July 23, 2017

பள்ளிவாசல்கள் சில, ஆலயங்களை பின்பற்றுகின்றனவா..?

"5000 பவுன்ஸ். ?"

"எத்தனை பேர்...?எத்தனை பேர்... ?"

"மாஷா அல்லாஹ்... மாஷா அல்லாஹ்.."

ஒலி வாங்கியால் அதிர்ந்து கொண்டிருந்தது பள்ளி ஹோல்.

புனித ரமழானின் 27 ஆம் கிழமை இரவு அன்று  பள்ளி வாசல் நிதி சேகரிப்பு  நிகழ்ச்சி அது .

கையில் கொப்பியும் பேனையுமாக தொண்டர்கள் பணத்தை சேர்ப்பதில் மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்தார்கள் .

பள்ளி அதிர்ந்து கொண்டிருக்க எனக்கு முன்னால் இருந்த ஒருவர் தூங்குவதாக பாசாங்கு செய்ய இன்னொருவர் அதை கேட்டும் கேட்காமல் குர் ஆண் ஓதிக்கொண்டிருக்க ,இன்னொருவர் தனது மகனோடு பேசுவதாக பூச்சாண்டி காட்டிக்கொண்டிருக்க , இன்னொருவர் தலையை தொங்கப்போட்டுக்கொண்டு  
பள்ளியின் காப்பெட்டில் சித்திரம் கீறிக்கொண்டிருந்தார் ..

இது நடைபெற ஒரிரு நாட்களுக்கு முன்னர் 
எனது நண்பன் ஜோசப் மென்ஸா சொன்ன விடயம் தான் அப்போது ஞாபகம் வந்தது .

"முஹம்மட் இப்பொழுதெல்லாம் கிறிஸ்தவ ஆலயங்கள்  போகவே பிடிப்பில்லாமல் இருக்கின்றது . அங்கே பாஸ்டர் உரையாற்றும் போதெல்லாம் பணத்தை நன்கொடையாக கொடுப்பது சம்பந்தமான பைபிள் வசனங்களைத்தான் பேசுகின்றார்ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் முன்னால் சென்று பணத்தை பாஸ்டரிடம் கொடுக்கும் போதும் அவர் எமது பெயரை பகிரங்கமாக கூறி எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது என கூறுவார்  .குறைவாக பணம் கொடுத்தால் சமுக இமேஜ் போய் விடுமோ எங்கிற ஒரு 

மனப்போராட்டம்.  கடந்த இரு மாதம் கையில் கொஞ்சம் பண கஷ்டமாக இருந்ததால் இரு மாதங்கள் சேர்ச் செல்லாமல் தலை மறைவாகி இருந்தேன் . சூப்பர் மார்க்கெட்டில் எதிர்பாராத விதமாக சந்தித்த பாஸ்டர்,  என்னை சுகம் கூட விசாரிக்காமல் சேர்ச் நிதி உதவி குறித்து கேட்கிறார் " 
என்றான் வெறுப்பாக ....

இன்னொன்றும் அப்போது ஞாபகம் வந்தது பள்ளிவாசல் ஒன்றை கட்டுவதற்கான 
இன்னோர் ஊரில் இருந்து நிதி சேர்ப்புக்காக எமது ஊருக்கு வந்திருந்த ஓரு கூட்டத்தினர் ஜூம் ஆ தொழுகைக்கு முன் என்னையும் இன்னும் சிலரையும்  அழைத்து  தொழுகையின் பின்னால் நிதி சேகரிப்போம் 10 ஆயிரம் பவுன்சுகளை கேட்கும் போது உங்கள் கைகளை உயர்த்துங்கள் என்றனர் . அந்த அளவு பணம் என்னிடம் இல்லை என்ற போது ,நீங்கள் பணம் தர வேண்டிய அவசியம் இல்லை மற்றவரை ஊக்கப்படுத்த கையை உயர்த்துங்கள் என்றனர் .
பள்ளிகளுக்குள்ளேயே ஊக்கப்படுத்துதல் என்கிற பேரில் மற்றவர்களை நிர்பந்தப்படுத்துதல் என்கிற பொய்களா ..?

எடுப்பவர்களுக்கு பணம் சேர்ந்தால் சரி என்கிற மனநிலை . கொடுப்பவர்கள் சமுக நிர்ப்பந்தங்களால் கொடுக்கின்ற போது அல்லாஹ்வுக்காக மனம் விரும்பி கொடுக்கின்ற நிலை இல்லாமல் போய்விடுகிறது . கொடுப்பவர் இஹ்லாசை இழந்து விடுகிற துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டு விடுவார் .

அமைதியை தேடி ஆறுதலை தேடி தன் இறைவனை நாடி பள்ளிவாசல்களுக்கு வருகின்ற அடியார்கள் எல்லோருமே வசதி படைத்தவர்கள் இல்லை . ஆயிரம் பிரச்சினைகளை இறக்கி வைக்க வருபவனுக்கு ஆயிரத்தி ஓராவது பிரச்சனை கொடுப்பதை  வாடிக்கையாகி கொள்ளும் போது அவன் வீடுகளில் இறைவனை தேட முயற்சிப்பான் .

மொத்ததில் ஆலயங்களை போல பள்ளிகளும்  மக்களை மறைமுகமாக விரட்டாமல் இருந்தால்  சரி ... 


-முஹம்மது ராஜி .

1 கருத்துரைகள்:

Thats true some mosques release the name of the people with the amount they donated to mosque in the name of accountability and distrbute copies to everybody, which is distroying the intension of the person

Post a Comment