June 14, 2017

ஞானசாரர் பற்றிய. கசப்பான உண்மைகள்

-Ajaaz Mohamed-

1. நாம் நினைத்துக் கொண்டிருப்பது போல #ஞானசார ஒரு கிறுக்கன் அல்ல ! அவனுக்குப் பின்னால் தேசிய, சர்வதேச மட்டத்தில் பலமான சக்திகள் உண்டு !

2. அவனை மகிந்த உருவாக்கவில்லை !  அவன் ஏற்கெனவே முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கத்திய சக்திகளால் குறிப்பாக நோர்வே மூலம் உருவாக்கப் பட்டிருந்தான் ஆனால் இடையில் மகிந்தவின் ஆட்சியில் கோட்டாவின் மூலம் ஒரு கட்டத்தில் ஞானசார போசிக்கப்பட்டது உண்மை தான் அதுதான் கடைசியில் அந்த ஆட்சிக்கே ஆப்பாகவும் அமைந்து விட்டது.

3. இப்போது ஞானசார இயங்குவது நிச்சயமாக மகிந்தவுக்காகவோ மைத்திரிக்காகவோ அல்ல ! அவன் தனது தனிப்பட்ட அடிப்படையான முஸ்லிம் விரோத நிகழ்ச்சித் திட்டத்தின் அடிப்படையில் தான் தொடர்ந்தும் இயங்கி வருகிறான்.

4. நேரடியாக மைத்திரி இப்போது ஞானவைப் பாதுகாக்கவில்லை ! மாறாக அரசில் இருக்கும் முக்கியமான இரண்டு அமைச்சர்கள் உள்ளிட்ட இன்னும் சில உயர் அரச பீடங்களால்தான் அவன் பாதுகாக்கப்பட்டு வருகிறான்.

5. மைத்திரியே விரும்பினாலும் இப்போது ஞானசாரவை உடனடியாக கட்டுப்படுத்த முடியாது !
அது அரசியல் பிரச்சனையாக மாறிவிடும்.

6. விரும்பியோ விரும்பாமலோ ஏதோ ஓர் அடிப்படையில் மைத்திரியே ஞானவைக் கட்டுப்படுத்த வேண்டும் ! அதைச் செய்ய அவர் தொடர்ந்தும் தாமதிப்பதால் முஸ்லிம்களின் பாதுகாப்பு பாரிய அச்சுறுத்தலுக்கு நிச்சயமாக இலக்காகி விடும் !  மகிந்தவுக்கு நடந்ததே மைத்திரிக்கும் நிச்சயமாக நடக்கும் !

7. நமது கீபோட் போராளிகள் தொடர்ந்து கோஷம் போடுவது போல நமது 22 பா.உ.க்களும் ஒரேயடியாக ராஜினாமா பண்ணினாலும்கூட இந்தப் பிரச்சனை உடனே தீர்ந்துவிட மாட்டாது.

8. இந்தக் கட்டத்தில் நாம் அவசரப்படவும் கூடாது அதேபோல் சும்மா வெறுமனே பார்த்துக் கொண்டிருக்கவும் கூடாது.

9. நமக்கு எதிராக சிங்கள இனவாதிகள் சாதாரண சிங்கள மக்கள் மத்தியில் ஏற்படுத்தி விட்டுள்ள, பரப்பியுள்ள தவறான அபிப்பிராயங்களை அச்சங்களைச் சந்தேகங்களை நாம் பொறுமையாக நீக்க வேண்டும் ! அதற்காக சிங்கள சமூகத்தோடு, புத்திஜீவிகளோடு, பெளத்த உயர்பீடங்களோடு மனம் திறந்து உரையாட வேண்டும் அதை உடனே தொடங்க வேண்டும் !

10. நமக்கு எவ்வளவு அநீதிகள், இழப்புகள் ஏற்பட்டாலும், நம்மில் சிலர் கொல்லப்பட்டாலும் கூட எந்த சந்தர்ப்பத்திலும் நாம் வன்முறைகளில் பதில் தாக்குதல்களில் இறங்கி விடக்கூடாது ! அதனால் ஞானசாரவின் பாரிய இன அழிப்பு நோக்கமே நிச்சயமாக வெற்றி பெறும் ! நாம் கோபப்பட்டு வீதிகளில் இறங்க வேண்டும் என்பதே ஞானவின் ஒரே நோக்கம் அப்போது கண் மண் தெரியாமல் நாடளாவிய ரீதியில் முஸ்லிம் கிராமங்களைச் சூறையாட அவனுக்கு வசதியாக இருக்கும் !  எனவே பொறுமை நமக்கு மிக மிக முக்கியமானது !

11. நாம் இந்த நாட்டின் போலிஸையோ ராணுவத்தையோ நீதிமன்றங்களையோ ஜனாதிபதியையோ முற்றிலும் நம்பிக் காரியங்களில் இறங்க முடியாது ! 

நல்லெண்ணம் கொள்வோம் ! ஆனால் நம்பி ஏமாறாதிருப்போம் ! 

எந்த அரபு நாடுகளும் வேறு நாடுகளும் நமக்காக உடனடியாக எதுவும் செய்து விடப் போவதில்லை ! அதையும் மனம் கொண்டு நிதானமாக செயற் படுவோம் !

19 கருத்துரைகள்:

மொக்கன்னாக் கூனாக்கள்

Appreciate above ideas. Meantime, we have to utilize the Human Rights Commission in Geneva and also the European Union who granted the GS+. Not to stop. At least to instigate them to question the Government.

இவனை பாதுகாப்பது இரண்டு அமைச்சர்கள் என்றால் அதே அமைச்சரவையில் தான் 5 கேபினட் அமைச்சர்கள், 2 ராஜாங்க மற் 3 பிரதி அமைச்சர்கள் உள்ளார்கள்... இவர்களை பாராளுமன்றம் அனுப்பியது அவர்களின் பொருளாதார வளர்ச்சிக்கு அல்ல.. இந்த சமூகத்திற்கு பிரச்சினையை வரும் போது அதற்கு எதிராக நடவடிக்கை எடுத்து அதனை கட்டுப்படுத்த வேண்டும்... ஆனால் இவர்களோ அறிக்கை மாத்திரம் விடுகிறார்கள்... நாங்கள் சொல்லவில்லை இவர்கள் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று. மாறாக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டு எதிர்க்கட்சியில் அமர்ந்து எதிர்ப்பை காட்ட வேண்டும்... ஆனால் இவர்களால் அப்படி செய்யமாட்டாகள்... இதுதான் இந்த நாட்டு முஸ்லிம்களின் பரிதாப நிலை...

The law of the land must do its job.The law enforcement authority still sleeping!

சட்டி சுட்டதட கைவிட்டதட புத்தி கெட்டதட நெஞ்சை தொட்டதட. எலகசன் நடந்து முடிந்த பின்னால் நல்லவர் கெட்டவர் தெரிந்தாரட.

நடுநிலையான தெளிவான கருத்துக்கள்

If we really think about the Muslim community in Sri Lanka the above facts are to be adhered and considered as corrective measures.

If we really think about the Muslim community in Sri Lanka the above facts are to be adhered and considered as corrective measures.

முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர் 21 ஆ 22ஆ அந்த ஒரு உறுப்பினரை எங்கு பெற்றார் கட்டுரை யாளர்.

Attacks have come down after Ranil's return .
Grenade attack on Bairaha in Dalugama in the
middle of 90s went unnoticed and many before
and after that in many parts of the country
happened but ignored by Muslims and politicians
as isolated normal incidents but today it has
grown to the boiling point. Muslims are not
fools to judge it wrongly Gnanasara as the
founder of hatred against Muslims . Hatred was
ever existing but Muslims managed to carry on
as nothing threatened them at this scale in
public with clear big noise . Access to advanced
technology like internet , geopolitics , access
to world markets , employment opportunities in
the developed world and oil rich countries , road
projects and high rise buildings , competition by
bigger powers to assist in future development plans
of all right without left governments AND ON TOP OF
ALL THAT , COMPLETE IGNORANCE OF MUSLIMS TO SEE THE
PENDING DANGERS EVEN AFTER EXPERIENCING MANY EARLY
SIGNALS . DEMOCRACY IS A VERY SHARP WEAPON THAT
MINORITIES MUST NEVER FAIL TO LEARN PROPERLY BEFORE
STARTING TO USE IT . WE MUST ACCEPT ONE IMPORTANT
ISSUE THAT GNANASARA RAISING IS TRUE . DON'T WE
HAVE RELIGIOUS ORGANIZATIONS THAT ARE WORKING DAY IN
DAY OUT TO PROPAGATE ISLAM AMONG NON-MUSLIMS ? YES,
IT IS OUR DEMOCRATIC RIGHT BUT NOW WE HAVE AN
ANTI-ISLAM ORGANIZATION TO CHALLENGE THAT RIGHT THROUGH VIOLANCE ! AND THE LAW AND ORDER AUTHORITIES THINK
NOT TWICE BUT MANY TIMES TO HONOUR OUR RIGHTS !!!!
WHAT IS THIS TEACHING TO US ?

மாஷா அல்லாஹ் றொன்ப அருமையான கருத்துக்கள்.

Kumar umakku yen pa ippadi Kaduppu? Ummada welaya Parum, aduthawanda matter la mookke nulaikkame

பெரிய குறுக்குக் கேள்வி கேட்டு மடக்கி விட்டதா நெனப்பு.. ச்சீ அங்குட்டு போ

<<=>>•<<=>><<=>><<=>><<=>><<=>><<=>>

இந்த இக்கட்டான
காலகட்டத்தில்
சிறுபான்மை மக்களாகிந
நாம் இப்படி
சிந்தித்தால் என்ன..?? 👇🏿👇👇🏿👇👇🏿

<=>><=>><=>><=>><=>><=>><=>><=>><=>>

இன,மத,மொழிப்பாகுபாடுகள் அற்ற சிறப்பான
கொள்கையை அடிப்படையாகக் கொண்ட
இலங்கையின் ஓரங்கட்ட முடியாத ஒரு
உன்னதமான ஒரே கொள்கையுடன்
இயங்கும் அரசியல் சக்தியான
'மக்கள் விடுதலை முன்னணி' பக்கம்
நம்மவர்கள் அதாவது சிறுபான்மையினர்
தம் பார்வையைச் செலுத்தினால் என்ன..??

பேரீச்சம் பழ வரி முதல் அவ்வப்போது எமக்காக சிறுபான்மை மக்களுக்காக பாராளுமன்றத்தில்
நாம் கோரிக்கை விடுக்காமலே
குரல் கொடுக்கும் அவர்கள் நமக்கு நிச்சயம் உதவுவார்கள்..!

'இலங்கையில் பிறந்த அனைவரும்
சம உரிமையுடன்
சம நீதியுடன் நடத்தப்பட வேண்டும்
என்ற கொள்கையை
அடிப்படையாகக் கொண்டு
இயங்குபவர்கள்..!!'

JVP எனும்
மக்கள் விடுதலை முன்னணியுடன்
பேச்சுவார்த்தைகள் நடாத்துவதன்
மூலம், நம் சிறுபான்மை சமூகத்துக்கு
விமோசனத்தையும், பாதுகாப்பையும்
நிச்சயம் உறுதி செய்ய முடியும்..!!

அதன் பிறகு இந்த நாட்டில்
சிறுபான்மையினருக்கு எதிராக
எந்தப் பிரச்சினையும் நடக்காது
என்று நம்பலாம்.

'அடம்பன் கொடியும்
திரண்டால் மிடுக்கு' என்று
சும்மாவா சொன்னார்கள்..!!

சிந்திப்போமா..? செயல் படுவோமா..??

" பூமியை வெல்ல
ஆயுதம் எதற்கு..?
பூப்பறிக்க
கோடரி எதற்கு..?
பொன்னோ பொருளோ
'போர்க்களம்' எதற்கு..??
'ஆசை' துறந்தால்'
அகிலம்' உனக்கு "

ஆம், சொகுசு வாழ்க்கையை
விரும்பும் இந்த சாக்கடை
சுய நல அரசியலை அப்படி
இலேசாக நம்
அரசியல்வாதிகள்
விட்டுவிட மாட்டார்கள்.

அப்படிப்பட்ட சுயநலமிகளை
ஓரங்கட்டிவிட்டு மக்களாகிய
நாம் அனவரும் ஒன்று சேர்ந்து
சிந்தித்து சீக்கிரமே ஒரு நல்ல
முடிவை எடுப்போம்..!

ஒன்றை மட்டும் ஞாபகம்
வைத்துக் கொள்ளுங்கள்..!

இந்த மைத்திரியோ, ரனிலோ,
மகிந்தயோ அல்லது
அரபு ( முஸ்லிம்) நாடுகளோ
நம்மைப் பாதுகாப்பார்கள்
என்று மட்டும் நம்ப வேண்டாம்..!

அவர்கள் அனைவரும்
முஸ்லிம்களை அழிக்கக்
கங்கணம் கட்டிக்
கொண்டு இயங்கும்,
இஸ்லாத்துக்கு எதிரான
சக்திகளுடன் கை
கோர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

உலக அளவில்
முஸ்லிம்களுக்கு அநியாயங்களும்,
அட்டூழியங்களும்
திட்டமிட்ட அடிப்படையில்
அரங்கேறிய வண்ணம் இருக்கின்றன.

இலங்கையும் விதிவிலக்கல்ல..!

இவ்வளவும் நடப்பது,
எம்மை சீண்டுவதற்கும்,
அதன் மூலம்
ஒரு பெரிய கலவரத்தை
உண்டுபண்ணி
எம்மையும் எமது
பொருளாதாரத்தையும்
அழிப்பதும்தான்
(இந்த இனவாதிகளின்)
குறிக்கோள்..!

இதற்கு சியோனிஷ (யூத)
சக்திகளின் பலமான ஆதரவுண்டு.
நல்லாட்சியோ, நம் அரசியல்
தலைமைகளோ இந்தச்
சதித் திட்டங்களை நிறுத்த முடியாது.
தலைக்கு மேலே வெள்ளம்
போகிறது..!

நாம் இன்னும் வேடிக்கை
பார்த்துக் கொண்டிருந்தால்
நாளொரு மேனி,
பொழுதொரு வண்ணமாக
எமது உடமைகள்
அழிக்கப்படும்,
ஏன் உயிர்களின்
அழிவும் ஆரம்பமாகும்..!

இன்று அங்கு,
நாளை இங்கு
மறுநாள் எங்கும்..!!

"சுவர் இருந்தால்தான்
சித்திரம் தீட்டலாம்"

"சிந்தித்து அவசரமாக
முடிவெடுக்கும்
தருணம் இது"

"வாழை மலர் போல
பூமி முகம் பார்க்கும்
'கோழைக் குணம்'
மாற்று தோழா..!

நாளை உயிர் போகும்,
இன்று போனாலும்
'கொள்கை நிறைவேற்று'
தோழா..!!"

சிந்திப்போம், இனியும்
பார்த்துக் கொண்டிருக்காமல்
உடனே அவர்களுடன் (JVP)
பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்போம்.

நமது இந்த முடிவு,
இந்த நாட்டில் மட்டுமல்ல,
உலக அளவில் மெச்சப்படும்-
பாராட்டப்படும்,
இலங்கை அரசியலில்
மாபெரும் அரசியல்
புரட்சியை ஏற்படுத்தும்..!

¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥

பிரதான கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதன் விளைவே இப்போது நாம் பார்ப்பது. இது இவ்வாறிருக்க, 3ஆம் தர கட்சி ஒன்றோடு மீண்டும் பேச்சுவார்த்தையா...? நீங்களும் உங்கட ஐடியாவும்...!!!

அப்படியானால் இனவாதிகளுடன் மோதச் சொல்கிறீர்களா..?

அதனால் இலங்கையில்
அடுத்த மியன்மார்
உருவாக வழிசமைக்க வேண்டுமென்கிறீர்களா..?

ஆயதமேந்திப் போராடிய விடுதலைப்பலிகளுக்கும்
அதன் மூலம் தமிழ்
மக்களுக்கும் நேர்ந்த
கதியை மறந்து விட்டீர்களா..?

ஏன் சிந்திக்காமல் பேசுகிறீர்கள்..?

யூத ( சியோனிஷ ) சதிகளில் சவூதி போன்ற அரபு, முஸ்லிம்
நாடுகளே சிக்கி சீரழிந்து கொண்டிருக்கும் போது நாம்
எம்மாத்திரம்..??

ஏன் யதார்த்தத்தை மறந்து சிந்திக்கின்றீர்கள்..??

இப்போதைய சூழ்நிலையில் அமைதி காப்பதுதான்
சிறந்த வழி..!

முஸ்லிம்களுக்கு எதிராக சர்வதேச சதியொன்று அரங்கேற்றப்பட ஒத்திகை நடக்கிறது.

முஸ்லிம்களை ஆத்திரமூட்டி அவர்களை ஆயுதமேந்த வைத்து பயங்கரவாதிகளாக பட்டம் சூட்டுவதற்கு சியோனிஷ சூழ்ச்சி நடக்கிறது..!

இதை அனைவரும் புரிந்து கொண்டு புத்தியுடன் பொறுமை காக்க வேண்டும்..!

IS IS என்றும் அது
இலங்கையில் இருக்கிறது என்றும் என்றுமில்லாத
அளவுக்கு அண்மைய சில நாட்கள் தொட்டு இனவாதிகள் சத்தம் போடுவது எதற்காக என்று யாரும் சிந்திப்பதாக இல்லை.

எம்மை சீண்டிவிட்டு எங்காவது ஒரு இடத்தில் தொடங்கி கலவரத்தை உண்டாக்கி விட்டு அதை நாடு பூராகவும் பெருங் கலவரமாக மாற்ற யூத சூழ்ச்சி நடக்கிறது. நாம் அமைதியாக இருப்பதுதான் புத்தி என்பதை உணர வேண்டும்.

இதைவிட்டு விட்டு, நாய் நம்மைக் கடிக்கிறது என்று நாமும் பழிக்குப் பழி
என்று நாயைக் திருப்பிக் கடிக்கலாமா..??

இந்த விடயத்தில்
நாம் சிந்தித்து
செயல்பட வேண்டும்.

ஆயுதம் ஏந்தி நம்மால்
வெற்றி பெற முடியுமா..?

அவ்வளவு வசதி,வாய்ப்புகள் மேற்கத்திய ஆதரவுகள்
இருந்த போதிலும் விடுதலைப் புலிகள் ஆயுதமேந்தி வெற்றி பெற்றார்களா..??
ஈற்றில் என்ன நடந்தது..???

ஆயுதப் போராட்டம் தேவையற்றது. அதில் நம்பிக்கை வைப்பதில் அர்த்தமில்லை..!!

அமைதிப் போராட்டமே
சிறந்த வழி..!
அரசியல் போராட்டம்
அடுத்த வழி..!!
பொறுமை காப்பது வெற்றிக்கு
உகந்த வழி..!!
எமது பாரம்பரிய அரசியல் பாதையை மாற்றுவதுதான் -சிறுபான்மையினர் அனைவர்க்கும் ஏற்ற வழி..!!

சிந்தித்து செயல் படும் தருணம்
இதுவென்பதை யாரும் மறக்க
வேண்டாம்..!!!

Ajaaz Mohammed Advice absolutely correct, all should keep Porumai (பொறுமை) Allah will help us

This comment has been removed by the author.

Post a Comment