Header Ads



ஆர்வம் காட்டினால், கட்டாருடன் பேச்சு - 4 அரபு நாடுகள் அறிவிப்பு


தங்களது கோரிக்கைகளை பரிசீலிப்பதற்கான ஆர்வத்தை கட்டார் வெளிப்படுத்தினால், பிரச்சினையைத் தீர்ப்பதற்கான பேச்சுக்களுக்குத் தயாராக இருப்பதாக, கட்டாருடன் உறவுகளைத் துண்டித்துக் கொண்ட நான்கு அரேபிய நாடுகளும் நேற்றுத் தெரிவித்துள்ளன.

பிராந்தியத்தில் அதிகரித்த பதற்றம் தொடர்பான பிரச்சினைகளை ஆராய்வதற்காக, பஹ்ரேன், சவூதி அரேபியா, எகிப்து, ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளிவிவகார அமைச்சர்கள், பஹ்ரேனின் தலைநகர் மனாமாவில் நேற்றுக் கூடியிருந்தனர்.

இந்நிலையிலேயே, குறித்த சந்திப்பை அடுத்து இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த பஹ்ரேன் வெளிவிவகார அமைச்சர் ஷேய்க் காலிட் பின் அஹமட் அல் கலிபா, பயங்கரவாதத்துக்கும் தீவிரவாததுக்கும் நிதியளிப்பதை நிறுத்தும் உண்மையான ஆர்வத்தை வெளிப்படுத்தினால், ஏனைய நாடுகளின் வெளிவிவகார விடயங்களில் தலையிடுவதை நிறுத்தினால், 13 கோரிக்கைகளுக்கும் பதிலளித்தால், கட்டாருடன் பேச்சுவார்த்தை நடாத்த நான்கு நாடுகளும் தயாராகவுள்ளதாகக் கூறியுள்ளார்.

முஸ்லிம் சகோதரத்துவத்துகான ஆதரவை நிறுத்துதல், அல் ஜஸீரா தொலைக்காட்சியை நிறுத்துதல், துருக்கி இராணுவத் தளத்தை மூடுதல், ஈரானுடனான உறவுகளைக் குறைத்தல் என்பது 13 கோரிக்கைகளில் உள்ளடங்குகின்றன.

ஆயுததாரிகள் குழுவுக்கு கட்டார் ஆதரவளிப்பதாகவும் தமது வைரி ஈரானுடன் இணைந்திருப்பதாகவும் கூறி, சவூதி தலைமையிலான நாடுகள், கட்டாருடனான உறவுகளை, இவ்வாண்டு ஜூன் ஐந்தாம் திகதி துண்டித்திருந்தன. இந்நிலையில், மேற்குலக நாடுகளின் ஆதரவுடன் குவைத் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட இராஜதந்திர நடவடிக்கைகள் பிரச்சினையைத் தீர்க்கத் தவறிவிட்டன.

1 comment:

  1. Allah's curse is going to befall soon to the 4 musketeers. What is unreasonable demand is closing down Al Jazeera. The western media monopoly was broken by Al Jazeera. Y cant these mad kings understand these. It looks these mad kings are worse than jews. There was time all what western media says we beleived blindly. Idi Amin eating himan liver. Saddam having chemical weapon. Gaddafi was instrumental in lickerbie incident. Al Jazeeta brought about ethics to some extent in media. What these mad kibgs deserve is a dressing down.

    ReplyDelete

Powered by Blogger.