Header Ads



மிக விரைவில் இவ்வாட்சி கவிழும் - ஜோன்ஸ்டன்

இலங்கையில் பல வருடங்கள் முன்பு திட்டமிடப்பட்ட சர்வதேசத்தின் நிகழ்ச்சி நிரல்கள் அரங்கேறுவதை இலங்கையில் நடைபெறும் பல விடயங்கள் மூலம் அறிந்துகொள்ளக் கூடியதாக உள்ளதாக பாராளுமன்றஉறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

நேற்று கொழும்பு நீதி மன்றத்தில் அவருக்கு எதிரான வழக்கு விசாரணை முடிவடைந்த பின் ஊடகங்களுக்குகருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கருத்து தெரிவித்தார். 

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்..

இலங்கையில் நடைபெறும் சில விடயங்களை அவதானிக்கும் போது அவைகளில் சர்வதேச நிகழ்ச்சி நிரல்கள்துல்லியாக தென்படுகிறது.இலங்கை பாதுகாப்பு பிரிவின் முக்கிய நபர்கள்  சிலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.அண்மையில் கைது செய்யப்பட்டிருந்த குறித்த பாதுகாப்பு பிரிவை சேர்ந்தவர் தமிழ்மக்களை விசாரணைக்காக அழைத்து சென்று காணாமல் செய்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்டிருந்தார். இது சர்வதேசத்தின் நிகழ்ச்சி நிரல்களின் ஆரம்ப படி என்பதை இலங்கை சமூகம் அறிந்து கொள்ள வேண்டும்.

இதனை தொடரவிட்டால் இலங்கையில் தமிழ் மக்களை தவிர ஏனைய மக்களின் நிலை மிகவும் பரிதாபகரமானநிலைக்கு சென்றுவிடலாம். இலங்கை  நாட்டில் கொடிய யுத்தத்தை ஒழிக்க உயிரை துச்சமாய் மதித்த இன்னும் பலமுக்கிய நபர்கள் கைது செய்யப்படலாம். இதில் இலங்கையின் புலனாய்வு பிரிவுக்கு பலம் சேர்க்கின்ற பல முக்கியபுலனாய்வாளர்களும் உள்ளடங்குவதாக அறிய முடிகிறது.அது மாத்திரமன்றி  தமிழ் மக்கள் தங்களது முதன்மைகோரிக்கைகளில் ஒன்றாக தூக்கி பிடித்துள்ள  வடக்கு, கிழக்கை இணைத்து இதர சிறுபான்மை மீது அடிமைசாசனம் எழுதப்பட்டுவிடலாம்.

கூட்டு எதிர்க்கட்சி ஆதரவு நபர்கள் மீது இவ்வரசின் திட்டமிட்ட பழிவாங்கல் செயற்பாடுகள் பலஇடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. இவற்றுக்கெல்லாம் கூட்டு எதிர்க்கட்சியை சேர்ந்த யாருமே சிறுதும் அஞ்சப்போவதில்லை. எம்மோடு பதினெட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் இணையவுள்ளதாக செய்திகள் பரவிவருகின்றன.எங்களோடு குறித்த எண்ணிக்கையிலும் அதிகமான பாராளுமன்ற உறுப்பினர்கள் இணையதயாராகவுள்ளனர்.மிக விரைவில் இவ்வாட்சி கவிழும் என்பதில் எந்தவிதமான சந்தேகமுமில்லை.

தற்போது சு.க மற்றும் ஐ.தே.க களுக்கிடையில் ஒப்பந்த காலம் நிறைவடையவுள்ளது. எங்களுடைய சு.காவைசேர்ந்தவர்க்கள் ஐக்கிய தேசிய கட்சியுடன் தொடர்ந்தும் பயணிக்க முடியாதென்ற உறுதியான முடிவில் உள்ளனர். அண்மையில் ஐக்கிய தேசிய கட்சியின் உயர்பீடத்திலும் குழப்பம் நிகழ்ந்துள்ளதாக அறிய முடிகிறது. இவைகள் இன்றைய ஆட்சியை கவிழ்க்க எங்களுக்கு மிகவும் சாதகமாக அமைந்துள்ளன. நாங்கள் மிகப் பலமான திட்டங்களோடு இவ்வாட்சியை கவிழ்க்கும் எண்ணத்தில் இருந்தோம்.அந்த திட்டங்களை தீட்டிய நேரங்களை மனைவி, மக்களோடு செலவு செய்திருக்கலாம்.அந்தளவு இன்றைய ஆட்சி கவிழ்ப்பு எங்களுக்கு சாதகாமாகஅமைந்துள்ளது என அவர் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.