Header Ads



அடிபணிய மறுத்த கட்டார் - 50 நாட்களை வெற்றிகரமாக கடந்தது

சில வளைகுடா நாடுகள் கத்தார் மீது தடை விதித்து 50 நாட்கள் முடிவடைந்துவிட்டது.

கத்தார் தீவிரவாதத்திற்கு ஆதரவளிப்பதாக குற்றம் சாட்டிய செளதி அரேபியா, பஹ்ரைன், எகிப்து மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்டுகள், அதனுடனான அனைத்து உறவுகளையும் துண்டித்துக் கொள்வதாக கடந்த ஜூன் ஐந்தாம் தேதியன்று அறிவித்தன.

அதன்பிறகு, இரு தரப்புக்குமிடையே சீர்குலைந்த உறவுகளை சரி செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், இதுவரை எந்த இறுதி முடிவும் ஏற்படவில்லை. ஆனால் கத்தாரின் வெளியுறவு கொள்கைகளை அதன் அண்டை நாடுகள் விமர்சிப்பது இது முதல்முறையும் அல்ல.

பிற வளைகுடா நாடுகள் கத்தார் மீது தடைகளை அறிவித்து ஐம்பது நாட்களானது பற்றி சமூக ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டுவருகிறது. #FiftyDaysSinceTheSiege என்ற ஹேஸ்டேக் மிகவும் பரவலாக, டிரெண்டாகியுள்ளது.

கத்தார் மக்கள் பிற நாடுகளின் தடையை ஆக்கப்பூர்வமாக எடுத்துக் கொண்டு, ஒற்றுமையாக இருப்பதற்கு மகிழ்ச்சி தெரிவிக்கும் கருத்துகள் பரவலாக பகிரப்பட்டுள்ளது.

கத்தார்வாசிகள் மகிழ்ச்சியாக இருக்கின்றனரா?

பின் ஜாசிம் எழுதுகிறார், ''கத்தார் மக்கள் தங்கள் நாட்டுக்கு அற்புதமான விசுவாசத்தையும், அன்பையையும் காட்டுவதற்கு உகந்த வாய்ப்பு அமைந்தது''

@WoLFAlkuwari டிவிட்டரில் எழுதப்பட்டுள்ளது- வெறுப்பு காட்டுபவர்கள் எப்போதும் அப்படித்தான் இருப்பார்கள், ஆனால் அவர்களால் நம்மைப்போல் இருக்கமுடியாது, நம்மால் எப்போதும் வெறுப்பை காட்டமுடியாது.''

சாராவின் கருத்து இது, ''தடைகள் விதிக்கப்பட்டு 50 நாட்கள் ஆகிவிட்டாலும், கத்தார் இன்னும் வலிமையாக, கம்பீரமாக நிற்கிறது.''

@iineeyy எழுதுகிறார், ''நாட்டிற்காக எதையும் செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம். நாட்டை நம்மால் பாதுகாக்க முடியாவிட்டால், நமக்கு அங்கே வசிப்பதற்கு எந்தவித உரிமையும் இல்லை.''

@alhajri1101 எழுதுகிறார், ''கத்தார் வரலாற்றிலேயே முதன்முறையாக தொடர்ந்து 50 நாளாக தேசிய தினத்தை கொண்டாடியிருக்கிறோம்.''

''கத்தாரை சேர்ந்தவர்கள் நாங்கள் என்பதில் பெருமைப்படுகிறோம். கத்தாருக்கு உறுதுணையாக நிற்பவர்களைக் கண்டு மகிழ்ச்சியடைகிறோம்'' என்று நூர் என்பவர் கருத்து தெரிவித்துள்ளார். BBC

No comments

Powered by Blogger.