Header Ads



என்னை ஒன்றும் செய்ய முடியாது, மரணிக்கத் தயார் - பதுங்கியிருக்கும் ஞானசாரா சவால்

எமது போராட்டத்திற்கு இதுவே கடைசித்தருணமாக இருக்கும், எது வேண்டுமானாலும் நடக்கலாம் என ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

தேரர் சமூக வலைத்தளங்களுக்கு கருத்து தெரிவித்துள்ள காணொளி ஒன்றின் மூலமாகவே இதனைக் கூறியுள்ளார். மேலும் அவர் அதில் கூறியுள்ளதாவது,

பௌத்தத்திற்காக குரல் எழுப்பிய எமது பெயருக்கு கலங்கத்தை ஏற்படுத்தி விட்டார்கள். இப்படியே செல்லுமானதாக இருந்தால் பௌத்தமே அழிந்துவிடும் நிலை ஏற்படும்.

இந்த போராட்டம் எமது கடைசி போராட்டமாக வேண்டுமானாலும் இருக்கக்கூடும். சிலவேளை மரணமும் ஏற்படக் கூடும். காரணம் அவர்களது அதிகாரம் மிகவும் பலம் மிக்கது.

என்னை ஒன்றும் செய்ய முடியாது, நான் எவருக்கும் பயந்தவனும் அல்ல எத்தனை பொலிசார், விஷேட பிரிவினையும் கூட வரச்சொல்லுங்கள் பார்த்துக்கொள்கின்றேன்.

இந்த நேரத்தில் அனைவரிடமும் நான் கேட்டுக்கொள்வது அவசியமற்ற கலவரங்களில், குழப்பங்களில் ஈடுபடவேண்டாம் என்பதே.

என்னைக் கைது செய்வதாக இருந்தால் விக்னேஸ்வரன், விஜயகலா, றிசாட் உட்பட பலரையும் கைது செய்தே ஆக வேண்டும். பூஜிதவின் வளைந்த நீதி பற்றி நன்றாகவே எனக்குத் தெரியும்.

நல்லிணக்கத்தை ஏற்படுத்துகின்றோம் என்ற பெயரில் இந்த புத்த நாட்டில் பௌத்தமே இல்லாமல் போய்விடும். இதில் எந்தவித அரசியல் நோக்கங்களோ அல்லது மகிந்தவின் விளையாட்டுகளோ எதுவும் இல்லை.

நான் அச்சமடைய மாட்டேன். பத்து பேர் இருந்தாலும் இந்த போராட்டத்தை கடைசிவரை முன்னெடுத்துக் கொண்டே செல்வோம் எனவும் ஞானசார தேரர் கூறியுள்ளார்.

3 comments:

  1. பயத்துல உளரி உண்மையெல்லாத்தையும் கொட்டுது பாரு

    ReplyDelete
  2. Anyone never trust him and his activities. As a democratic nation pls make ustrustin legally.

    ReplyDelete
  3. The essence of what he says:

    1.This could be the last chance for our struggle.
    2.He doesn't fear anyone and even ready to die .
    3.He's asking from EVERYBODY to be calm
    4.He vows to carry on even with ten followers.
    If we look at it even lightly,we can easily understand
    that 1 and 2 don't go with 3 and 4. Very clear
    contradictions.3 is usually his code for asking more
    trouble from his followers. And the last is clearly
    indicating a strategy followed by sales marketing
    techniques and any other organization planning.In the
    beginning even five people are a good big number to
    grow. So,he clearly indicates he took some training
    about his activities from public or private source .
    All we need to understand about prevailing danger is,
    you don't need any special skill to start a RACIAL
    TENSION IN THE COUNTRY ! JUST ONLY A LEADERSHIP IS
    ALL YOU NEED! GNANASARA IS THAT PICTURE WE ALL HAVE
    BEEN FORCED TO FOCUS ON FOR NOW.AND A COUPLE OF MORE
    PICTURES ARE SUSPECTED OF BEING SUPPORTIVE OF HIM
    DUE TO SOME REASON .

    ReplyDelete

Powered by Blogger.