Header Ads



முஸ்லிம்களுக்கு எதிரான அசா­தா­ரண சூழ்நிலை, ரணிலுடன் பேச தீர்மானம்

-MC.Najimudeen-

பாரா­ளு­மன்றில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் பிர­தி­நி­திகள் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­கவை அவ­ச­ர­மாகச் சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­து­வ­தற்கு தீர்­மா­னத்­துள்­ளனர். நாட்டில் தற்போது முஸ்­லிம்­களுக்கு எதி­ராக இடம்­பெற்­று­வரும் அசா­தா­ரண சம்­ப­வங்கள் தொடர்­பி­லேய பிர­த­மரைச் சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­த­வுள்­ளனர்.

பாரா­ளு­மன்றில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் பிர­தி­நி­தி­க­ளுக்­கி­டை­யி­லான சந்­திப்பு நேற்­று­முன்­தினம் மாலை பாரா­ளு­மன்றக் கட்­ட­டத்­தொ­கு­தியில் நடை­பெற்­றது.

அதன்­போதே குறித்த தீர்­மா­னத்­திற்கு வந்­துள்­ளனர். அச்­சந்­திப்பில் நல்­லாட்­சியில் முஸ்­லிம்கள் எதிர்­கொள்ளும் நெருக்­க­டிகள் குறித்து விரி­வாக ஆரா­யப்­பட்­ட­துடன் அதனைத் தடுப்­ப­தற்­கான விரை­வான நட­வ­டிக்­கைகள் தொடர்­பிலும் கவனம் செலுத்­தப்­பட்­டது.

 மேலும் கடந்த சில மாதங்­க­ளாக முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக இடம்­பெறும் அடா­வ­டித்­த­னங்கள் மற்றும் முஸ்லிம் வர்த்­தக நிலை­யங்கள் மீதான தாக்­குதல் தொடர்பில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க, சட்டம் ஒழங்கு மற்றும் தென்­பி­ராந்­திய அபி­வி­ருத்தி அமைச்சர் சாகல ரத்­னா­யாக்க, பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜய­சுந்­தர உள்­ளிட்­டோர்­க­ளுடன் ஏற்­க­னவே நடை­பெற்ற பேச்­சு­வார்த்தை தொடர்­பிலும் அவ­தானம் செலுத்­தப்­பட்­டது. 

 குறித்த பேச்­சு­வார்த்­தை­களின் போதும் அமைச்­ச­ர­வைக்­கூட்­டங்­க­ளின்­போதும் முஸ்­லிம்கள் மீதான அசம்­பா­வி­தங்­க­ளுக்கு எதி­ராக உட­னடி நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என தொடர்ந்து வாக்­கு­று­தி­ய­ளிக்­கப்­பட்­ட­போதும் வினைத்­தி­றன்­மிக்க எவ்­வித நட­வ­டிக்­கையும் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை எனவும் பிர­தி­நி­தி­க­ளினால் ஆதங்கம் வெளி­யி­டப்­பட்­டது.

 மேலும் கடந்த ஆட்­சியில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக கட்­ட­விழ்க்­கப்­பட்ட வன்­முறைச் சம்­ப­வங்களை அடி­கோ­லாகக் கொண்டு ஆட்­சிக்கு வந்த நல்­லாட்சி அர­சாங்­கமும் முஸ்­லிம்கள் விவ­கா­ரத்தில் கடந்த  ஆட்­சியின் பாணி­யினை பின்­பற்­று­வ­தனை ஒரு­போதும் அனு­ம­திக்க முடி­யாது. ஆகவே குறித்த விவ­காரம் தொடர்பில் பாரா­ளு­மன்றில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் பிர­தி­நி­திகள் அனை­வரும் ஓர­ணியில் திரண்டு சம­யோ­சி­த­மான முடி­வுக்கு வர வேண்டும் என்­கின்ற அழுத்­த­மான கருத்தும் சில பிர­தி­நி­தி­களால் முன்­வைக்­கப்­பட்­டது.

 எனவே  மருத்­துவப்  பரி­சோ­தனை மற்றும் ஐக்­கிய நாடுகள் சபையின் சமுத்­தி­ரங்கள், சமுத்திரவளங்களின் நிலையான அபிவிருத்தி, செயன்முறைகள் , பாதுகாப்பு தொடர்பிலான மாநாட்டில் கலந்துகொள்வதற்கு அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடு திரும்பியதுடன் அவரைச் சந்தித்து குறித்த விடயம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதாகத் தீர்மானிக்கப்பட்டது. 

7 comments:

  1. இதற்கு முன் நடந்த பேச்சுவார்த்தை... யாரை ஏமாற்றுகிறார்கள்... இவர்களுடைய தேவையும் இது தானே.. இவர்களால் எதுவும் செய்ய முடியாது...

    ReplyDelete
  2. Appo innum pesa illaiya!!!

    ReplyDelete
  3. madayanuhale.... innuma ivanuhala namburinga????

    ReplyDelete
  4. After speaking Ranils face will look like above

    ReplyDelete
  5. Nalla waruweenge da neenge

    ReplyDelete
  6. இல்ல பேச மாட்டாங்க

    ReplyDelete

Powered by Blogger.