Header Ads



சிறிலங்காவுக்கு அதிக கொடைகளை வழங்கிய அமெரிக்கா, அதிக கடன் வழங்கியது சீனா

சிறிலங்காவுக்கு அதிகளவு கொடைகளை வழங்கிய நாடாக அமெரிக்காவும், அதிகளவு கடன்களை வழங்கிய நாடாக சீனாவும் இருப்பதாக சிறிலங்கா அரசாங்கத்தின் அதிகாரபூர்வ புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

2016ஆம் ஆண்டில் சிறிலங்காவுக்கு அமெரிக்கா, 23.83 மில்லியன் டொலரை திருப்பிச் செலுத்தாத கொடையாக வழங்கியுள்ளது. இது கடந்த ஆண்டில் சிறிலங்காவுக்கு கிடைத்த கொடைகளில் 44 வீதமாகும்.

அதேவேளை, சிறிலங்காவுக்கு கடந்த ஆண்டு, 440.76 டொலர் கடன்களை வழங்கி, அதிக கடனை வழங்கிய நாடாக சீனா விளங்குகிறது.

2016ஆம் ஆண்டு 1,586.2 மில்லியன் டொலரை வெளிநாட்டு அரசாங்கங்கள், மற்றும் முகவர் அமைப்புகளிடம் இருந்து பல்வேறு திட்டங்களுக்கான கடனாக சிறிலங்கா அரசாங்கம் பெற்றுள்ளது.

உலக வங்கி 354.86 மில்லியன் டொலர் கடன்களையும், 9.28 மில்லியன் டொலர் கொடைகளையும் வழங்கியுள்ளது.

ஆசிய அபிவிருத்தி வங்கி, 336.63 டொலர் கடன்களை சிறிலங்காவுக்கு வழங்கியுள்ளது.

ஜப்பான், 159.7 மில்லியன் டொலர் கடன்களையும், 7.01 மில்லியன் டொலர் கொடைகளையும் வழங்கியிருக்கிறது.

அடுத்து. ஜேர்மனி, 5.43 மில்லியன் டொலர் கடன்களையும், 3.98 மில்லியன் டொலர் கொடைகளையும் சிறிலங்காவுக்கு வழங்கியது.

ஐ.நா முகவர் அமைப்புகளால், கடந்த ஆண்டு, 22.63 மில்லியன் டொலர் கடன்களும், 9.7 மில்லியன் டொலர் கொடைகளும் அளிக்கப்பட்டன.

இந்தியா 44.7 மில்லியன் டொலர் கடன்களை சிறிலங்காவுக்கு வழங்கியுள்ளதாக சிறிலங்கா நிதியமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments

Powered by Blogger.