June 24, 2017

ஓட்டுமொத்த முஸ்லிம்களும், முட்டாள்கள் என்ற நினைப்பில் சந்திரிக்கா..?

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் பொலிஸார் கட்டுப்படவில்லை என்றால் அந்தபதவியில் அவர்கள் தொடர்ந்து இருக்க அருகதை அற்றவர்கள் என பானதுறை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் இபாஸ் நபுஹான் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது..

இப்தார் நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட சந்திரிக்கா உரையாற்றியதை காணக்கிடைத்தது. இந்த நாட்டில் உள்ள ஓட்டு மொத்த முஸ்லிம்களும் முட்டாள்கள் என்ற நினைப்பில் அவரது உரை இடம்பெற்றிருந்தது

தனது  உரையில் மஹிந்த ராஜபக்ஷவை இலக்கு வைத்து விமர்சனம் செய்துள்ள சந்திரிக்கா ஜனாதிபதியாக இருந்த போது இடம்பெற்ற மாவனல்லை கலவரத்துக்கு எதிராக அவர் அப்போது நிலைநாட்டிய நீதி என்ன? என்பதை இந்த நாட்டு முஸ்லிம்களுக்கு முதலில் தெளிவுபடுத்த வேண்டும்.

இதே சந்திரிக்காவின் அரசாங்கத்தில் 1999ம் ஆண்டு களுத்துறை வெட்டுமங்கடை UC மைதானத்திற்கு அருகாமையில் இடம்பெற்ற மோதல் முஸ்லிம் சிங்கள மக்களிடையே இனக்கலவரமாக வெடித்தது. அதன் போது முஸ்லிம்கள் நான்கு பேர் உயிரிழந்தனர். முஸ்லிம்களின் கடைகள் தீக்கிரையாக்கப்பட்டு பொருட்கள் சூறையாடப்பட்டன. அப்போது களுத்துறைத் தொகுதி UNP அமைப்பாளராக இருந்தவர்  ராஜித சேனாரத்னவாகும். அன்று சந்திரிக்கா அம்மையாரின் அரசை கவிழ்க்க முஸ்லிம்களையே ஆயுதமாக பாவித்தனர்.அதற்கு சந்திரிக்கா அரசு எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கவில்லை.

ஞானசாரவை நாய் கூண்டில் அடைப்பதாக கூறி ஆட்சிக்கு வந்த சந்திரிக்கா அலுத்கமை கலவரத்துக்கு என்ன நீதியை பெற்றுக்கொடுத்துள்ளார் என்பதை அவரது பேச்சை கேட்டுக்கொண்டு இருந்த முஸ்லிம்கள் அவரிடம்கேட்டிருந்தால் அவர் என்ன பதில் கூறியிருக்க முடியும்.

மைதிரியின் ரிமோட் கொன்றோலை தன்னிடம் வைத்துள்ள சந்திரிக்க இவ்வாறு நாடகமாடி மீண்டும் மீண்டும் முஸ்லிம்களை முட்டாள்களாக்க முயற்சிக்க கூடாது என அவர்  வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

4 கருத்துரைகள்:

அப்படியானால் யாரு நல்லவர் எல்லோரையுமே குறை சொன்னால்?மாவனல்லை கலவரத்தை அப்போதைய அம்மையார் வெகு விரைவாக அடக்கினார்.

சும்மா நம்மவர்கள் ஒரே குறையை காணாமல் நல்ல அருத்தமுள்ள கருத்துகளை முன்வைக்கவும் அது தான் நடப்பு காலத்துக்கு தேவையானது எமது சமூகத்துக்கு.

நபுகான்! உங்களது அரசியல் ராஜதந்திரம் நன்றாகவே விளங்குகிறது. MR க்காக வக்காளத்து வாங்குவதை விட்டுவிட்டு தனித்துவமான அரசியல் பயணத்தை தேர்வு செய்யுங்கள். இல்லையேல் விரைவாகவே உங்கள் சாயம் வெழுத்துவிடும்.

மாவானல்லை பிரச்சினை தொடராமல் அடக்கியதும் பெரும்பாலும் நன்றாக அமைந்துள்ளது அது தொடர்ந்து இருந்தால் இன்று வரை நீடித்து இருக்கும்

மாவனல்லை கலவரம் சந்திரிக்காவின் மந்திரி சபையில் இருந்தவர்களால் நடத்தப்பட்டது, அவர்களைப்பாதுகாத்து பின்னர் முதலமைச்சர் பதவியிலும் அமர்த்தப்பட்டார்கள், அதில் பாதிக்கப்பட்டவர்களில் கட்சி வாரியாக தெரிவு செய்யப்பட்டு ஆளும் கட்சி ஆதரவாளர்களை கண்டறிந்து சேதமாக்க்கப்பட்டதையும் விட பல மடங்கு நட்ட ஈடும் வழங்கப்பட்டது. சும்மா இருந்தவர்கள் கோடீஸ்வரர்கள் ஆக்கப்பட்டார்கள். ஆளும்கட்சி மந்திரியை விமர்ஷித்தவர்கள் கண்டுகொள்ளப்படவில்லை. ஒரு முழுக்கடையும் பல லட்சங்களுடன் சாம்பலாக்கப்பட்டவர்களுக்கு ஒரு சிறு தொகையும் பூட்டி வைத்த கடையில் வெளியே தொங்க விடப்பட்டிருந்த பிளாஸ்டிக் ஷொப்பிங் பைகளை இழந்தவர்களுக்கு பெரும் தொகையும் வழங்கி நீதி நிலை நாட்டப்பட்டது. கலவரம் காலை ஆரம்பித்து பகல் பொழுதாவதாய்க்குள் அடக்கப்பட்டது, வெளியூர் போலீசாரும் படையினரும் வந்து நீதியாய் நடந்து கொண்டனர். ஆனால் இந்த குறைந்த பட்ச நீதி கூட அழுத்தகம கலவரத்தில் மஹிந்தவின் அரசாங்கத்தினால் நிலை நாட்டப்பட வில்லை. இன்று ரணில் மைத்ரீ அரசிலும் இல்லை. இதில் மேற்படி மஹிந்த வாதி மாத்திரம் மஹிந்தவின் குண்டி மனப்பதாக அடிக்கடி கூறிக்கொண்டு அலைகிறார். இது போன்ற சில குருநாகல் மாவட்டத்திலும் சில கிழக்கு மாகாணத்திலும், கூறிக்கொண்டு அலைகின்றன. இது போன்ற கக்கூஸ் நக்கிகளை முஸ்லிம்களுக்கான ஊடகங்கள் புறக்கணிக்க வெண்டும்.

Post a Comment