July 17, 2017

முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ராக யூத பாணி­யிலே, பொது ­ப­ல­சேனா இயங்குகி­றது - பத்­தே­கம சமித தேர­ர்

சிங்­க­ளத்தில் : மஹேஷ் மல­வர ஆரச்சி
தமிழில்: ஏ.எல்.எம்.சத்தார். 

இன­வாதத் தூண்­டு­தலின் விளை­வாக அண்மைக் காலங்­களில் ஒரு­சில அசம்­பா­வி­தங்கள் இடம்­பெற்று வந்­துள்­ளன. இவற்­றுக்கு பொதுபல­சேனா மீதே விரல் நீட்­டப்­பட்­டுள்­ளது. மற்றும் சில தரப்­புகள் வேறு வித­மான கருத்­து­க­ளையும் முன்­வைத்­தன. மேற்­படி விட­யங்கள் தொடர்­பா­கவும் தற்­போ­தைய அர­சியல் நில­வ­ரங்கள் பற்­றியும் தென் மாகாண சபை உறுப்­பினர் பத்­தே­கம சமித தேர­ருடன் ‘அத’ சிங்­கள மொழி ஊடகம் மேற்­கொண்ட பேட்­டியின் தமி­ழாக்கம் இங்கு தரப்­பட்­டுள்­ளது.

அண்­மையில் மத­வாத மோதல்கள் சில தலை­தூக்­கின. இவற்­றுக்குப் பலரும் பொது­ப­ல­சேனா மீது குற்றம் சுமத்­தினர். இது குறித்து உங்கள் கருத்­தென்ன?

பதில்: இந்த அரசு மறை­மு­க­மாக அடிப்­படை வாதி­க­ளுக்கு வாய்ப்­ப­ளித்­தி­ருப்­ப­தா­கவே எங்­க­ளுக்குத் தோன்­று­கி­றது. இந்த அரசு செய­லி­ழந்து செயற்படு­வதை இந்­நாட்டு சிங்­கள பௌத்­தர்கள், தமி­ழர்கள், முஸ்­லிம்கள், ஆகிய சமூ­கத்­தி­னரில் பெரும்­பா­லோனோர் உணர்ந்­துள்­ளனர். இது எல்லா அடிப்­படை வாதி­க­ளுக்கும் வாய்ப்­பாக அமைந்து விட்­டது. சிங்­கள பௌத்த சக்தி மஹிந்த ராஜபக் ஷவின் பிடியில் இருக்­கி­றது. இதனை செயற்­ப­டுத்தும் ஓர் ஊட­க­மாக பொது­ப­ல­சேனா அமைப்பு இயக்­கப்­பட்டுக் கொண்­டி­ருக்­கி­றது. 

 பொது­பல சேனா அமைப்பின் ஞான­சார தேரர் குறித்து உங்கள் நிலைப்­பாடு என்ன?
பதில்: அவர் குறித்து எப்­போதும் என் மன­திலே விமர்­சனம் எழுந்த வண்­ணமே உள்­ளது. அவர் மீதான சந்­தே­கமும் எப்­போதும் என் மனதில் ஊச­லா­டவே செய்­கி­றது. நாம் பல்­வேறு இன்­னல்­க­ளுக்கும் முகம் கொடுத்து கட்­டி­யெ­ழுப்­பி­யுள்ள சமா­தான சூழ்­நிலை வன்­மு­றையைத் தோற்­று­விப்­பதன் மூலம் மீண்டும் சின்­னா­பின்­ன­மா­கி­விடும். உலகம் முழு­வதும் சர்­வ­தேச யூத பயங்­க­ர­வாத சக்­திகள் செயற்­பட்­டுக்­கொண்­டி­ருக்­கின்­றன. எனவே பொது­ப­ல­சேனா அமைப்பும் இன்று தெரிந்தோ அல்­லது தெரி­யா­மலோ முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ராக அதே யூத பாணி­யிலே இயங்கிக் கொண்­டி­ருக்­கி­றது. 

பொது­ப­ல­சேனா அமைப்பு மஹிந்த  ராஜபக் இஷவின் காலத்­திலும் இயங்­கி­யது தானே?
பதில்: ஆம், இயங்­கி­யதுதான். அதனால் தானே பேரு­வளை சம்­பவம் இடம்­பெற்­றது. மஹிந்த  ராஜபக் ஷவை தோல்­வி­ய­டையச் செய்­வ­தற்­காக மேற்­கொள்­ளப்­பட்ட சதி முயற்­சி­யொன்­றா­கவே அதனை நாம் அன்று நோக்­கினோம். சம்­பந்­தப்­பட்ட பிக்­கு­களைத் தண்­டிப்­ப­தற்குக் கூட மஹிந்த முன்­வ­ர­வில்லை. ஆனால் பிக்­குகள் என்று பாராமல் சட்டம் அனை­வ­ருக்கும் சமம் என்ற ரீதியில் செய­லாற்றும் படி நாம் அன்று மஹிந்­தவைக் கேட்டுக் கொண்டோம். அதனை அவர் அமுல் நடத்தத் தவ­றி­ய­மையின் பிர­தி­ப­ல­னாக அவ­ருக்குத் தேவை­யான வாக்­கு­களை அவர் இழந்தார். 

நன்றி – 'அத' பத்திரிகை

2 கருத்துரைகள்:

உண்மை உண்மை உண்மை தைரியமான உங்களுக்கு நாங்கள் நன்றி சொல்கிறேன் எங்கள் சமுதாயம் சார்பில்

ONE AND ONLY BUDDHIST BIKKU TO CALL A SPADE A SPADE.

Post a Comment