Header Ads



ஆளும் - எதிர்த்தரப்பு வாக்குவாதம், பாராளுமன்ற அமர்வுகள் இடைநிறுத்தம்

பெற்றோலிய கூட்டுத்தாபன தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பில் சபையில் குழப்பம் ஏற்பட்டதால் நாடாளுமன்ற அமர்வுகளை சிறிது நேரத்துக்கு இடைநிறுத்தி வைப்பதாக சபாநாயகர் கரு ஜயசூரிய சற்றுமுன் அறிவித்தார்.

பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு மற்றும் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து பிரதமர் ரணில் விக்கிரசிங்க நாடாளுமன்றில் விசேட உரையாற்றினார்.

இதன்போது மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க, பிரமரின் கருத்துக்களில் உடன்பட முடியாதென தெரிவித்தார்.

இதனையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தனவும்  பிரதமரிடம் கேள்விகளை முன்வைத்தார். அப்போது ஆளும் தரப்பினருக்கும் எதிர்த்தரப்பினருக்கும் இடையில் வாக்குவாதம் உருவானது.

ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுந்து நின்று பல்வேறு கேள்விகளை முன்வைத்தனர். இதனால் சபையில் குழப்பம் ஏற்பட்டது.

இதன்பின்னர் சபை அமர்வுகளை தற்காலிகமாக இடைநிறுத்தி வைப்பதாக சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்தார்.

No comments

Powered by Blogger.