Header Ads



இலங்கையிலிருந்து முதலாவது ஹஜ் குழு, ஆகஸ்ட் 6 இல் புறப்படுகிறது - சுகா­தார நலன்­களுக்காக 4 டாக்­டர்கள்

-ARA.Fareel-

இவ்­வ­ரு­டத்­திற்­கான ஹஜ் யாத்­திரை ஏற்­பா­டுகள் அனைத்தும் பூர்த்தி செய்­யப்­பட்­டுள்­ளன. இலங்­கை­யி­லி­ருந்து முத­லா­வது தொகுதி ஹஜ் யாத்­தி­ரி­கர்கள் எதிர்­வரும் ஆகஸ்ட் 6 ஆம் திக­தியும் இறுதித் தொகு­தி­யினர் ஆகஸ்ட் 26 ஆம் திக­தியும் பய­ணிக்­க­வுள்­ளனர் என  முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் எம்.ஆர்.எம்.மலீக் தெரி­வித்தார். 

தொடர்ந்தும் ஹஜ் ஏற்­பா­டுகள் தொடர்பில் அவர் கருத்து வெளி­யி­டு­கையில்,  

ஹஜ் கட­மையைப் பூர்த்தி செய்துவிட்டு முத­லா­வது தொகுதி ஹஜ் யாத்­தி­ரி­கர்கள் எதிர்­வரும் செப்­டெம்பர்  மாதம் 6 ஆம் திக­தியும் இறுதித் தொகு­தி­யினர்  செப்­டெம்பர் மாதம் 26 ஆம் திக­தியும் நாடு திரும்­பு­வார்கள்.

 சவூதி அரே­பி­யாவில் இலங்கை ஹஜ்­யாத்­தி­ரி­கர்­களின் சுகா­தார நலன்­களைக் கவ­னிப்­ப­தற்­கா­கவும், நோய்கள் ஏற்­படின் சிகிச்­சை­ய­ளிப்­ப­தற்­கா­கவும் 4 டாக்­டர்கள் அடங்­கிய  வைத்­திய குழு­வொன்றும் சவூதி அரே­பி­யா­வுக்குப் பய­ணிக்­க­வுள்­ளது. 

இவ்­வ­ருடம் ஹஜ் கட­மையை நிறை­வேற்­று­வ­தற்கு விண்­ணப்­பித்து தெரிவு செய்­யப்­பட்­டுள்ள ஹஜ் யாத்­தி­ரி­கர்கள் அனை­வரும் கட்­டா­ய­மாக தடுப்பு  ஊசி ஏற்­றிக்­கொள்ள வேண்டும்.

முஸ்லிம்  சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் சகல பிர­தேச சுகா­தார அலு­வ­ல­கங்­க­ளுக்கு இது தொடர்பில் அறி­வு­றுத்­தல்­களை  வழங்­கி­யுள்­ளது. தடுப்பு ஊசி பணம் கொடுத்தே ஏற்றிக் கொள்ளப்பட வேண்டும். 

ஹஜ் யாத்திரிகர்களின் நலன்கள் தொடர்பில் திணைக்களம் அதிக கவனம் செலுத்தும் என்றார். 

No comments

Powered by Blogger.