­தி­ய­தாக ஞான­சார தேரர் மீது பொலிஸில் முறைப்­பாடு செய்­யப்­பட்­டது.

இத­னை­விட அன்­றைய தினம் பெரும் தொகை­யான பிக்­கு­க­ளுடன்  ஞான­சார தேரர் ஹோமா­கம நீதிவான் நீதி­மன்றில் உள் நுழைந்து நீதிவான் ரங்க திசா­நா­யக்­கவை நோக்கி விரல் நீட்டி இரா­ணு­வத்­தி­னரை பழி தீர்க்கும் செயற்­பா­டு­க­ளுக்கு எதிர்ப்பு தெரி­விப்­ப­தாக தனது குரலை உயர்த்தி அச்­சு­றுத்தல் விடுத்­தி­ருந்தார்.

இதனால் அன்­றைய தினம் முழுதும் ஹோமா­கம நீதிவான் நீதி­மன்றின் நட­வ­டிக்­கைகள் பாதிக்­கப்­பட்­டன. இத­னை­ய­டுத்து  நீதி­மன்றை அவ­ம­தித்­தமை, அரச அதி­கா­ரியின் கட­மைக்கு இடை­யூறு ஏற்­ப­டுத்­தி­யமை மற்றும்  குறித்த வழக்கின் சாட்­சி­யா­ள­ரான எக்­னெ­லி­கொ­டவின் மனை­விக்கு அச்­சு­றுத்தல் விடுத்­தமை  ஆகிய குற்றச் சாட்­டுக்­களின் கீழ் அவரை கைது செய்­யு­மாறு  ஹோமா­கம நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டி­ருந்­தது.

இந் நிலையில் ஞான­சார தேரர், 2016 ஜன­வரி 26 ஆம் திகதி கைது செய்­யப்­பட்­ட­துடன் அவர் மீது குறித்த மூன்று குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்­பிலும் தனித்­த­னி­யாக வழக்கு தாக்கல் செய்­யப்­பட்­டது. இதில் நீதி­மன்றை அவ­ம­தித்­தமை தொடர்­பி­லான வழக்கு அப்­போ­தைய ஹோமா­கம நீதி­வானும் தற்­போது கொழும்பு மேல­திக நீதி­வா­னு­மா­கிய ரங்க திசா­நா­யக்­க­வினால் விசா­ர­ணைக்­காக மேன் முறை­யீட்டு நீதி­மன்­றுக்கு பார­ம­ளிக்­கப்ட்­டது. 

 இது தொடர்­பி­லான வழக்கின் சாட்சி விசா­ர­ணைகள் நேற்று மேன் முறை­யீட்டு நீதி­மன்றின் தலைமை நீதி­பதி எல்.டி.பி. தெஹி­தெ­னிய, ப்ரீத்தி பத்மன் சுர­சேன ஆகியோர் அடங்­கிய இருவர் கொண்ட நீதி­ப­திகள் குழாம் முன்­னி­லையில் இரண்­டா­வது நாளா­கவும் விசா­ர­ணைக்கு வந்­தது.  இதன்­போது  குற்றம் சுமத்­தப்­பட்­டுள்ள கல­கொட அத்தே ஞான­சார தேரரும் மன்றில் பிர­சன்­ன­மா­கி­யி­ருந்தார்.

இதன் போது நேற்று முன்­தினம் சாட்­சியம் அளித்த ஹோமா­கம முன்னாள் நீதி­வானும் தற்­போ­தைய கொழும்பு மேல­திக நீதி­வா­னு­மா­கிய ரங்க திஸா­ந­யக்­க­விடம்  ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி மனோ­கர டி சில்­வாவின் குறுக்கு கேள்­வி­களை தொடுத்தார்

அதன் பின்னர் மேல­திக சொலி­சிற்றர் ஜெனரால் ரொஹந்த அபே­சூ­ரி­யவின் கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளித்த வண்ணம், பிரதி சொலி­சிற்றர் ஜெனரல் திலீப பீரிஸ் சாட்­சியம் அளிக்க ஆரம்­பித்தார்.

இதன் போதே அவர் எக்­னெ­லி­கொட வழக்கு விசா­ரணை நிறை­வ­டைந்த பின்னர் நான் மன்றை விட்டு வெளி­யே­றினேன். இதன் போது என்­னிடம்  வந்த பொலிஸ் அதி­காரி ஒருவர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் மன்றில் சப்­த­மி­டு­வ­தாக கூறினார். இதனையடுத்து நான் உடனடியாக மீண்டும் நீதிமன்றுக்குள் சென்றேன் என சாட்சியம் அளித்தார்.

 இதன் போது சாட்சி விசாரணைகளை நேற்று நிறைவுக்கு கொன்டுவந்த நீதிபதிகள் மீளவும் இது தொடர்பிலான விசாரணைகளை எதிர்வரும் 26 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக கூறி ஒத்தி வைத்தனர்.

0 கருத்துரைகள்:

Post a comment