Header Ads



'முஸ்­லிம்கள் ஏமாந்து விட்­டார்கள்'

-ARA.Fareel-

மாகாண சபை­களின் தேர்­தல்கள் அனைத்­தையும் ஒரே தினத்தில் நடத்தும் வகையில் சட்­டத்தில் திருத்­தங்­களைக் கொண்டு வரு­வ­தற்கு அமைச்­ச­ரவை தீர்­மா­னித்­தி­ருப்­பது ஜன­நா­யக விரோத செய­லாகும். இதனை முஸ்லிம் முற்­போக்கு முன்­னணி கூட்டு எதிர்க்­கட்­சி­யுடன் சேர்ந்து எதிர்க்­கி­றது என முஸ்லிம் முற்­போக்கு முன்­ன­ணியின் செய­ல­தி­பரும் முன்னாள் அமைச்­ச­ரு­மான ஏ.எச்.எம். அஸ்வர் தெரி­வித்தார்.

அர­சாங்கம் மாகாண சபை­களின் தேர்­தல்கள் அனைத்­தையும் ஒரே தினத்தில் நடத்த  தீர்­மா­னித்­தி­ருப்­பது தொடர்பில் கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் இவ்­வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில்;

கிழக்கு, சப்­ர­க­முவ மற்றும் வட­மத்­திய ஆகிய மாகாண சபை­களின் பத­விக்­காலம் எதிர்­வரும் செப்­டெம்பர் மாத இறு­தியில் காலா­வ­தி­யா­க­வுள்­ளன. எனவே அம்­மா­காண சபை­களின் தேர்தல் முதலில் நடத்­தப்­பட வேண்டும். ஆனால் அர­சாங்கம் இம்­மா­காண சபை­களின் தேர்­தலைப் பிற்­போடத் திட்­ட­மிட்­டுள்­ளது.

முஸ்லிம் மக்கள் இந்த அர­சாங்­கத்தின் செயற்­பா­டு­களால் மிகவும் பாதிக்­கப்­பட்­டுள்­ளார்கள். பொது­வாக முஸ்­லிம்­களின் வர்த்­தகம் பாதிக்­கப்­பட்­டுள்­ளது. மாணிக்கக் கல் வர்த்­தகம் வீழ்ச்­சி­ய­டைந்­துள்­ளது. முஸ்­லிம்கள் அர­சாங்­கத்தின் பசப்பு வார்த்­தை­களை நம்பி ஏமாந்து விட்­டார்கள்.

உள்­ளூ­ராட்சி மன்­றத்­தேர்­தலும் மாகாண சபைத்­தேர்­தலும் தொடர்ந்தும் தாமதப்படுத்தப்பட்டால் அதற்கெதிராக போராட்டங்களை நடத்துவதற்கு நாம் ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளோம் என்றார்.

1 comment:

Powered by Blogger.