July 25, 2017

சவூதியில் 15 வயதிற்கு குறைந்த பெண்களை, திருமணம்செய்ய முடியாது

-விடிவெள்ளி-

15 வய­திற்கு கீழ்ப்­பட்ட பெண்­களை திரு­மணம் முடிக்கத் தடை விதிக்க வேண்­டு­மென்ற சிபாரி­சினை சவூதி அரே­பி­யாவின் சூறா சபையின்  பல அங்­கத்­த­வர்கள் இணைந்து நீதி அமைச்­சுக்கு அனுப்பி வைத்­துள்­ளனர். மூதி அல்-­கலப், லதீபா அல்-­ஷாலான், நௌவூறா அல்-­மு­செயிட், இஸ்ஸா அல்-­காலித் மற்றும் பௌவுஸ்யா அபா அல்-­காலித் ஆகி­யோரால் வரை­யப்­பட்­டுள்ள இச் சிபாரிசில் பெண்கள் 15 வய­திற்கும் 18 வய­திற்கும் இடைப்­பட்ட வய­தி­லேயே திரு­மணம் செய்­யப்­பட வேண்டும் என்ற இறுக்­க­மான நிபந்­த­னையும் விதிக்­கப்­பட வேண்­டு­மென சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது. 

இந்த நிபந்­தனை திரு­மணம் செய்து கொள்­ள­வுள்ள பெண், அவ­ரது தாய் மற்றும் குறித்த பெண் திரு­மண வாழ்க்­கைக்கு உடல்­ரீ­தி­யா­கவும், உள­ரீ­தி­யா­கவும் மற்றும் சமூ­க­வியல் ரீதி­யாவும் தகு­தி­யாவர் என விஷேட குழு­வினால் சமர்ப்­பிக்­கப்­படும் மருத்­துவ அறிக்­கை­யினை உள்­ள­டக்­கி­ய­தாக இருக்க வேண்­டு­மெ­னவும், மண­ம­கனின் வயது பெண்ணின் வய­தை­விட இரட்­டிப்­பான வயதைத் தாண்­டி­ய­தாக இருக்கக் கூடாது எனவும் திரு­மண விட­யங்­களில் நிபு­ணத்­துவம் பெற்ற நீதி­ப­தி­யொ­ரு­வ­னி­னா­லேயே திரு­மண ஒப்­பந்தம் செய்­து­வைக்­கப்­பட வேண்­டு­மெ­னவும் சூறா சபை அங்­கத்­த­வர்கள் விளக்­க­ம­ளித்­துள்­ளனர். 

மனித வாழ்க்­கை­கக்குத் தீங்கு ஏற்­ப­டாது பாது­காத்தல் என்ற ஷரீஆ சட்­டத்­திற்­குட்­பட்ட வகை­யி­லேயே தமது சிபாரி­சுகள் அமைந்­துள்­ள­தாக விளக்­க­ம­ளித்த சூறா சபை அங்­கத்­த­வர்கள், இள­வ­யதுத் திரு­ம­ணங்­களால் ஏற்­ப­டு­கின்ற உடல்­ரீ­தி­யான, உள­ரீ­தி­யான மற்றும் சமூ­க­வியல் ரீதி­யான பாதிப்­புகள் தக்க சான்­று­க­ளாக உள்­ள­தா­கவும் அவர்கள் தெரி­வித்­துள்­ளனர். 

திரு­ம­ணங்­களை ஒழுங்­கு­ப­டுத்­துதல் என்­பது வணக்­க­வ­ழி­பாடு, சமயப் பிரச்­சி­னைகள் போலல்­லாது, மாற்­றங்­க­ளுக்­குட்­ப­டுத்­தப்­பட வேண்­டிய வாழ்க்­ககைப் பிரச்­சி­னை­யாகும் எனத் தெரி­வித்த அவ்­வு­றுப்­பி­னர்கள், பல இஸ்­லா­மிய நாடுகள் திரு­மண வய­தினை ஒழுங்­கு­ப­டுத்­தி­யுள்­ளன. எகிப்­தியச் சட்­டத்தில் மணப்­பெண்ணின் வயது 18 வய­துக்கு கீழ்ப்­பட்­ட­தாக இருக்­கு­மாயின் அவ்­வா­றான திரு­மணம் தடை செய்­யப்­படு­கி­றது எனவும் மேற்கோள் காட்­டினர். 

இள­வ­யதுத் திரு­ம­ணங்கள் சுகா­தாரம் சார்ந்த பிரச்­சி­னை­களை ஏற்­ப­டுத்­து­வது மட்­டு­மல்­லாது, பாட­சா­லை­யி­லி­ருந்து இடை­வி­லகும் நிலை­யி­னையும் பெண்­க­ளுக்கு ஏற்­ப­டுத்­து­கின்­றது. பெண்­களை மலி­னப்­ப­டுத்தும் பாரம்­ப­ரிய சமூகக் கலா­சார நிலை­களை மாற்றி கல்­வி­யூ­டாக பெண்­களை வலுப்­ப­டுத்த வேண்டும் என முன்­னணி சூறா சபை உறுப்­பி­ன­ரொ­ருவர் தெரி­வித்தார். 

வறு­மைக்கும் இள­வ­யதுத் திரு­ம­ணத்­திற்கும் இடை­யே­யான தொடர்பு என்­பது பல அடுக்­கு­களைக் கொண்ட சிக்­க­லான சுழற்­சி­யாகும். இள­வ­யதுத் திரு­ம­ணத்­திற்கு வறுமை கார­ண­மாக இருப்பது மாத்­திர­மன்றி அது தொடர்ச்­சி­யான வறு­மைக்கே இட்டுச் செல்­கி­றது. குறிப்­பாக இளம் தாய்மார் விவாகரத்துச் செய்யப்படும்போது அல்லது கணவர் மரணித்துவிடும்போது தமது குடும்பத்தை பராமரிக்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.  

1988 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் உரிமைப் பிரகடனம் உள்ளிட்ட சவூதி அரேபியா கையொப்பமிட்டுள்ள சர்வதேச சாசனங்களில் இளவயதுத் திருமணங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன.  

2 கருத்துரைகள்:

In our country only marriage age is viewed as some divine revelation. Big time our community grows up and take some mature stance.

The result of allowing women to sit with men decision making. What Islam made halal is now being a problem for so called Muslims,

Allah is enough for those who try to change it

Post a Comment