June 08, 2017

இலங்கை முஸ்லிம்களுக்கு முழு ஆதரவு, OIC யின் அறிக்கையின் தமிழ் வடிவம்


-எம்.ஐ.அப்துல் நஸார்-

பள்ளிவாசல்கள், வர்த்தக நிலையங்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பில் இஸ்­லா­மிய ஒத்­து­ழைப்­பிற்­கான அமைப்பு அறிக்கை

அண்மை நாட்களில் முஸ்லிம்களுக்கு எதிராக இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட வெறுக்கத்தக்க நடவடிக்கைகள், பள்ளிவாசல்கள், வர்த்தக நிலையங்கள் மீதான தாக்குதல்கள் குறித்து இலங்கை அரசாங்கம் உடனடியாக சட்டத்தை அமுல் செய்து சந்தேக நபர்களை  கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என இஸ்லாமிய ஒத்துழைப்புக்கான அமைப்பு (OIC) தெரிவித்துள்ளது.

சவூதியின் ஜித்தாவை மையமாக கொண்டு செயற்படும் 57 முஸ்லிம் நாடுகளின் கூட்டுறவில் இயங்கிவரும் குறித்த ஸ்தாபனத்தின் பொதுச் செயலாளர் கலாநிதி யூசுப் அல் ஒதைமீன் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அத்துடன் இலங்கை முஸ்லிம்களுக்கு  முழுமையான ஆதரவையும் ஒத்துழைப்பையும் தமது அமைப்பு தொடர்ந்தும் வழங்குமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 மக்கள் மத்­தியில் அச்ச உணர்­வையும் அவ­நம்­பிக்­கை­யி­னையும் உரு­வாக்கும் தீவி­ரப்­போக்குக்கொண்­ட­வர்­களால் மேற்­கொள்­ளப்­படும் வெளிப்­ப­டை­யான வன்­முறை நிலை­மைக்கு எதி­ராக இலங்கை முஸ்லிம் சமூ­கத்­திற்கு முழு­மை­யான ஆத­ர­வையும் ஒத்­து­ழைப்­பையும்  இஸ்­லா­மிய ஒத்­து­ழைப்­பிற்­கான அமைப்பு வழங்கும். வீடுகள், வர்த்­தக நிறு­வ­னங்கள் மற்றும் பள்­ளி­வா­சல்கள் மீதான தாக்­கு­தல்கள் மிகுந்த கரி­ச­னைக்­கு­ரி­ய­னவும் அழ்ந்த கவ­லைக்­கு­ரி­ய­ன­வு­மாகும் எனவும் பொதுச் செய­லாளர் தெரி­வித்­துள்ளார். 

பொதுச் செய­லாளர் கலா­நிதி யூஸுப் அல்-­ஒ­தைமீன் சமூ­கங்­க­ளுக்­கி­டையே அமை­திக்கும் சமா­தா­ன­பூர்­வ­மான உற­வுக்கும் வேண்­டுகோள் விடுத்­தி­ருக்கும் அதே­வேளை, சட்­டத்­தினை நடை­மு­றைப்­ப­டுத்­து­மாறும், சம்­ப­வங்கள் தொடர்பில் விசா­ரணை நடத்­து­மாறும், அவற்­றிற்குக் கார­ண­மா­ன­வர்­களை சட்­டத்­தின்முன் நிறுத்­து­மாறும் அதி­கா­ரி­களைக் கேட்­டுக்­கொண்­டுள்ளார்.

இலங்­கை­யி­லுள்ள முஸ்லிம் சமூகம் இலங்­கையில் நீண்­ட­கால இருப்பைக் கொண்­டுள்­ள­தோடு, ஏனை­யோ­ருடன் சமா­தா­ன­மா­கவும் இணக்கப்பாட்டுடனும் வாழும் பாரம்பரியத்தையும் கொண்டுள்ளது. அத்துடன் ஒட்டுமொத்தமாக நாட்டின் கலாச்சாரம் மற்றும் பொருளாதாரத்திற்கும் முஸ்லிம் சமூகம் பங்களிப்புச் செய்து வருகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.     

7 கருத்துரைகள்:

தொழிலாளர் வீசா முறையை கொஞ்சம் இறுக்கி பிடித்து முஸ்லிம்களுக்கு மட்டும் தான் தொழில்வாய்ப்பென்று ஒரு செய்தியை வெளியிட்டால் அதுவே பெரிய அடி தான்

more than 3M working in midle east if they bring the sanction only for muslim then they knew

அவர்களுக்கு அதிகமாக தேவைப்படுவது skilled workers தானாம்.

Appo tamilanukkum sinakkum poha mudiyazo...

டேய் அந்தோணி உலகிலுள்ள ஆரம்பகால முதல் இரு பல்கலைக்கழகங்களும் யாருடையது என்பதையும் மத்தியகால அறிவுப் புரட்சியில் பங்களிப்பு செய்தவர்கள் யார் என்பதையும் கின்னஸ் புத்தகத்தை புரட்டிப் பார்ரா பரதேசி.
ஆங்கிலேய ஆட்சியில் , சிங்கள, முஸ்லிம் மக்களுக்கு எதிராக தன்னினத்தையே கூட்டிக்கொடுத்து கல்வியில் சுரண்டல் செய்துவிட்டு மற்ற சமூகத்தை எள்ளிநகையாடுகிறாய்.
யாழ் தமிழன் உன்போன்ற கீழ் சாதிகளை படலைக்கு வெளியே நிறுத்தி விசரனை விரட்டுவது போன்று துரத்துவதும் உனது ஈனத்தனமான செயல்கள் காரணமாகத்தான். ஏன்றா உனது குண்டி காயும் போது மாற்றான் சோற்றிலும் மண் போடப்பார்க்கிறாய்.?
தன் இனத்தைப் பிடிக்காத ஒரே இனம் நாய் இனம் தான். அந்த இனம் சார்ந்தவனோ நீர்?

Lafir அண்ணே, சின்ன சின்ன விடயங்களுக்கு எல்லாம் இப்படி அதிகமாக உணர்ச்சி வசப்பட கூடாதாம்.

கிண்ணஸ் புத்தகதில் எப்படியான தகவல்கள் இருக்கும் என google பண்ணி பாருங்கள்.

நான் சொல்ல வந்தது என்ன வென்றால் மத்திய கிழக்கு நாடுகளில் அதிக தேவை skilled workers தானாம், அதனால் தான் சீனர்கள், ஐரோப்பியர்கள், இந்தியர்கள் அதிகளவில் அங்கு போகிறார்கள்.


Post a Comment