Header Ads



அல - ஜஸீராவை முடக்கும், சவூதி கோரிக்கைக்கு ஐ.நா. கண்டனம்

கத்தாரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் அல்-ஜஸீரா செய்தித் தொலைக்காட்சியை முடக்க வேண்டும் என்கிற சவூதி அரேபியாவின் கோரிக்கை கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இஸ்லாமிய தேசம், அல்-காய்தா உள்ளிட்ட பயங்கரவாத இயக்கங்களுக்கு கத்தார் துணை போவதாக சவூதி உள்ளிட்ட நாடுகள் குற்றம் சாட்டி அந்நாட்டுடனான உறவுகளைத் துண்டித்துக் கொள்வதாக அறிவித்தன. சர்வதேச உறவுகளைப் புதுப்பித்துக் கொள்ள 13 நிபந்தனைகளை அந்த நாடுகள் கத்தார் மீது விதித்தன. கத்தாரிலிருந்து செயல்பட்டு வரும் அல்-ஜஸீரா தொலைக்காட்சியை முடக்க வேண்டும் என்பது நிபந்தனைகளில் ஒன்றாகும். இந்த நிலையில், சவூதி மற்றும் கூட்டு நாடுகளின் நிபந்தனைக்கு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத் தலைவர் ùஸயீத் ராத் அல்-ஹுசேன் கண்டனம் தெரிவித்தார்.

அல்-ஜஸீரா தொலைக்காட்சி, அதனுடன் தொடர்புடைய பிற ஊடகங்களை முடக்குமாறு கத்தாருக்கு நிபந்தனை விதிக்கப்பட்டிருப்பது கவலை அளிப்பதாக உள்ளது. அந்த ஊடகங்களை நாம் பார்க்கிறோமா, அதன் செய்திகள் நமக்குப் பிடித்திருக்கிறதா, அதன் கருத்துகள் நமக்கு ஏற்புடையதாக இருக்கிறதா என்பது முக்கியமில்லை. ஆனால் அல்-ஜஸீராவின் செய்தி சேனல்கள் சட்டபூர்வமாகச் செயல்படுகின்றன.

அந்த சேனல்களுக்கு உலகெங்கும் லட்சக்கணக்கான பார்வையாளர்கள் உள்ளனர். அல்-ஜஸீரா மற்றும் அதன் துணை ஊடகங்களை மூட வேண்டும் என்ற சவூதி கூட்டு நாடுகளின் கோரிக்கை ஏற்க முடியாதது. அத்தகைய கோரிக்கை கருத்து சுதந்திரத்துக்கு விரோதமானது. சட்டம் மற்றும் ஜனநாயக மரபுகளுக்கு எதிரானது. கருத்து வேறுபாடு இருந்தால் வெளிப்படையாகப் பேசி, சட்டபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இந்த நியாயமற்ற கோரிக்கையை கத்தார் ஏற்றால், வருங்காலத்தில் பலம் வாய்ந்த எந்தக் குழுவும் நாடும் இதுபோன்ற கோரிக்கைகளை முன்வைத்து மிரட்டும் நிலை வழக்கமாகிவிடும். ஒரு நாட்டின் எந்த நடவடிக்கையும், அந்த நாட்டு மக்களின் மனித உரிமைகளை மட்டுமல்லாமல், பிற நாட்டினரின் மனித உரிமைகளையும் பறிக்கும் விதமாக இருக்கக் கூடாது என்றார் அவர். அல்-ஜஸீரா தொலைக்காட்சி சேனல், கத்தார் அரசு குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமான நிறுவனத்தினுடையது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.