Header Ads



கொச்­சிக்­க­டையில் நகை கடைக்கு, குடும்­ப­மாக சென்று திரு­டிய குழு­

 (எம்.இஸட்.ஷாஜஹான்)

கொச்­சிக்­கடை பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட நகை விற்­பனை நிலையம்  ஒன்றில் ஆறு இலட்சம் ரூபா­வுக்கு மேல் பெறு­ம­தி­யான  13 பவுண்  தங்க நகை­களை கொள்­வ­னவு செய்­வது போன்று அங்கு வருகை தந்த  நால்வர் அடங்­கிய குழு  திருடிச்   சென்­றுள்­ளது.

சம்­பவம் இடம்­பெற்ற அன்று குறித்த நகைக் கடைக்கு ஆண் ஒரு­வரும்  மூன்று பெண்­களும் நகைகள் வாங்­கு­வது போன்று வந்­துள்­ளனர். அவர்­களில் 13  மற்றும் 18 வய­தான இரு பெண்கள் அடங்­கி­யி­ருந்­தனர்.  

இவர்­க­ளுடன் வருகை தந்த ஆண் கடையில் இருந்த நகைப் பெட்­டியை திருடி தான் அணிந்­தி­ருந்த சாரத்­துக்குள் மறைத்து வைக்கும் காட்சி அங்கு பொருத்­தப்­பட்­டுள்ள கண்­கா­ணிப்பு  கெம­ராவில்  தெளி­வாக பதி­வா­கி­யுள்­ளது.

சம்­பவம் இடம்­பெற்ற வெள்­ளிக்­கி­ழமை இரவு கடை­யி­லி­ருந்த நகை­களின் இருப்பை உரி­மை­யாளர் பார்த்த போதே நகைகள்  திரு­டப்­பட்ட விடயம் தெரிய வந்­துள்­ளது.

இவர்கள் அனை­வரும் ஒரே குடும்­பத்தைச் சேர்ந்­த­வர்கள் போன்றே காணப்­பட்­டனர். அவர்­களில் பெண் நகை­களை வாங்­கு­வது போன்று அவற்றைப் பார்­வை­யிட்­டுள்ளார். அவர்­க­ளுடன் வந்த ஆண் இதன்­போது நகைகள் அடங்­கிய பெட்­டியைத் திருடி தான் அணிந்து வந்த சாரத்­துக்குள் மறைத்து வைத்­துள்ளார்.  

அவர்­க­ளுடன் கூட வந்த இரு சிறு­மி­யர்­களும் இதற்கு ஒத்­து­ழைப்பு வழங்­கு­வ­தற்­காக திரு­டு­வதை காணாமல் இருக்கும் வகையில் சூழ்ந்து நின்­றுள்­ளனர்.  

பின்னர் அவர்கள் எந்­த­வித நகை­க­ளையும்  கொள்­வ­னவு செய்­யாமல் மாலை 5.12 மணி­ய­ளவில்  கடை­யி­லி­ருந்து வெளி­யே­றி­யுள்­ளனர். இவைகள் கடையில் பொருத்­தப்­பட்­டுள்ள சி.சி.­ரி.வி. கம­ராவில் தெளி­வாக பதி­வா­கி­யுள்­ளது.  

இந்தச் சம்­பவம் தொடர்­பாக கொச்­சிக்­கடை பொலிஸ் நிலை­யத்தில் முறைப்பாடு செய்துள்ளோம் என்றார். சம்பவம் தொடர்பாக கொச்சிக்கடை பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.

1 comment:

Powered by Blogger.