Header Ads



நல்லாட்சி அரசாங்கத்தில், கள்வர்கள் இருக்கின்றார்கள் - ரஞ்சன்

வெளிவிவகார அமைச்சர் ரவி கருணநாயக்க மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு என் மீது சுமத்தப்பட்டிருந்தால் பதவியை ராஜினாமா செய்திருப்பேன் என பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நல்லாட்சி அரசாங்கத்தில் கள்வர்கள் இருக்கின்றார்கள் என அம்பலப்படுத்திய போது சிலர் எனக்கு அழுத்தம் பிரயோகித்தனர். சிலர் விலகிச் செல்லுமாறும் கூறினார்கள்.

தற்போது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் யார் விலகிச் செல்லப் போகின்றார்கள் என்பது தொடர்பாக அவதானித்துக் கொண்டிருக்கின்றேன்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் விசாரணை ஆணைக்குழுக்கள் இருக்கவில்லை.

இந்த அரசாங்கம் சுயாதீனமான முறையில் விசாரணைகளை நடத்துகின்றது. கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் எவ்வளவு கள்வர்கள் இருந்தார்கள். எனினும் இந்த அரசாங்கம் சுயாதீனமாக முறைப்பாடு குறித்தும் விசாரணை நடத்துகின்றது.

இந்தக் குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் யார் விலகிக் கொள்கின்றார்கள் என நான் அவதானித்து கொண்டிருக்கின்றேன் என ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. No one (including P or PM) will leave.. except you!
    continue your fight! we appreciate it!

    ReplyDelete

Powered by Blogger.