Header Ads



அபுதாபி அரசக் குடும்பத்திற்கு, பெல்ஜியத்தில் சிறைத் தண்டனை

ஐக்கிய அமீரக இளவரசிகள் எட்டு பேருக்கு மனித உரிமை மீறல் குற்றத்துக்காக சிறைத் தண்டனை வழங்கி அதிரடி காட்டியுள்ளது பெல்ஜியம் நீதிமன்றம்.

தற்போது அபுதாபியை ஆளும் அல்-நஹியான் அரசக்குடும்பத்தைச் சேர்ந்த ஷிக்கா ஹம்டா அல்-நஹியான் என்பவரும் அவரின் ஏழு மகள்களுக்கும்தான் பெல்ஜியம் நீதிமன்றம் சிறை தண்டனை வழங்கியுள்ளது. அதுவும் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் தொடரப்பட்ட வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ளனர்.

பெல்ஜியத்தில் ஆடம்பர ஹொட்டல் ஒன்றில் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் பணியாட்களை மனிதநேயமற்று நடத்திய குற்றத்துக்காக எட்டு இளவரசிகளுக்கும் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

15 மாதம் சிறைத் தண்டனையுடன் €165,000 அபராதம் செலுத்தவும் பெல்ஜியம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரஸ்ஸல்ஸ் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த விசாரணையில் அபுதாபி அரசக் குடும்பத்தில் இருந்து ஒருவரும் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

2 comments:

  1. Fantastic Eid gift.
    It should b an eye opener to other members of this repressive regimes on how to treat other humen beings .

    ReplyDelete
  2. Court sentenced without accused.

    Hi hi hi

    ReplyDelete

Powered by Blogger.