Header Ads



'ஞானசாரருக்கு பயந்து பொலி­ஸாரும், அதி­கா­ரி­களும் உறைந்துபோய் நின்றனர்'

-MFM.Fazeer

கல­கொட அத்தே ஞான­சார தேரர் அன்று ஹோமா­கம நீதிவான் நீதி­மன்றில் நடந்து கொண்ட முறை­மை­யா­னது வன்­மு­றையை வெளிப்­ப­டுத்­தி­யது. அவ­ரது நட­வ­டிக்­கைகள் கடும் பயத்தை ஏற்­ப­டுத்­தி­யது. ஞான­சார தேரர் நீதி­மன்றை அவ­ம­திக்கும் வகையில் இவ்­வாறு தொடர்ச்­சி­யாக நடந்து கொண்ட போதும், அவரைக் கைது செய்­வ­தற்­கான போது­மான கால அவ­காசம் இருந்த நிலை­யிலும், பொலி­ஸாரும் சிறைச்­சாலை அதி­கா­ரி­களும் பயத்தில் உறைந்து போய் கை கட்டிப் பார்த்­தி­ருந்­தனர். 

இவ்­வச்­சு­றுத்தல் கார­ண­மாக வழக்­கு­களை ஒத்தி வைத்­து­விட்டு நீதிவான் ஆச­னத்தில் இருந்து செல்ல நீதிவான் முயன்ற போதே  நான் தலை­யிட்டு, வழக்­கு­களை ஒத்தி வைக்க வேண்டாம் எனவும், ஞான­சார தேர­ருக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­கு­மாறும் மன்றை கோரினேன். இதன்­போதே என்னை 'பேடித்­த­ன­மான அரச சட்­ட­வாதி' என அவர் திட்­டினார் என  பிரதி சொலி­சிற்றர் ஜெனரல் திலீப பீரிஸ் நேற்று  மேன் முறை­யீட்டு நீதி­மன்றில் சாட்­சியம் அளித்தார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் 25 ஆம் திகதி ஊட­க­வி­ய­லாளர் பிரகீத் எக்­னெ­லி­கொட காணாமலாக்­கப்­பட்­டமை குறித்த வழக்கு நீதி­மன்­றத்தில் நடந்த போது, ஞான­சார தேரர் ஹோமா­கம நீதிவான் நீதி­மன்­றுக்குள் அத்துமீறி­யி­ருந்தார். இதன்­போது நீதி­மன்ற வளா­கத்தில் வைத்து பிரசாத் எக்­னெ­லி­கொ­டவின் மனை­வியை அச்­சு­றுத்­தி­ய­தாக ஞான­சார தேரர் மீது பொலிஸில் முறைப்­பாடு செய்­யப்­பட்­டது. இத­னை­விட அன்­றைய தினம் பெருந் தொகை­யான பிக்­கு­க­ளுடன் ஞான­சார தேரர் ஹோமா­கம நீதிவான் நீதி­மன்றில் உள் நுழைந்து நீதிவான் ரங்க திசா­நா­யக்­கவை நோக்கி விரல் நீட்டி இரா­ணு­வத்­தி­னரை பழி தீர்க்கும் செயற்­பா­டு­க­ளுக்கு எதிர்ப்பு தெரி­விப்­ப­தாக தனது குரலை உயர்த்தி அச்­சு­றுத்தல் விடுத்­தி­ருந்தார். 

இதனால் அன்­றைய தினம் முழுதும் ஹோமா­கம நீதிவான் நீதி­மன்றின் நட­வ­டிக்­கைகள் பாதிக்­கப்­பட்­டன. இத­னை­ய­டுத்து  நீதி­மன்றை அவ­ம­தித்­தமை, அரச அதி­கா­ரியின் கட­மைக்கு இடை­யூறு ஏற்­ப­டுத்­தி­யமை மற்றும் குறித்த வழக்கின் சாட்­சி­யா­ள­ரான எக்­னெ­லி­கொ­டவின் மனை­விக்கு அச்­சு­றுத்தல் விடுத்­தமை ஆகிய குற்றச்சாட்­டு­களின் கீழ் அவரை கைது செய்­யு­மாறு ஹோமா­கம நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டி­ருந்­தது.

இந் நிலையில் ஞான­சார தேரர், 2016 ஜன­வரி 26 ஆம் திகதி கைது செய்­யப்­பட்­ட­துடன் அவர் மீது குறித்த மூன்று குற்­றச்­சாட்­டுகள் தொடர்­பிலும் தனித்­த­னி­யாக வழக்குத் தாக்கல் செய்­யப்­பட்­டது. இதில் நீதி­மன்றை அவ­ம­தித்­தமை தொடர்­பி­லான வழக்கு அப்­போ­தைய ஹோமா­கம நீதி­வானும் தற்­போது கொழும்பு மேல­திக நீதி­வா­னு­மா­கிய ரங்க திசா­நா­யக்­க­வினால் விசா­ர­ணைக்­காக மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றுக்கு பாரப்­ப­டுத்­தப்­பட்­டது. 

இது தொடர்­பி­லான வழக்கின் சாட்சி விசா­ர­ணைகள் நேற்று மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்றின் தலைமை நீதி­பதி எல்.டி.பி. தெஹி­தெ­னிய, ப்ரீத்தி பத்மன் சூர­சேன ஆகியோர் அடங்­கிய இருவர் கொண்ட நீதி­ப­திகள் குழாம் முன்­னி­லையில் மீண்டும் விசா­ர­ணைக்கு வந்­தது. இதன்­போது குற்றம் சுமத்­தப்­பட்­டுள்ள கல­கொட அத்தே ஞான­சார தேரரும் மன்றில் பிர­சன்­ன­மா­கி­யி­ருந்தார். அவர் சார்பில் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி மனோ­கர டி சில்வா ஆஜ­ரா­கி­யி­ருந்­த­துடன் சிரேஷ்ட பிரதி சொலி­சிற்றர் ஜெனரல் ரொஹந்த அபே­சூ­ரி­யவின் கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளித்த வண்ணம் பிரதி சொலி­சிற்றர் ஜெனரல் திலீப பீரிஸ் சாட்­சியம் வழங்­கினார். இதன்­போதே அவர் இதனைத் தெரி­வித்தார்.

ஞான­சார தேரரின் நட­வ­டிக்கை தொடர்பில் நான் பொலி­ஸா­ருக்கு வாக்­கு­மூலம் அளித்த நிலையில் சட்ட மா அதி­ப­ருக்கும் முறைப்­பாடு அளித்­தி­ருந்தேன். உண்­மையில் ஞான­சார தேரர் குரலை உயர்த்தி நீதி­வா­னுக்கு கட்­டளை இடும் தொனியில் ' இது எந்த வகை­யிலும் ஏற்றுக்­கொள்ள முடி­யாத கறுப்பு, வெள்­ளை­யர்­களின் சட்டம். இத­னூ­டாக இரா­ணு­வத்­தினர் தண்­டிக்­கப்­ப­டு­கின்­றார்கள். இதனை நாம் பாரா­ளு­மன்றம் சென்­றேனும் மாற்­றுவோம் என கோஷ­மிட்டார். நீதிவான் ஞான­சார தேர­ருக்கு விடயம் தொடர்பில் விளக்­க­ம­ளித்த போதும் அவர் அதனை ஏற்­றுக்­கொள்­ள­வில்லை.

ஒரு தேரர் என்ற ரீதியில் மதிப்­ப­ளித்தே தான் பேசிக்­கொண்­டி­ருப்­ப­தாக நீதிவான் கூறி­ய­போதும் தொடர்ந்தும் ஞான­சார தேரர் அச்­சு­றுத்தும் வண்ணம் பேசிக்­கொண்­டி­ருந்தார். 

அவர் நடந்து கொண்ட முறை­மை­யா­னது  வன்­மு­றையை வெளிப்­ப­டுத்­தி­யது. அவ­ரது நட­வ­டிக்­கைகள் கடும் பயத்தை ஏற்­ப­டுத்­தி­யது. ஞான­சார தேரர் நீதி­மன்றை அவ­ம­திக்கும் வகையில் இவ்­வாறு தொடர்ச்­சி­யாக நடந்­து­கொண்ட போதும், அவரை கைது செய்­வ­தற்­கான போது­மான கால அவ­காசம் இருந்த நிலை­யிலும், பொலி­ஸாரும் சிறைச்­சாலை அதி­கா­ரி­களும் பயத்தில் உறைந்து போய் கை கட்டி பார்த்திருந்தனர். 

இவ்வச்சுறுத்தல் காரணமாக வழக்குகளை ஒத்தி வைத்துவிட்டு நீதிவான் ஆசனத்தில் இருந்து செல்ல நீதிவான் முயன்றபோதே நான் தலையிட்டு, வழக்குகளை ஒத்தி வைக்க வேண்டாம் எனவும், ஞானசார தேரருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறும் மன்றைக் கோரினேன். இதன்போதே என்னை 'பேடித்தனமான அரச சட்டவாதி' என அவர் திட்டினார் என சாட்சியம் வழங்கினார். இது தொடர்பிலான அடுத்த கட்ட விசாரணை எதிர்வரும் ஆகஸ்ட் 2 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

No comments

Powered by Blogger.