Header Ads



பௌசியை பிரதமராக பரிந்துரைத்து, மைத்திரி அனுப்பிய கடிதம் - கண்டுகொள்ளாத மஹிந்த

தேர்தலுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியதாக ராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா நேற்று தகவல் வெளியிட்டுள்ளார்.

பதுளையில் உள்ள ஊவா மாகாண சபை கேட்போர் கூடத்தில் நடந்த கூட்டத்தில் அவர் இதனை கூறியுள்ளார்.

ஜனாதிபதி எழுதிய கடிதம் குறித்து மேலும் கருத்து வெளியிட்டு டிலான் பெரேரா, தனக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றி பெற முடியும். 

ஏதோ ஒரு விதத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைந்தால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசாங்கம் ஆட்சியமைக்க வேண்டுமாயின், 

தான் குறிப்பிட்டுள்ள 6 பேரில் ஒருவரை பிரதமராக நியமிக்க முன்னாள் ஜனாதிபதி உறுதியளித்தால் அவர்களில் ஒருவரை பிரதமராக நியமிப்பேன் எனவும் ஜனாதிபதி கடிதத்தில் தெரிவித்திருந்தார்.

அதில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் பெயர் முதலில் இருந்தது. அனுர பிரியதர்ஷன யாப்பா, ஜோன் செனவிரத்ன, சுசில் பிரேமஜயந்த, அதாவுத செனவிரத்ன, பௌசி ஆகியோரின் பெயர்கள் குறிப்பிட்டு ஜனாதிபதி, முன்னாள் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியிருந்தார்.

முன்னாள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டாலும் அவரை தான் தேர்தலில் தோற்கடித்ததால், தன்னால் பிரதமராக நியமிக்க முடியாது எனவும் தான் பரிந்துரைத்துள்ள 6 பேரில் ஒருவரை ஆதரிப்பதாக உறுதியளித்தால், தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைந்தால், 

சில நாடாளுமன்ற உறுப்பினர்களை இணைத்து சுதந்திரக் கட்சியின் அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்துவேன் என ஜனாதிபதி அதில் குறிப்பிட்டிருந்தார்.

அதற்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச விருப்பம் தெரிவிக்கவில்லை எனவும் டிலான் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

2 comments:

  1. அப்போ இவ்வாறு கடிதம் எழுதியவர் மனதில் நினைத்து இருந்தவர் எவ்வாறு றணிலோடு ஒப்பந்தம் போட்டார்,அதேவேளை இவரின் கூற்றுப்படி மஹிந்த செரி என்று சொல்லி வந்திருந்தால் றணில் றயில் றோட்டுக்கா போவது,

    ReplyDelete
  2. பிரதமராக்க பரிந்துரைத்த பௌசி தற்போது ஒரு ராஜாங்க அமைச்சர்...

    ReplyDelete

Powered by Blogger.