Header Ads



அகதி முகா­மில் பிறந்து,­ தனி­யாக விமா­ன­த்தில் சுற்றும் ஆப்கான் யுவதி, இலங்­கை­யிலும் தரை­யி­றங்­கினார்


ஒற்றை என்ஜின் கொண்ட விமா­னத்தில் தனி­யாக உலகை சுற்றிவந்த மிக இளம் பெண் எனும் சாத­னையை படைக்கும் நட­வ­டிக்­கையில் ஈடு­பட்­டுள்ள ஆப்­கா­னிஸ்தான் யுவ­தி­யான ஷயீஸ்தா வாயீஸ் கடந்த வாரம் இலங்­கையில் தரை­யி­றங்­கினார். 29 வய­தான ஷயீஸ்தா வாயீஸ், ஆப்­கா­னிஸ்­தானில் பிறந்­தவர். குழந்­தை­யாக இருந்­த­போது ஆப்­கா­னிஸ்­தா­னி­லி­ருந்து அக­தி­யாக அமெ­ரிக்­கா­வுக்குச் சென்ற ஷயீஸ்தா வாயீஸ், பின்னர் அங்கு விமானம் செலுத்­து­வ­தற்குப் பயிற்சி பெற்றார். 

இந்­நி­லையில், ஒற்றை என்ஜின் கொண்ட விமா­னத்தில் தனி­யாக உலகை சுற்­றி­வந்த மிக இளம் பெண் எனும் சாத­னையை படைப்­ப­தற்­கான முயற்­சியில் ஷயீஸ்தா வாயீஸ் ஈடு­பட்­டுள்ளார்.  அமெ­ரிக்­காவில் வசிக்கும் ஷயீஸ்தா, கடந்த மே 13 ஆம் திகதி அமெ­ரிக்­காவின் புளோ­ரிடா மாநி­லத்­தி­லுள்ள டேட்­டோனா கடற்­க­ரை­யி­லி­ருந்து தனது சாதனைப் பய­ணத்தை ஆரம்­பித்தார். Bonanza A36 a ரக விமா­ன­மொன்றில் அவர் இப்­ப­ய­ணத்தை மேற்­கொள்­கிறார்.

ஸ்பெய்ன், எகிப்து, இந்­தியா, சிங்­கப்பூர், அவுஸ்­தி­ரே­லியா உட்­பட 18 நாடு­களின் 30 நக­ரங்­களில் தரை­யி­றங்கி மீண்டும் புளோ­ரி­டாவை சென்­ற­டை­வது ஷயீஸ்­தாவின் திட்டம்.  இந்­நி­லையில் கடந்த 27 ஆம் திகதி அவர் இலங்­கை­யிலும் தரை­யி­றங்­கினார். இலங்­கையில் தரை­யி­றங்­கு­வ­தற்கு அவர் முன்­கூட்­டியே திட்­ட­மிட்­டி­ருக்­க­வில்லை. எனினும், மோச­மான கால­நிலை கார­ண­மாக அவர் பண்­டா­ர­நா­யக்க சர்­வ­தேச விமான நிலை­யத்தில் தரை­யி­றங்கிச் செல்ல வேண்­டி­யி­ருந்­தது. 

சிவில் விமான போக்­கு­வ­ரத்து அதி­கா­ர­ச­பை­யினால் ஷயீஸ்தா வாயீ­ஸுக்கு வர­வேற்பு அளிக்­கப்­பட்­டது. விமானப் பயிற்சி பெறும் பெண்கள், மாண­வர்கள் உட்­பட  பலர் இந்­நி­கழ்வில் பங்­கு­பற்­றினர்.

ஆப்­கா­னிஸ்­தானில் அகதி முகா­மொன்றில் பிறந்­தவர் ஷயீஸ்தா. 1987 ஆம் ஆண்டு ஆப்கான் – சோவியத் யுத்­தத்­தி­லி­ருந்து தப்­பு­வ­தற்­காக அவரின் குடும்பம் அமெ­ரிக்­கா­வுக்குப் புலம் பெயர்ந்­தது.

தனி­யாக உலகை சுற்­றி­வரும் நட­வ­டிக்­கையில் ஈடு­பட்­டுள்ள ஷயீஸ்­தா­வுக்கு பல நாடு­களில் வர­வேற்பு அளிக்­கப்­பட்­டுள்­ளது. தான் பிறந்த ஆப்­கா­னிஸ்­தா­னுக்கும் அண்­மையில் அவர் சென்று திரும்­பினார்.

ட்ரீம்ஸ்சோர் (Dreams Soar) எனும் லாப­நோக்­கற்ற அமைப்­பொன்­றையும் அவர் ஸ்தாபித்­துள்ளார். இளம் பெண்கள், விஞ்­ஞானம், தொழில்­நுட்பம், பொறி­யியல், கணிதம் முத­லான துறை­களில் கல்வி பயில்­வதை ஊக்­கு­விப்­பதை தான் இலட்­சி­ய­மாகக் கொண்­டுள்­ள­தாக அவர் தெரி­வித்­துள்ளார்.

ஒவ்­வொரு தட­வையும் விமா­ன­மொன்றின் கதவை திறக்­கும்­போதும் என்னைப் போன்ற பின்­னணி கொண்ட ஒரு யுவ­திக்கு எப்­படி இத்­த­கைய அதிஷ்டசாலியாக முடிந்தது| என என்னை நான் கேட்டுக்கொள்வேன். ஊண்மை என்னவெனில் அனைவரும் என்னைப் போல் ஆக முடியும்| என்கிறார் ஷயீஸ்தா வாயீஸ்.

No comments

Powered by Blogger.