Header Ads



இன்னும் நானே, சுதந்திரக் கட்சியின் தலைவன் - மகிந்த

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் தான் எனவும் தான் தலைவர் பதவியில் இருந்து விலகவில்லை எனவும் தன்னை யாரும் தலைவர் பதவியில் இருந்து நீக்கவில்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சிங்கள வார பத்திரிகை ஒன்று வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு பின்னர், 46 நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து ஒருவரை பிரதமரை நியமித்தனர்.

இப்படி ஒருவர் நியமிக்கப்பட்டார் என்று கூறுவதால், அது செல்லுப்படியாகாது. பெரும்பான்மை பலம் அப்போது எமது பிரதமருக்கே இருந்தது. அவரை பதவி இருந்து நீக்கவில்லை. அவரும் விலகவில்லை.

பிரதம நீதியரசருக்கும் இதனையே செய்தனர். அவர் பதவி விலகவும் இல்லை. எவரும் அவரை விலக்கவும் இல்லை.இதே விதமாகவே ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கும் நடந்தது. 

இன்னும் நானே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர். என்னால், கட்சியின் சம்மேளனத்தையும் கூட்ட முடியும் எனவும் முன்னாள் ஜனாதிபதி கூறியுள்ளார்.

எது எப்படி இருந்த போதிலும் ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியை தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளித்தார்.

முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ச முன்னிலையில் மகிந்த, மைத்திரியிடம் கட்சியின் தலைவர் பதவியை கையளித்ததாக சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் கூறியுள்ளனர்.

No comments

Powered by Blogger.