Header Ads



அமைச்சரை குரங்கு என கூறியதாலே, மலிங்கவுக்கு தடை

விளை­யாட்டுத் துறை அமைச்­சரை குரங்கு என விமர்­சித்த இலங்கைக் கிரிக்கெட் அணியின் நட்­சத்­திர வேகப்­பந்து வீச்­சாளர் லசித் மலிங்­க­விற்கு 6 மாத காலம் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது. 

ஆனாலும் எதிர்­வரும் 30ஆம் திகதி ஆரம்­ப­மா­க­வுள்ள சிம்­பாப்வே தொட ரில் லசித் மலிங்க விளை­யா­ட­மு­டியும். சிம்­பாப்­வேக்கு எதி­ரான ஒருநாள் தொடர் முடிந்­ததும் மலிங்­க­விற்­கான தடைக் காலம் ஆரம்­ப­மாகும். 

அதனால் எதிர்­வரும் ஜூலை மாத இறு­தியில் நடை­பெ­ற­வுள்ள இந்­தி­யா­வுக்கு எதி­ரான தொடரில் லசித் மலிங்க விளை­யாட மாட்டார். 

அத்­தோடு நடை­பெ­ற­வுள்ள சிம்­பாப்­வேக்கு எதி­ரான முதல் ஒருநாள் போட்­டியின் சம்­ப­ளத்­தி­லி­ருந்து 50 வீத அப­ராதமும் மலிங்­க­விற்கு விதிக்­கப்­பட்­டுள்­ளது.

இங்­கி­லாந்தில் நடை ­பெற்ற சம்­பியன்ஸ் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி லீக் சுற் ­றோடு வெளி­யே­றி­யது. பாகிஸ்­தா­னுக்கு எதி­ரான போட்­டியில் இலங்­கையின் களத்­த­டுப்பு மோச­மாக இருந்­தது. முக்­கிய பிடி­யெ­டுப்­பு­களைத் தவ­ற­விட்­ட தன் கார­ண­மாக தோல்­வியைத் தழு­விக்­கொண்­டது. 

இதனால் இலங்கை அணி வீரர்கள் உடல் தகுதி குறித்து விசா­ரணை நடத்­தப்­படும் என்று விளை­யாட்­டுத்­துறை அமைச்சர் தயா­சிறி ஜய­சே­கர தெரி­வித்­தி­ருந்தார். 

இந்­நி­லையில் அமைச்­சரின் இந்தக் கருத்­துக்கு பதி­ல­ளிக்கும் வித­மாக பேசிய லசித் மலிங்க,  

நாற்­கா­லியை அலங்­க­ரிகப்­ப­வர்­களின் விமர்­ச­னத்தை நான் பொருட்­ப­டுத்­த­வில்லை. இது கிளியின் கூடு­பற்றி குரங்கு பேசு­வது போல் இருக்­கி­றது. கிளிக் கூடு பற்றி குரங்­குக்கு என்ன தெரியும் என்று கூறி இருந்தார். லசித் மலிங்­கவின் இந்த கருத்து பெரும் சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது.

இதை­ய­டுத்து மலிங்­க­விடம் விசா­ரணை நடத்த இலங்கைக் கிரிக்கெட் நிறு­வனம் உத்­த­ர­விட்­டது. விசா­ரணை நடத்த இலங்கை கிரிக்கெட் நிறு­வ­னத்தின் நிறை­வேற்று அதி­காரி ஆஷ்­லிடி சில்வா தலை­மையில் 3 பேர் கொண்ட குழு அமைக்­கப்­பட்­டது. 

இக்­குழு மலிங்­க­விடம் நேற்று விசாரணை நடத்­தி­யது. அதன்­போது தன் மீது சுமத்­தப்­பட்­டுள்ள குற்­றச்­சாட்டை லசித் மலிங்க ஏற்­றுக்­கொண்­டுள்ளார். அதன்­பி­றகு விசா­ரணை அறிக்­கை இலங்கை கிரிக்கெட் நிறு­வ­னத்­திடம் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளது. 

இந்த அறிக்­கையின் படி லசித் மலிங்க மீது கிரிக்கெட் நிறுவனத்தின் ஒப்­பந்த விதியை மீறிய குற்­றத்­திற்­காக ஆறு மாதம் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது.  அத்­தோடு முத­லா­வது ஒருநாள் போட்டி சம்­ப­ளத்தின் 50 வீதம் அப­ரா­தமும் விதிக்­கப்­பட்­டுள்­ளது. 

அதன்படி நடை பெறவுள்ள சிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் தொடரில் அவர் விளையாட முடியும். ஆனால் அதன்பிறகு நடை பெறவுள்ள இந்தியாவுக்கு எதிரான தொடரில் அவருக்கு விளையாட முடியாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. உண்மையை சொன்னாலும் தடையா?

    இதில் பாதிக்கப்படபோவது இலங்கை அணி மட்டுமே, மலிங்க இல்லை. மலிங்க சந்தோஷமான போய் Mumbai Indians காக விளையாடுவார்.

    ReplyDelete

Powered by Blogger.