Header Ads



சவூதி விமானங்களுக்கான லேப்டாப், தடையை நீக்கியது அமெரிக்கா

செளதி அரேபியாவில் இருந்து அமெரிக்காவிற்கு செல்லும் நேரடி விமானங்களின் உள்ளே லேப்டாப் எடுத்துச்செல்ல கூடாது விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளதாக செளதி அரேபியா ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவிற்கு விமான சேவையை வழங்கி வரும் இரண்டு மைய விமான நிலையங்கள், அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையிடம் இருந்து இதற்கான விலக்கினை பெற்றுள்ளதாக செளதி அரேபியா ஏர்லைன்ஸ் கூறியுள்ளது.

இத்தடைக்கு விலக்கு அளிக்கப்பட்ட 10 விமான நிலையங்களில், ரியாத்தில் உள்ள `கிங் காலித் விமான நிலையம்` கடைசியாக விலக்கு பெற்றுள்ளது.

கடந்த மார்ச் மாதம், எட்டு முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளிலிருந்து வரும் நேரடி விமானங்களின் உள்ளே லேப்டாப் மற்றும் மின்னணு சாதனங்களை எடுத்து அமெரிக்கா தடை விதித்தது.

செளதி விமான நிலையங்களில் புதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் கடைபிடிப்பதை அமெரிக்க அதிகாரிகள் உறுதிப்படுத்துவார்கள்.

ஜெட்டாவில் உள்ள `கிங் அப்துல் அஜீஸ் சர்வதேச விமான நிலையம், ரியாத்தில் உள்ள `கிங் காலித் சர்வதேச விமான நிலையம்` ஆகிய இரண்டு விமான நிலையங்களும் பரிசோதிக்கப்பட்ட நிலையில், விமானங்களின் உள்ளே லேப்டாப் எடுத்து செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

செளதி அரேபியாவிலிருந்து அமெரிக்காவுக்கு நேரடி விமானங்கள் செல்லும் வசதி இந்த இரண்டு விமான நிலையங்களில் உள்ளன.

செளதியா என்று அறியப்படும் செளதி அரேபியா ஏர்லைன்ஸ் மட்டுமே, செளதியில் இருந்து அமெரிக்காவுக்கு நேரடி விமான சேவையை வழங்குகிறது.

விமானங்களின் உள்ளே லேப்டாப் எடுத்துச் செல்லக் கூடாது என்ற தடை துபாய் நாட்டின் எமிரேட்ஸ் மற்றும் துருக்கிய ஏர்லைன்ஸ் நிறுவனங்களுக்கு இந்த மாத தொடக்கத்தில் விலக்கப்பட்டது என்று அந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

No comments

Powered by Blogger.