Header Ads



இலங்கைர்கள் சட்டவிரோதமாக, வெளிநாடுகளில் தங்கியிருப்பதில் உள்ள ஆபத்து

எதிர்வரும் காலங்களில் கொரியா மற்றும் இஸ்ரேல் நாட்டில், இலங்கையர்களுக்கு தொழில் வாய்ப்பு இல்லாமல் போகும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சேவை காலம் நிறைவடைந்து இலங்கை பணியாளர்கள் சட்டவிரோதமாக அந்த நாடுகளில் தங்கியிருப்பதே அதற்கு காரணமாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

கொரியாவில் கிட்டத்தட்ட 5000 இலங்கையர்கள் சட்டவிரோதமாக தங்கியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளதென வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக செயற்பாட்டு இயக்குனர் உப்புல் தேஷப்பிரிய தெரிவித்துள்ளார்.

அவர்கள் தொடர்பில் சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளவதற்கு ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.

இவ்வாறான மோசடியான நடவடிக்கைகள் நீடிக்குமாயின் அது பல நாடுகளில் பணி புரியும் இலங்கையர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.