Header Ads



ரங்­கிரி தம்­புள்ளை விஹாரை, காலவரை­யறை­யின்றி மூடப்­பட்­டது

ரங்­கிரி தம்­புள்ளை விஹாரை நேற்று முதல் காலவரை­யறை­யின்றி மூடப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. கல்வி அமைச்­சி­னா­லேயே இந்த தீர்­மானம் எடுக்­கப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

 இது குறித்து மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது, 

வர­லாற்று முக்­கி­யத்­து­வ­மிக்க ரங்­கிரி தம்­புள்ளை விஹா­ரையை நேற்று முதல் மூடி வைப்­ப­தற்கு கல்வி அமைச்­சுக்கும் புரா­தன சொத்­துக்­களை பாது­காப்­பது தொடர்­பி­லான குழு­விற்கு இணக்­கப்­பாடு எட்­டப்­பட்­டுள்­ளது. 

அதன் பிர­காரம் நேற்று முதல் மீள­றி­விப்பு செய்­யப்­ப­டு­கின்ற வகையில் இந்த புரா­தன விஹா­ரை­யா­னது வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­கின்ற சுற்­றுலா பய­ணி­க­ளுக்கும் கூட திறக்­கப்­ப­டா­தி­ருக்க தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

 கல்வி அமைச்சர் கல்வி அகிலவிராஜ் காரி­ய­வசம் தலை­மையில் இசு­று­பா­யவில் அமைந்­துள்ள கல்வி அமைச்சின் கேட்­போர்­கூ­டத்தில் இடம்­பெற்ற புரா­தன சொத்­துக்­களை பாது­காப்­ப­தற்­கான குழு­வி­ன­ரு­ட­னான சந்­திப்பின் போதே இந்த  விட­யத்தில் இணக்­கப்­பாடு எட்­டப்­பட்­டுள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

 பூட்­டப்­பட்­டி­ருக்கும் காலப்­ப­கு­தியில் இந்த விஹாரையினும் காணப்படுகின்ற சிதைவுக்குள்ளாகும் ஓவியங்கள் குறித்தும் விஹாரையினை மீளவும் சீர்திருத்தும் பணிகளும் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விகாரையில் பல ஊழல் பணமோசடி நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.