Header Ads



பாராளுமன்றத்தில் இன்றும் குழப்பம் - 4 ஆம் திகதிவரை ஒத்திவைப்பு

இன்று -28- ஏற்பட்ட குழப்ப நிலை காரணமாக பாராளுமன்ற நடவடிக்கைகள் யாவும் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 04 ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்படுவதாக சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார். 

பெற்றோல் விநியோகத்தை அத்தியவசிய சேவையாக பிரகடனப்படுத்தி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் சம்பந்தமாக வாக்கெடுப்பு நடத்தப்பட்ட போது பாராளுமன்றத்தில் பாராளுமன்றத்தில் உறுப்பினர்களிடையே ஏற்பட்ட அமைதியின்மையையடுத்து பாராளுமன்ற நடவடிக்கைகள் அனைத்தும் பிற்போடப்பட்டுள்ளன. 

குழப்ப நிலை காரணமாக பாராளுமன்ற நடவடிக்கைகளை வழமைபோன்று மேற்கொள் முடியாத நிலை ஏற்பட்டதனால் பாராளுமன்ற அமர்வு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி வரை பிற்போடப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார்.

பெற்றொலிய துறை ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போது கடந்த 25 ஆம் திகதி நள்ளிரவு முதல் பெற்றோல் விநியோக சேவையை அத்தியவசிய சேவையாக பிரகடனப்படுத்தி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது. குறித்த வர்த்தமானி தொடர்பில் இன்றைய தினம் வாக்களிப்பு இடம்பெற்றபோதே குழப்பநிலை உருவாகியமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.