Header Ads



தேசியக் கொடியை அகற்றி, கீழேபோட்டு மிதித்துவிட்டு, தப்பிச்சென்றவர் கைது

வவுனியா மாவட்ட செயலக கொடிக் கம்பத்தில் கட்டப்பட்டிருந்த தேசியக் கொடியை கழற்றி வீசி அவமதித்த சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிசாரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா மாவட்ட செயலகத்தின் கொடிக் கம்பத்தில் கீழ் இறக்கப்பட்ட நிலையில் கட்டப்பட்டிருந்த தேசியக் கொடியை மாவட்ட செயலகத்திற்கு வந்த நபர் ஒருவர் கழற்றி அதனை கீழே வீசி அவமதித்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

தேசியக் கொடி கழற்றி வீசப்பட்டதை அவதானித்த மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் இது தொடர்பில் அரச அதிபரின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து அங்கு பொருத்தப்பட்ட சீசீடிவி கமராவை பரிசோதித்த போது தேசியக் கொடியை நபரொருவர் அவமதித்தமை பதிவாகியிருந்தது.

இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பில் வவுனியா மாவட்ட செயலாளர் எம்.பி.ரோஹண புஸ்பகுமார வவுனியா பொலிசில் செய்த முறைப்பாட்டை தொடர்ந்து விசாரணைகளை ஆரம்பித்த வவுனியா பொலிசார் வவுனியா, பண்டாரிக்குளம் பகுதியைச் சேர்ந்த நபரொருவரை கைது செய்துள்ளனர். 

குறித்த நபர் மோட்டார் கார் ஒன்றில் மாவட்ட செயலகத்திற்கு வருகை தந்து குறித்த செயலை செய்துள்ளதாகவும், ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

இது தொடர்பான விசாரணைகளை பொலிசார் தொடர்ந்தும் இது தொடர்பான விசாரணைகளை பொலிசார் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகிறார்கள். 

6 comments:

  1. புலி தீவிரவாதிகள் மீண்டும் எழுச்சிபெறுவதையே கடந்த சில நாட்களாக நடக்கும் சம்பவங்கள் காட்டுகின்றன. தீவிரவாதிகள் உருவாகமுதல் முளையிலே கிள்ளியெறியவேண்டும்

    ReplyDelete
    Replies
    1. @IK MS, இது உங்கள் அனுமானம் மட்டுமே.

      ஆனால் இலங்கையில் ISIS முஸ்லிம் பயங்கரவாதிகள் எழுச்சி பெருவதை CIA, RAW ஆகியன நிரூபித்து விட்டன.

      அதனால் தான் தற்பொது பௌத்த மக்கள் உங்கள் மேல் கோபம் கொண்டுள்ளனர்.

      Delete
  2. இருவரும் ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள் சகோதர்களே சிருபான்மையினரான தமிழரும் முஸ்லிம்களும் ஒன்றபடாத வரையில் இலங்கையில் எந்த சிறுபான்மையும் எந்தத் தீர்வையும் பெறாது

    ReplyDelete
    Replies
    1. Agreed, but who is starting it first in here?

      Delete
    2. நான் பேசுவது இனவாதமாக இருந்தால் என்னை போன்றவர்கள் இனவாதத்தை கையில் எடுக்க காரணமே சமூக வலைத்தளங்களில் எல்லை மீறி முஸ்லிம்களை சாடும் தமிழர்கள் தான்.

      Delete
  3. அடித்தால் அடிப்பது தேவை ஆனால் அதற்காக ஆரம்பித்து வைப்பது நல்லதல்ல மொழியால் ஒன்றுபட்ட நாங்கள் ஒன்றாக இருந்திருந்தால் பல விடயங்களை சாதித்திருக்கலாம் அதற்காக அடிவாங்கிக்கொண்டு இருக்கச் சொல்லவில்லை இரு சமுகமும் சில விட்டுக்கொடுப்புக்களை செய்தால் பல விடயங்களைச் சாதிக்கலாம் அவ்வளவுதான்

    ReplyDelete

Powered by Blogger.