Header Ads



15 வயது பெண் மாரடைப்பால் மரணம்

இந்தியாவின் உபி மாநிலத்தில் ராம்பூரைச் சேர்ந்தவர் பர்வேஸ் அலி கான். சென்ற வெள்ளிக் கிழமை சவுதியின் அல்கோபார் நகரில் கடற் கரைக்கு தனது குடும்பத்தோடு விடுமுறையை கழிக்கச் சென்றுள்ளார். 10 ஆம் வகுப்பு படிக்கும் இவரது மகள் 15 வயதான ஷாஹர் பர்வேஸூம் குடும்பத்தோடு விளையாட சென்றுள்ளார். விளையாட சென்ற சிறுமி வேகமாக தனது தாயாரிடம் திரும்பி வந்து 'நெஞ்சு வலிக்கிறது' என்று சொல்லியுள்ளார். உடனே குடும்பத்தவர் அனைவரும் மருத்துவ மனைக்கு கொண்டு சென்றுள்ளனர். போகும் வழியிலேயே அந்த சிறுமி இறந்து விட்டார். மாரடைப்பால் அந்த சிறுமி இறந்து விட்டதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.

தகவல் உதவி
சவுதி கெஜட்
02-07-2017  

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் - இறைவனிடமிருந்தே வந்தோம்: அவனிடமே திரும்பிச் செல்லக் கூடியவர்கள் நாம்.

இறப்பு எந்த நேரத்திலும் நம்மை நெருங்கலாம். வயது வித்தியாசம் கிடையாது என்பதை இது போன்ற சம்பவங்கள் நமக்கு உணர்த்துகின்றன.

இறைத்தூதர் நபிகள் நாயகம் அவர்கள் கூறினார்கள்'

இறந்தவரை மூன்று பொருள்கள் பின்தொடர்ந்து செல்கின்றன. அவற்றில் இரண்டு திரும்பி விடுகின்றன. ஒன்று மட்டுமே அவருடன் தங்கிவிடுகிறது. அவரை அவரின் குடும்பமும் செல்வமும் அவர் செய்த செயல்களும் பின்தொடர்ந்து செல்கின்றன. அவற்றில் அவரின் குடும்பமும் செல்வமும் திரும்பி விடுகின்றன. அவரின் செயல்கள் மட்டுமே அவருடன் தங்கிவிடும்.

என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரி - 6514.

No comments

Powered by Blogger.