Header Ads



முஸ்லிம்கள் விவகாரத்தில், தவறாக வழிநடத்தப்படும் தமிழ் மக்கள்

தமிழ்ப் புலிகளால் 1990 ஆம் ஆண்டு இரவோடு இரவாக அணிந்த துணியோடு வெளியேற்றப்பட்ட 72,000 க்கும் மேற்பட்ட முஸ்லீம்களில் முல்லைத்தீவு முஸ்லீம்களும் அடங்குவர். எக்குற்றமும் இழைக்காத அப்பாவி முஸ்லீம்கள் தமது மொழிச் சகோதரர்களான              L.T.T.E.  யினரால் இனச் சுத்திகரிப்பு செய்யப்பட்டு 27 வருட அல்லோலகல்லோலப்பட்ட அகதி வாழ்வின் பின், தமது பரந்த குடும்பத்தோடு ஆர்வத்தோடும் ஆசையோடும் தமது பாரம்பரிய தாயகத்து மண்ணை நோக்கிச் சென்ற போது அதற்கு அதே மொழிச் சகோதரர்களால் எதிர்ப்பும் தடையும் காட்டப்படுவதென்பது தமிழ் மொழி பேசும் அதே சிறுபான்மையைச் சேர்ந்த 'தற்போது தவறாக வழிநடத்தப்படும் தமிழ் குழுக்களுக்கு' எவ்விதத்திலும் ஒவ்வாத செயலாகும். இது தார்மீக தர்மத்திற்கும் மானிட மனச்சாட்சிக்கும் முரண்படுவதோடு எந்தவொரு மனித உள்ளம் படைத்தவனாலும் ஏற்றுக் கொள்ள முடியாத காரியமுமாகும். 

தர்மங்கள் அதர்மங்களாக உருவெடுக்கும் போது பாதிக்கப்படும் அப்பாவிகளும் ஆவேசம் கொள்ளத்தான் செய்வார்கள். வரலாற்றுத் தவறைச் செய்த, வடு மாறாத குற்றத்தைப் புரிந்த புலி இயக்கத் தமிழ் மக்கள் தற்போதாவது தங்கள் பாவத்தை தீர்த்துக் கொள்ள இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி வெளியேற்றப்பட்ட மொழிச் சகோதரர்களான முஸ்லீம்களை வரவழைத்து, அரவணைத்து, கடமை போற்றி அவர்களது பாரம்பரிய வாழ்விடங்களில் வாழ உதவி செய்வதானது அவர்களால் தப்பித்துக்கொள்ள முடியாத தார்மீகக் கடமையாகும்.

அன்பின் உடன் பிறவா தமிழ் நல்லுலகின் மொழிச் சகோதரர்களே! அன்று 1983 கறுப்பு ஜுலையை கொஞ்சம் அதிருப்தியுடனாவது உங்கள் ஞாபகத்திற்குக் கொண்டு வர விரும்புகிறேன். தெற்கில் நாடளாவிய ரீதியில் அப்பாவித் தமிழ் மக்கள் பேரினவாத இன வெறியர்களால் கொலை செய்யப்பட்ட போது – உடமைகள் நொறுக்கப்பட்டு தீயிடப்பட்டு துவம்சம் செய்யப்பட்ட போது - நிர்க்கதியாய் தவித்து நின்ற போது தம்முயிரைத் துச்சமாக நினைத்து உதவிக் கரம் நீட்டி தங்குவதற்கு இடம் கொடுத்து உணவிட்டு நீர் கொடுத்து பாதுகாத்தவர்கள் உங்கள் மொழிச் சகோதரர்களாகிய முஸ்லீம்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.

உங்களது உடமைகளும், வீடுகளும் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த போது கச்சை கட்டிக்கொண்டு நீரிறைத்து தீயணைத்து உதவிய கரங்கள் முஸ்லீம்களின் கரங்கள் தான் என்பதையும் நீங்கள் மறந்து விடாதீர்கள்.

தனிப்பட்ட முறையில் வெள்ளவத்தையிலும் நான் எனது வீட்டில் ஏறக்குறைய 10 தமிழ் சகோதரர்களையும் எனது மைத்துனியின் பக்கத்து வீட்டில் 17 தமிழ் சகோதர சகோதரிகளையும் ஏறக்குறைய 14 நாட்கள் இருப்பிடம் அளித்து  உணவளித்து தேவையேற்பட்ட போது உடையளித்து உதவிய முஸ்லீம் சகோதரர்களில் நாங்களும் ஒரு சிலர் என்பதை தாழ்மையோடு தெரிவித்துக் கொள்ளும் அதே நேரத்தில் ' இன்று வடபுல முஸ்லீம் மக்களின் குடியேற்றத்தை முல்லைத்தீவிலும் ஏனைய இடங்களிலும் கொடி பிடித்து நடைபோட்டு சுலோகங்கள் தூக்கி எதிர்ப்புத் தெரிவித்து  விரோதம் காட்டும் எனது அன்பின் தமிழ் நெஞ்சங்களே! இதை செய்ய உங்களால் எப்படி முடிந்தது? என்பதையும் கேட்டு வைக்க விரும்புகிறேன். நீங்கள் தவறாக வழிநட்டத்தப் படுகின்றிர்களா? என்பது புதிரான கேள்வியாகும்.   

அன்று தமழ் ஈழப் போராட்டத்தின் போது தமிழ் நாட்டில் ஒரு அட்டைக் கத்தியாவது உங்களிடம் இல்லாதிருந்த போது, காலஞ்சென்ற முஸ்லீம் பழணி – பாவாக்கள் தான் உங்களோடு கரம் கோர்த்து உதவினார்கள் என்பதை நீங்கள் எப்படி மறக்க முடியும். உலகப்; பொதுமறையாம் திருக்குறள் கூறும் அறம் எங்கே? தர்மத்தைப் போதிக்கும் பகவத் கீதை எங்கே? கண்ணகியின் சிலம்பில் நீதி கண்ட நீங்கள், தேர் கால் சோழன் தேரில் நிலைநாட்டிய நீதியை எங்கே மறைத்தீர்கள்? சமபலமற்ற நிலையில் 'இன்று போய் நாளை வா' என்ற யுத்த தர்மத்தை முழங்கிய இராமனின் தர்மநெறி எங்கே? 'உண்மையைத் தேடுங்கள்;;ளூ அது உங்களை விடுவிக்கும்' என்ற யேசுநாதரின் உண்மையை தேடி அறியும் பாதை எங்கே? தேவாரத்தின் தெய்வீக வழிகாட்டலை எங்கே மறந்தீர்கள்?  

முல்லைத்தீவில் 440 பேர்களாக உங்களால் 27 வருடத்திற்கு முன்பு வெளியேற்றப்பட்ட முஸ்லீம் மக்கள் 27 வருட துன்பியல் வாழ்வின் பின் 1400 ஆக எப்படி வரலாமென நீங்கள் கேட்கின்றீர்களே, 27 வருடம் என்பது ஒரு புதிய தலைமுறையின் உற்பத்திக் காலம் என்பதை நீங்கள் அறியாமலா இருக்கின்றீர்கள்? விரிவுபடுத்தபட்ட குடும்ப அங்கத்தவர்கள் தான் இந்த 1400 பேர்கள் என்பதை புத்தி ஜீவிகளான நீங்கள் அறிந்திருப்பீர்கள் என நம்புகிறோம்.

வடமாகாண அதிகார சபையால் ஆறு தடவைகள் முஸ்லீம்களின் மீள் குடியேற்றத்திற்கு நிலம் மீட்புச் செய்து தருவதாக உறுதியளிக்கப்பட்டதன் நிமித்தம், அதை நம்பி வந்த மக்களுக்கு, வீட்டுக்கும், ஊருக்கும், நாட்டிற்கும் நீதி சொல்லும் முதலமைச்சரின் நீதி வழுவா மானிட தர்மத்துக்கும், அதே போன்று தமிழ் பேசும் அனைத்து மக்களாலும் கௌரவமாகவும் கண்ணியமாகவும் மதிக்கப்பட்டு நீதி தேவன் என்று புகழப்படுகின்ற முதலமைச்சர் கெரளவ விக்ணேஸ்வரனின் புனிதமான மனச்சாட்சிக்கும் விடுகிறோம். 

2009 ஆம் ஆண்டு மே மாதம் யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட போது, புதிதாக அகதிகளாக்கப்பட்ட 300,000 தமிழ் மக்களை, ஏற்கனவே 1990ல் புலிகளால் அகதிகளாக்கப்பட்ட முஸ்லீம்களின் குடியேற்றத்தை ஒத்தி வைத்து புறம் தள்ளி விட்டு, தமிழ் அகதிகளுக்கு மீள்குடியேற்ற வசதிகளைச் செய்து கொடுத்தவர் முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்த அன்றைய மீள்குடியேற்ற அமைச்சராக இருந்த றிஸாட் பதியுதீன் தான் என்பதை உங்கள் மனக் கண் முன் நிறுத்த விரும்பகின்றேன்.

எஸ். சுபைர்தீன்
செயலாளர் நாயகம் - அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 

2 comments:

  1. அங்கே வாழ்ந்த முஸ்லிம்கலை யார் குடியேற வேண்டாம் என எதிர்த்தது , அனால் வடபகுதிக்கே சம்பந்தமில்லாத முஸ்லிம்களை குதேஎற்றுவதையே மக்கள் எதிர்கின்றனர், அதுவும் குடி எழும்பிய பிரதேசத்தில் குடியமருவதை விடுத்து காட்டை அழித்து நீண்டகால திட்டத்தில் குடிஎருவதியே மக்கள் எதிர்கின்றனர். அம்பாறை திருகோணமலை மட்டகளப்பு போன்ற இடங்களில் உள்ள தமிழ் மக்களின் கனிகளை அடாத்தாக பிடித்தும் , பிடித்துகொண்டிருக்கும் முஸ்லிம்களையும் கதையுங்கள் , மக்கள் மட்டுமந்தைகளல்ல, நீங்கள் மட்டும் புத்திசாலி என நினைக்க வேண்டாம் .

    ReplyDelete
    Replies
    1. இந்த தமிழ் முட்டாள்களுக்கு முறையாக விற்பனை செய்யப்பட்டு முஸ்லிம்கள் வாங்கிய காணிகளும் பிடிக்கப்பட்ட காணிகளாக தெரிந்தால் இவர்கள் இதயத்தில் பொறாமை குணம் ஓங்கி நிக்கின்றதே என்று பொருள்

      Delete

Powered by Blogger.