Header Ads



குர்ஆனின் கூற்றை மெய்பித்த, ஜேர்மன் பல்கலைக்கழக ஆய்வு


சுலைமான் நபியின் வருகையை எறும்புகள் அறிந்து கொண்டதாக குர்ஆனில் காண முடிகிறது

அறிவு இல்லா எறும்புகள் எப்படி சுலைமான் நபியின் வருகையை அறிய முடியும் என சில மூடர்கள் வினா எழுப்புகின்றனர்

இதை அடிப்படையாக கொண்டு குர்ஆன் பொருத்த மற்ற கருத்துகளை கூறுவதாக சிலர்கள் கூறி வந்தனர்

ஆனால் இவர்களின் வாதங்களுக்கு மரண அடி தரும் வித த்தில் அண்மையில் வெளியான ஆய்வு ஒன்று அமைந்துள்ளது

இதோ அந்த ஆய்வை உங்கள் பார்வைக்கு தருகிறேன்

நில நடுக்கம் ஏற்படப் போவதை, சிறிய உயிரினமான, எறும்புகள் ஒரு நாளுக்கு முன்பே அறிந்து கொள்வதாக, ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

நில நடுக்கத்தை முன்கூட்டியே துல்லியமாக அறியக்கூடிய கருவி இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

ஜெர்மனியில் உள்ள டிஸ்பர்க் பல்கலைக்கழக, உயிர் அறிவியல் துறை ஆய்வாளர், கேப்ரியல் பார்பெரிக், தன்னுடைய சக ஆய்வாளருடன், 3 ஆண்டுகள் சிவப்பு நிற சிற்றெறும்புகள் குறித்து ஆய்வு செய்தார்.

இதற்காக, பிரத்யோக மென்பொருளில் உருவான, வீடியோ காமிரா துணையுடன் இந்த ஆய்வை மேற்கொண்டார்.

அவர் தனது ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது:

சாதாரண நாட்களில், பகல் நேரம் முழுவதும் இரை சேகரிப்பதில் ஈடுபடும் எறும்புகள், இரவு நேரங்களில் தன்னுடைய இடமான புற்றில் ஓய்வெடுக்கும். ஆனால், நில நடுக்கம் வருவதற்கு ஒரு நாளுக்கு முன்பு, இரவு நேரத்தில், புற்றில் இருந்து வெளியேறி விடுகின்றன. நிலநடுக்கம் ஏற்பட்ட பின்பு, சாதாரண நிலைக்கு திரும்பி விடுகின்றன. நிலநடுக்க நேரத்தில் பூமிக்கடியில் தோன்றும் வாயுக்கள் மற்றும் இயக்கங்கள் காரணமாக, எறும்புகள்

வெளியேறுகின்றன. இவ்வாறு ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

எறும்புகள் நிலத்தில் ஏர்படும் அதிர்வுர்களை உணர்ந்து கொண்டு அதர்கு ஏர்ப்ப தங்களது பாது காப்புகளை அமைத்து கொள்வதாக இந்த ஆய்வறிக்கை தெளிவு படுத்துகிறது

மூன்று ஆண்டுகள் தொடர்ந்து நடைபெற்ற ஆய்வில் கண்டறிய பட்டிருக்கும் இந்த உண்மையை 1400 ஆண்டுகளுக்கு முன்பே எழுதவும் படிக்கவும்தெரியாத முஹம்மது நபி அவர்களின் உதடுகளின் மூலம் இறைவன் கூறிய வார்த்தைகளில் சொல்ல பட்டு விட்டது

எந்த ஆய்வுகளும் அரும்பாத காலத்தில் ஆய்வுகளின் கண்கள் இறுக கட்ட பட்டிருந்த காலத்தில் எழுதவும் படிக்கவும் தெரியாத ஒரு மனிதரால் அதை எப்படி சொல்ல முடிந்தது

அப்படியானால் அது அவரின் வார்த்தை அல்ல எறும்பையும் அதன் இயக்கத்தையும் தெழிவாக அறிந்துள்ள இறைவனின் சொல்லா தான் அது இருக்க முடியும் என்பதை நாம் தெழிவாக அறிய முடியும்

இனி எறும்பு பற்றி இறைவன் கூறுவதை பார்ப்போம்
﴿حَتَّى إِذَا أَتَوْا عَلَى وَادِي النَّمْلِ قَالَتْ نَمْلَةٌ يَا أَيُّهَا النَّمْلُ ادْخُلُوا مَسَاكِنَكُمْ لَا يَحْطِمَنَّكُمْ سُلَيْمَانُ وَجُنُودُهُ وَهُمْ لَا يَشْعُرُونَ﴾ [النمل: 18]
அவர்கள் எறும்பு புற்றின் அருகே வந்த போது எறும்புகளே ! உங்கள் குடியிருப்புகுள் நுழைந்து விடுங்கள் சுலைமானும் அவரது படையினரும் அறியாத நிலையில் உங்களை மிதித்து விட கூடாது என்று ஒரு எறும்பு கூறியது 
அத்தியாயம் 27 வசனம் 18

இதில் எறும்புகள் சுலைமான் நபி மற்றும் அவரது படைகள் நிலத்தில் அதிர்வுகளை ஏர்படுத்தி கொண்டு வருவதை உணர்ந்து கொண்டு தங்களுக்கு உரிய பாது காப்பு ஏர்பாடுகளை செய்து கொள்வதை அறிய முடிகிறது

இப்படி குர்ஆன் சர்வ சாதரணமாக கூறிய விசயத்தை தான் மூன்று ஆண்டுகளாக பெரும் பொருள் செலவில் நடை பெற்ற ஆய்வில் இன்று கண்டிய பட்டிருக்கிறது

அப்படியானால் திருமறை குர்ஆன் இறைவனின் வார்த்தைகள் தான் என்பதை அறுதியிட்டு உறுதி கூறும் வசனங்களில் ஒன்றாக இந்த வசனமும்

No comments

Powered by Blogger.