Header Ads



இந்தியாவின் 14 ஆவது ஜனாதிபதியாக, இந்துத்துவா சேவகன் ராம்நாத் கோவிந்த் தெரிவு

இந்தியாவின் 14ஆவது குடியரசுத் தலைவராக, பாரதிய ஜனதாக் கட்சியின் ராம்நாத் கோவிந்த் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்று, மக்களவைச் செயலாளரும் தேர்தல் அதிகாரியுமான அனூப் மிஸ்ரா தெரிவித்தார்.

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகளில், மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றே அவர் வெற்றிபெற்றுள்ளார்.

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் வரும் 24ஆம் திகதியுடன் முடிவடையவுள்ளநிலையில், கடந்த 17ஆம் திகதி  திங்கட்கிழமை, குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது.

இதில் பதிவான வாக்குகள் எண்ணும் நடவடிக்கை, இன்று  (20) காலை 11 மணி முதல் இடம்பெற்றது. பெறப்பட்ட வாக்குப் பெட்டிகள், அகர வரிசைப்படி திறக்கப்பட்டு 4 மேசைகளில் 8 சுற்றுகளாக வாக்கு எண்ணும் பணி நடைபெற்றது.

நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் தலா ஒன்று என, மொத்தம் 32 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு, வாக்குப் பதிவு நடைபெற்றது. இதில் 99 சதவீத வாக்குகள் பதிவாயின. இதில், பா.ஜ.க கூட்டணி சார்பில் ராம்நாத் கோவிந்தும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில், மக்களவை முன்னாள் தலைவர் மீரா குமாரும் போட்டியிட்டனர்.

No comments

Powered by Blogger.