Header Ads

'கத்தார் சாதாரண நாடு கிடையாது'

அரபு நாடுகள் முன்வைத்துள்ள நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள கத்தாருக்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கத்தார் அரசாங்கம் தீவிரவாதத்துக்கு துணை போவதாகவும், தீவிரவாத செயல்களுக்கு நிதி உதவி அளித்து வருவதாகவும் அரபு நாடுகள் குற்றம் சாட்டின. சவுதி, பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம், எகிப்து உள்ளிட்ட வளைகுடா நாடுகள் கத்தார் உடனான அனைத்து தூதரக உறவுகளையும் முறித்துக்கொண்டன. கத்தார் மீதான தடையை திரும்பப் பெற 13 நிபந்தனைகளை அரபு  நாடுகள் முன் வைத்துள்ளன. ஆனால், கத்தார் அரசோ தன்மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை மறுத்து வருகிறது.

இந்நிலையில், 13 நிபந்தனைகளை கத்தார் ஏற்றுக்கொள்ள அரபு  நாடுகள் விதித்த கெடு நேற்றுடன் முடிந்துவிட்டது. கத்தார் மற்றும் அதற்கு எதிரான பிற அரபு நாடுகளுக்கும் இடையே குவைத் சமரசம் செய்ய முயற்சி செய்து வருகிறது. 13 நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள கத்தாருக்கு 2 நாள்கள் அவகாசம் அளிக்குமாறு குவைத், அரபு  நாடுகளிடம் கேட்டுக்கொண்டது. குவைத்தின் கோரிக்கையை அந்நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளன. ஆனால், கத்தார் பாதுகாப்புத் துறை அமைச்சர் ‘பிற நாடுகள் அதிகாரம் செய்ய கத்தார் சாதாரண நாடு கிடையாது. நாங்கள் எதற்கும் தயாராக இருக்கிறோம்’ என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

கத்தார் உடனான அனைத்துப் போக்குவரத்தையும் சவுதி உள்ளிட்ட அரபு நாடுகள் துண்டித்துவிட்டன. பொருளாதாரத் தடைகளையும் விதித்துள்ளன. இந்நிலையில், அரபு நாடுகள் முன்வைத்துள்ள 13 நிபந்தனைகளை கத்தார் ஏற்காதபட்சத்தில் கத்தார் மீது கடுமையான நடவடிக்கை பாயும் என்று அரபுநாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

No comments

Powered by Blogger.