Header Ads



பாடசாலை மாணவர்களுக்கு 2 இலட்சம் ரூபா காப்புறுதி - வருட இறுதிக்குள் Lap top

பாடசாலை மாணவர்களுக்கு 2 இலட்சம் ரூபா காப்புறுதி வழங்கும் திட்டம் எதிர்வரும் சில நாட்களில் ஆரம்பிக்கப்படவிருப்பதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் பாராளுமன்றத்தில் நேற்று அறிவித்தார். அரசாங்க பாடசாலைகள், தனியார் பாடசாலைகள் மற்றும் சர்வதேச பாடசாலைகளில் கல்விகற்கும் சகல மாணவர்களுக்கும் இந்த காப்புறுதி வழங்கப்படவிருப்பதாவும், இதனை ஆரம்பிப்பதற்கான கேள்விப்பத்திரம் கோரும் செயற்பாடுகள் பூர்த்தியடைந்திருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

முன்பள்ளி கல்வியை மேம்படுத்துவது தொடர்பாக ரோஹினி குமாரி விஜேரத்ன எம்பி கொண்டுவந்த தனிநபர் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இந்தத் தகவல்களை வழங்கினார்.

பாடசாலை மாணவர்களுக்கு காப்புறுதி வழங்கும் திட்டத்தின் கீழ் இரண்டு இலட்சம் ரூபாவுக்கு சகல மாணவர்களும் காப்புறுதிக்கு உட்படுத்தப்படுவார்கள். டெங்கு போன்று நோய்கள் உள்ளிட்ட அனர்த்தங்கள் ஏற்படும்போது அவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாவை அமைச்சின் ஊடாகவும், எஞ்சியதொகை காப்புறுதி நிறுவனத்தின் ஊடாகவும் வழங்கப்படும். இத்திட்டத்துக்கான கேள்விப்பத்திரம் கோரும் நடைமுறை பூர்த்தியடைந்துள்ளது. பெரும்பாலும் இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்துக்கு இதனை வழங்குவதற்கு ஆராய்ந்து வருவதாகக் கூறினார்.

இத்திட்டத்தின் கீழ் அரசாங்க வைத்தியசாலையில் சிகிச்சைபெறும் மாணவர்களுக்கு நாளொன்றுக்கு ஆயிரம் ரூபா வீதம் வழங்கப்படும். காப்புறுதி நிறுவனத்தின் முகவர்களுக்கு வழங்கப்படும் 10 வீதத்தை அமைச்சுக்கு பெற்று, அதனூடாகக் கிடைக்கும் பணத்தை ஜனாதிபதி நிதியத்துக்கு வழங்கி மாணவர்களின் சத்திரசிகிச்சைக்கு அதனைப் பெற்றுக்கொடுக்க எதிர்பார்த்துள்ளோம்.

அதேநேரம், ஏற்கனவே அரசாங்கம் முன்மொழிந்தமைக்கு அமைய இவ்வருட இறுதிக்குள் பாடசாலை மாணவர்களுக்கு டப் இயந்திரம் பெற்றுக் கொடுக்கப்படும். அது மாத்திரமன்றி செப்டெம்பர் மாதம் முதல் 13 வருட கட்டாய பாடசாலைக் கல்வித் திட்டம் அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ளது.

இதேவேளை, ஆரம்ப பாடசாலைகளுக்கு ஆசிரியர்களை நியமிக்கும்போது அதற்குரிய பயிற்சிகளைப் பெற்றவர்களை நியமிப்பதற்கான திட்டமொன்றும் தயாரிக்கப்படவுள்ளதுஎன்றும் தெரிவித்தார். 

No comments

Powered by Blogger.