Header Ads



கிழக்கு ஆளுநர் பதவி, சிங்கள இனவாதியின் பெயர் பரிந்துரை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செயலாளராக கிழக்கு மாகாணத்தின் தற்போதைய ஆளுநர் ஒஸ்ரின் பெர்னாண்டோ நாளை (04) பதவியேற்கவுள்ளார்.

கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9ஆம் திகதி ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன பதவியேற்றதிலிருந்து அவரது செயலாளராக பி.பி.அபயகோன் பதவி வகித்து வந்தார்.

அவர் கடந்த வெள்ளிக்கிழமை தனிப்பட்ட காரணங்களுக்காக பதவியிலிருந்து விலகினார். இதையடுத்தே, இந்தப் பதவியை ஒஸ்ரின் பெர்னாண்டோ ஏற்றுக்கொள்ளவுள்ளார்.

ஜனாதிபதி செயலர் பதவியை ஏற்றுக்கொள்ள தான் இணங்கியுள்ளதாக ஒஸ்ரின் பெர்னாண்டோ உறுதிப்படுத்தியுள்ளார். இன்று திங்கட்கிழமை கிழக்கு மாகாண ஆளுநர் பதவியைவிட்டு தாம் விலகவிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

எனினும், இந்த நியமனம் இன்னமும் அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. கிழக்கு மாகாண சபையின் ஆயுட்காலம் எதிர்வரும் செப்டெம்பர் 25ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், கிழக்கு மாகாண ஆளுநர் பதவிக்கு  முன்னாள் அமைச்சர் பீ.தயாரத்ன, முன்னாள் அமைச்சர் அதாவுத செனவிரத்ன, தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரான முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா ஆகியோரின் பெயர்களும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

முன்னாள் அமைச்சர் பீ.தயாரத்ன அம்பாறையில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளபட்ட பல்வேறு நடவடிக்கைகளின் பின்னணியில் இருந்தவரென்பதும், முஸ்லிம்களின் சுவீகரிப்பதில் முக்கிய பங்காற்றியவரென்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.