Header Ads



ஆகஸ்ட் 8 ஆம் திகதி, அரச எதிர்ப்புத் தினமானப் பிரகடனம்

ஓகஸ்ட் மாதம் 8ஆம் திகதியை அரச எதிர்ப்புத் தினமானப் பிரகடனப்படுத்தி அதன்பின்னர் தொடர்ச்சியாக அரசுக்கு எதிரான கூட்டங்களையும், போராட்டங்களையும் நாடெங்கிலும் நடத்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பொது எதிரணி முடிவுவெடுத்துள்ளது.

2015ஆம் ஆண்டு நல்லாட்சி அரசு என்ற நாமத்துடன் ஆட்சி அதிகாரத்துக்கு வந்த மைத்திரி, ரணில் அரசு தொடர்ந்து மக்களை ஒடுக்கு முறைக்கு உள்ளாக்கி ஆட்சிசெய்து வருகின்றது. 

நாட்டை இரண்டாகப் பிளவுபடுத்தும் நோக்கில் புதிய அரசமைப்பைத் தயாரித்து வருகின்றது. இதனைக் கண்டித்தே இந்த அரச எதிர்ப்புத் தினம்பிரகடனப்படுத்தப்படவுள்ளது' என்று பொது எதிரணியினர் தெரிவித்துள்ளனர்.

புதிய அரசமைப்பொன்று நாட்டுக்கு அவசியமில்லை. தேர்தல் முறைமையில் மறுசீரமைப்புச் செய்தால் மாத்திரம் போதும் என்ற நிலைப்பாட்டை நாடு முழுவதும் எடுத்துச்செல்ல நாம் தீர்மானித்துள்ளோம் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தேசிய அரசில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த சிலர்கடும் அதிருப்தியில் உள்ளனர். 

அவர்களும் ஓகஸ்ட் 8ஆம் திகதி எம்முடன் இணைந்து அரசுக்கு எதிராகப் போராடுவார்கள்' என்றும் பொது எதிரணியினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

புதிய அரசமைப்புக்கான இடைக்கால அறிக்கை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது எனப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அண்மையில் அறிவித்திருந்தார். 

இதனையடுத்து புதிய அரசமைப்புக்கு மகாநாயக்கர்களும் எதிர்ப்பை வெளியிட்டனர். 

இந்தச் சூழலில் புதிய அரசமைப்புக்கு எதிரான மக்களைத் தம்பக்கம் இழுத்துக் கொள்வதற்காக ஓகஸ்ட் மாதம் 8ஆம் திகதியை அரச எதிர்ப்புத் தினமாகப் பொது எதிரணியினர் பிரகடனப்படுத்தியுள்ளனர்.

No comments

Powered by Blogger.