Header Ads



25 பேரை திருமணம்செய்து வாழ்ந்துவந்த மதத்தலைவர்


ஒரே நேரத்தில் 25 பேரை திருமணம் செய்து வாழ்ந்து வந்த கனடா நாட்டு மதத்தலைவர் மீது நடவடிக்கை பாயவுள்ளது.

அமெரிக்கா மற்றும் கனடாவில் வசித்து வரும் இனக்குழுவினர் மோர்மோன், இவர்களிலிருந்து லாட்டர் டே ஸைண்ட்ஸ் என்ற சிறு குழுவினர் தனியாக பிரிந்து சென்று தங்களை இயேசு ஆலய வழிபாட்டு முறையினை பின்பற்றுபவர்கள் என அறிவித்து கொண்டனர்.

இவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்களை செய்து கொள்வதில் நம்பிக்கை உடையவர்கள்.

இந்த பிரிவை சேர்ந்த வின்ஸ்டன் பிளாக்மோர் மற்றும் ஜேம்ஸ் ஓலர் மீது கனடா நாட்டு பலதார மணச்சட்டத்தின் கீழ் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

வின்ஸ்டன் 25 பெண்களையும், ஜேம்ஸ் 5 பெண்களையும் திருமணம் செய்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பான வழக்கு பல ஆண்டுகளாக நடந்து வந்த போதிலும், தற்போது தான் தெளிவான முடிவு கிடைத்துள்ளது.

இதுகுறித்து பிரிட்டிஷ் கொலம்பியா நீதிமன்ற நீதிபதி வழங்கியுள்ள தீர்ப்பில், வின்ஸ்டன் மற்றும் ஜேம்ஸ் பல பெண்களுடன் வாழ்ந்து வருவது ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது, விரைவில் தண்டனை அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

கனடா நாட்டு சட்டப்படி இருவருக்கும் தலா ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது.

தன்னுடைய மத நம்பிக்கையின்படி இவை அனைத்தும் தெய்வீக திருமணங்கள் என கருத்து தெரிவித்துள்ள வின்ஸ்டன், கனடா நாட்டு பலதார மணசட்டத்தினை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.