Header Ads



இலங்கை அர­சு, இஸ்­ரே­லுக்கு ஆத­ரவு - ஹிஸ்­புல்லா கவ­லை­

-ARA.Fareel-

இலங்கை அர­சாங்கம் ஐக்­கிய நாடுகள் சபையில் பலஸ்­தீனம் தொடர்­பான விவ­கா­ரத்தில் பலஸ்­தீன மக்­க­ளுக்கு எதி­ரா­கவும், இஸ்­ரே­லி­யர்­க­ளுக்கு ஆத­ர­வா­கவும் செயற்­பட்­டமை முஸ்­லிம்­களை மிகவும் கவ­லை­ய­டையச் செய்­துள்­ளது. 

ஐக்­கிய நாடுகள் சபையில் நடை­பெற்ற இரு வாக்­கெ­டுப்­பு­களின் போதும் இலங்கை பலஸ்­தீ­னர்­க­ளுக்கு ஆத­ர­வாக வாக்­க­ளிக்­க­வில்லை. முஸ்­லிம்­களின் ஆத­ர­வுடன் ஆட்­சி­ய­மைத்­துள்ள அர­சாங்கம் தனது நிலைப்­பாட்டை மாற்றி சர்­வ­தே­சத்தில் பலஸ்­தீ­னர்­க­ளுக்­காக குரல் கொடுக்க வேண்டும் என புனர்­வாழ்வு மற்றும் மீள்­கு­டி­யேற்ற இரா­ஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்­புல்லா தெரி­வித்தார். 

இஸ்­ரே­லி­யர்­களால் பலஸ்­தீன மக்­க­ளுக்­கெ­தி­ரா­கவும் அல் அக்ஸா பள்­ளி­வா­ச­லுக்­கெ­தி­ரா­கவும் மேற்­கொள்­ளப்­பட்டு வரும் வன்­மு­றைகள் தொடர்பில் கருத்து வெளி­யி­டு­கை­யிலே இரா­ஜாங்க அமைச்சர் ஹிஸ்­புல்லா இவ்­வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்து வெளி­யி­டு­கையில்,

ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்­சிக்­கா­லத்தில் ஐக்­கிய நாடுகள் சபையில் பலஸ்தீன் தொடர்­பான வாக்­கெ­டுப்­பு­களில் இலங்கை பலஸ்­தீ­னர்­க­ளுக்கு ஆத­ர­வா­கவே வாக்­க­ளித்­தது. இஸ்­ரேலின் நில­ஆக்­கி­ர­மிப்­பையும், சட்­ட­வி­ரோத குடி­யேற்­றங்­க­ளையும், பலஸ்­தீ­னர்­க­ளுக்கு எதி­ரான இஸ்­ரே­லி­யர்­களின் வன்­மு­றை­யையும் இலங்கை எதிர்த்­தது. 

ஐக்­கிய நாடுகள் சபையில் இஸ்ரேல் – பலஸ்தீன் விவ­காரம் வாக்­கெ­டுப்­புக்கு விடப்­பட்ட போது இலங்கை பலஸ்­தீ­னுக்கு ஆத­ர­வாக வாக்­க­ளிக்­க­வில்லை. இரு சந்­தர்ப்­பங்­க­ளிலும் இலங்­கையின் வெளி­வி­வ­கார அமைச்­ச­ரா­க­வி­ருந்த மங்­கள சம­ர­வீ­ரவும், தற்­போ­தைய வெளி­வி­வ­கார அமைச்­ச­ரான ரவி கரு­ணா­நா­யக்­கவும் வாக்­க­ளிப்­ப­தி­லி­ருந்தும் தவிர்ந்து கொண்­டமை வருந்­தத்­தக்­கது. முஸ்­லிம்­களின் ஆத­ர­வுடன் ஆட்­சி­ய­மைத்­துள்ள இலங்கை அர­சாங்கம் வாக்­க­ளிப்­ப­தி­லி­ருந்தும் தவிர்ந்து கொள்­ளாது பலஸ்­தீ­னுக்கு ஆத­ர­வா­கவே வாக்­க­ளித்­தி­ருக்க வேண்டும். 

முஸ்­லிம்கள் தமது உயி­ரிலும் மேலாக கருதும் வணக்­கஸ்­த­ல­மான அல் அக்ஸா பள்­ளி­வாசல் உட்­பட்ட பிர­தே­சத்தை இஸ்ரேல் ஆக்­கி­ர­மித்து தம்­வசம் தனது கட்­டுப்­பாட்­டுக்குள் வைத்துக் கொள்­வ­தற்கு எந்த அதி­கா­ர­மு­மில்லை. இன்று பலஸ்­தீனில் அப்­பாவி மக்கள் இஸ்­ரே­லி­யர்­களால் கொலை செய்­யப்­ப­டு­கி­றார்கள். கைது செய்­யப்­பட்டு சித்­தி­ர­வ­தைக்கு உள்­ளாக்­கப்­ப­டு­கி­றார்கள். இதைப்­பார்த்துக் கொண்டு பார்­வை­யா­ளர்­க­ளாக முஸ்­லிம்கள் இருக்­கக்­கூ­டாது. பலஸ்­தீன மக்­க­ளுக்­கா­கவும் அல்­அக்­ஸாவின் உரி­மைக்­கா­கவும் குரல்­கொ­டுக்க வேண்டும். 

ஐ.நா.சபையின் உறுப்பு நாடான இலங்கை ஐ.நாவில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் நாடு­க­ளுடன் இணைந்து அல் அக்­ஸா­வையும், பலஸ்­தீ­னர்­க­ளையும் காப்பாற்றிக் கொள்வதற்காக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும். 

இன்றைய அரசாங்கத்தின் மீது பூரண நம்பிக்கை வைத்தே, அதனை ஆட்சியில் அமர்த்துவதற்கு முஸ்லிம்கள் பங்குதாரர்களானார்கள். எனவே பலஸ்தீன் மற்றும் அல் அக்ஸா விவகாரத்தில் அரசாங்கம் மௌனம் சாதிக்கக்கூடாது என்றார்.

No comments

Powered by Blogger.