Header Ads



பசிலுக்கு உதவும், வெளிநாட்டுப் புலனாய்வு அமைப்பு

சிறிலங்கா அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் சிலரை, தமது பக்கம் இழுப்பதற்கு பசில் ராஜபக்ச மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு, வெளிநாட்டுப் புலனாய்வு அமைப்பு ஒன்று உதவி வழங்கி வருவதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அரச புலனாய்வுச் சேவை இதனை உறுதி செய்திருப்பதாக அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

எனினும், மீண்டும் மகிந்த ராஜபக்சவைப் பதவிக்குக் கொண்டு வரும் நோக்கில் வெளிநாட்டுப் புலனாய்வு அமைப்பு இந்த தலையீட்டை மேற்கொள்ளவில்லை என்றும், சிறிலங்கா அரசாங்கத்தில் செல்வாக்குச் செலுத்தும் நோக்கிலேயே இவ்வாறு உதவிகள் வழங்கி வருவதாகவும் சிறிலங்கா அரச உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

18 வரையான சிறிலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்கள், அரசாங்கத்தை விட்டு வெளியேறலாம் என்று செய்திகள் வெளியாகியிருந்தன.

எனினும், ஐந்து அல்லது ஆறு பேரே அவ்வாறு வெளியேறக் கூடும் என்று சிறிலங்கா அரசாங்க அதிகாரி தெரிவித்துள்ளார்.

இவர்கள் பசில் ராஜபக்சவுடன் இரகசியப் பேச்சுக்களை நடத்தியுள்ளனர் என்றும் அந்த அதிகாரியே மேற்கோள் காட்டி கொழும்பு ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

No comments

Powered by Blogger.