June 15, 2017

பள்ளிவாசல்களில் பன ஒதுவது, ஏற்படப்போகும் ஆபத்து..!


அக்கறைப்பற்றில் நேற்று -14- நடந்த இப்தார் நிகழ்வில்  பௌத்த குருவினால்  பன ஓதப்பட்டுள்ளது. 

-Zafar Ahmed-

தற்போதைய புது ட்ரெண்டே பன்சலையில் இருக்கும் மதகுருமார்களை பள்ளிக்கு அழைத்து வந்து 'பன' சொல்லவைப்பது..இதனால் நல்லிணக்கம் ஆறாய் ஓடும் என்று நினைக்கிறார்கள் மார்க்கப் புரோகிதர்கள்..மத நல்லிணக்கத்தை கொடிகட்டிப் பறக்க வைக்க என்ன செய்யலாம்?

 சில ஆலோசனைகள்..

1 முஸ்லிம் வீடுகளில் எல்லாம் பெளத்த கொடிகள் ஏற்ற வைக்கலாம்..பெளத்த கொடி ஏற்க முரண்டு பிடிப்போருக்கு 'பள்ளி கஞ்சி வழங்கப்பட மாட்டாது' என்று அதிரடி அறிவிப்பை நோட்டீஸ் போர்டில் எழுதி ஒட்டலாம்..அப்படியும் திருந்தாதபட்சத்தில் பொலிஸில் காட்டிக் கொடுக்கலாம்.

2 'பெயர் மாற்றும் வாரம்' என்ற ஒன்றைப் புதிதாய் அறிமுகப்படுத்தலாம்..இதற்கு யாரும் பெரிசாய் மெனக்கிட தேவை இல்லை..உதாரணமாக ' மொஹமட் ரிஸ்வான்' என்பதை முதியலன்ஸாகே ரிஸ்வான் என்று சொல்லலாம்.பெயர் மாற்றப்பட்ட தினம் முதல் அவர் ஒரு வாரத்திற்கு முதியன்ஸலாகே இற்கு சொந்தம்...நமக்கு உரிமை கோரமுடியாது.

3 'புனித பிரித் நூல் கட்டும் தினம் ' என்ற ஒன்றைப் புதிதாய் ஆரம்பிக்கலாம்..மாதத்தில் ஒரு நாள் இலங்கை முஸ்லிம்கள் அனைவரும் கையில் பிரித் நூல் கட்ட வேண்டும்..

4 இறைச்சி வகைகளை உண்பது பெரும் பாவம் என்று அறிக்கைவிடலாம்..பெளத்தர்களின் மனம் கோணாமல் இருக்க இன்று முதல் தாவர உண்ணியாக மாறலாம்..மத நல்லிணக்கம் உச்சத்திற்கு ஏறினால் ,வாயில் உள்ள 4 வேட்டைப் பற்களையும் பிடுங்கி எறிந்து 'மத நல்லிணக்கத்துக்கு குந்தகம் விளைத்த சனியனே கெட்டு ஒழி ' என்று சொல்லலாம்..

5 பன்சலைகளில் அவர்களின் மத போதனை நடக்கும் தினங்களில் சுற்று வட்டாரத்தில் வசிக்கும் முஸ்லிம்கள் அனைவரும் அவர்களைப் போல வெள்ளை வெளேர் ஆடை அணிந்து பன்சலை செல்ல வேண்டும் என்று கட்டளையிடலாம்.போகாதோர்களை எல்லாம் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கும் படி பள்ளி நிருவாகங்களுக்கு ஆணையிடலாம்.

6 இறைவா ! இந்த முஸ்லிம்களிடத்தில் இருக்கும் சொரணை என்ற உணர்ச்சியை இல்லாமல் செய்துவிடுவாயாக ! என்று ஒவ்வொரு தொழுகையினதும் போதும் ஒப்பாரி வைத்து மன்றாடலாம்..'அடிமைத்தனத்தின் சாதகங்கள்' பற்றி வெள்ளிக்கிழமை ஜும்மாக்களில் பிரசங்கங்கள் நடத்தலாம்..

7 பள்ளிகளில் சந்தா அறவிடும் செயல்பாட்டோடு சேர்த்து பெரிய ஒரு உண்டியல் பெட்டியை அறிமுகப்படுத்தலாம்..அதற்கு காவலாய் ஒருவர் கையில் பெரிய பைலுடன் இருப்பார்..அதில் மாதத்திற்கு ஒரு தடவை காணிக்கை இட வேண்டும்.குறைந்த பட்ச நன்கொடை 500 ரூபாய்..இவ்வாறு சேரும் பணம் அவர்களின் தன்சல் உற்சவங்களின் போது வழங்கப்படும்..

8 அடிக்கடி டீவிக்களில் மத நல்லிணக்க விவாதங்கள் கோரலாம்..அங்கெல்லாம் போய் மூச்சுக்கு மூவாயிரம் தடவை ' அப்பே ஹாமுதுருவனே ' என்று கதறி விசுவாச பக்தியைக் காட்டலாம்..தொட்டு முத்தமிட்டு பரவசம் அடையலாம்.

9 சிங்கள யுவதிகளுடன் எவனாவது காதல் வயப்பட்டால் ஊர் நிர்வாகம் கடுமையாய் விசாரணை நடத்தி சம்பந்தபட்ட ரோமியோவின் கண்ணைப் பிடுங்கிவிடலாம்..மதநல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும் கண் எதுக்கு ?

10 சிதிலமடைந்த விகாரைகளில் ஞாயிறு மத போதனை வகுப்புகள் நடை பெறுவது சிரமமாய் இருந்தால் அத்தகைய வகுப்புக்களை பக்கத்தில் இருக்கு பள்ளியில் நடத்தலாம்.அந்த நேரத்தில் முஸ்லிம்கள் பள்ளிக்கு தொழ வருவது தடை மட்டுமல்ல மன்னிக்க முடியாத குற்றம்..

14 கருத்துரைகள்:

Cheap article.. JM why publish these kind of garbage..

இலங்கையில் உடனடியாக நோன்பு இல்லாத எவருக்கும் இப்தார் நிகழ்ச்சிகள் நடத்துவதை நிறுத்த வேண்டும் இஸ்லாத்தை குழி தோண்டி புதைத்து நல்லிணக்கம் தேவை இல்லை ,கஞ்சி விற்பவன்,கள்ள மரம் ஏற்றுபவன் கள்ளக் கடத்தல் செய்வோன் எல்லாம் சேர்ந்து ஆரம்பித்த இந்த காவாலி வேலை இப்போது மதத்தை அழிக்கும் காரியம் நடக்கிறது .ஏன்டா மாடுகளா அல்லாஹ் கூறுகிறான்,அல்லாஹ்வை விடுத்து வேறு தெய்வத்தின் பெயர் சொல்லி அழைப்பவனை விட அநியாயக்காறன் யார்.அல்லாஹ் பெயர் மட்டும் உச்சரிக்கப்பட வேண்டிய பள்ளியில் புத்தர் பெயர் கூறி அழைக்கப்படுகிறது ,இதை நடத்தின மௌலவிகளையும் நிருவாகிகளையும் முர்தத் என்று பட்டம் கொடுத்து மீண்டும் ஷஹாதா கலிமா சொலீலி இஸ்லாத்தில் எடுக்க வேண்டும் பொது மன்னிப்பு கேட்க வேண்டும்

who is this Editor of Jaffna Muslim news...don't publish this kind of mad news.

Bullshit article. JM stop publishing such rubbish

அல்லாஹ்வுக்காக இந்த மாதிரியான பேய்த்தனமான மொக்கு கட்டுரைகளை பிரசுரிக்க வேண்டாம்.

வெள்ள நிவாரணப்பனிக்கு சென்றவர்கலுக்கு பன்சலயில் தொழுகைக்கு இடம் கொடடுத்தார்களே. பன்சலையில் நடைபெற்ற பல நிகழ்வுகலில் அரபி மொழியில் துவாப்பிரார்த்தனை செய்தார்கலே அதேபோலதான் இதுவும் ஒன்று. சிலரின் செயல்ப்பாட்டால் எமது சமூகம் ஏனைய சமூகங்கலில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

Very good article அதோடு மவ்லூது கந்திரி பாத்திஹாக்கு பதிலாக பனயே வைத்துக்கொல்லலாம்

மத நல்லிணக்கம் என்ற பெயரில் கரைந்து போகும் முட்டாள் கூட்டத்தை எள்ளி நகையாடி எழுதப்பட்ட அசத்தல் டிப்ஸ்களே இவை..இந்த லாஜிக்கோ, நகைச்சுவை உணர்வோ தெரியாத ஒரு கூட்டம் புரிந்து கொள்ளாமல் இங்கே கம்பு சுத்தி இருப்பது தான் வேதனை..எந்த மாதிரியான மனநோயாளிகளுடன் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் என்று புரிகிறது..

இங்கே குறிப்பிடப்பட்ட 10 விடயங்களும் கலாய்த்தல் என்ற வட்டத்தில் அடங்குகிறது..எவனாவது இவைகளை செயல்படுத்த சொல்வானா ? புத்தி எங்கே போச்சு? , ஐயா மேன்மக்களே , ஒரு விடயம் முதலில் புத்தகங்களை வாசியுங்கள், நாலு விடயங்களை அறிந்து கொள்ளுங்கள்..

Well said...but some of traditional muslims started this trend.. and other stupids too follow. Allah will take care of them.. let them recite ' sura al kaafirun'...

Admin please remove this article

ஹாமதுருகிட்ட மைக்க கொடுத்தா பன ஓதாம பாங்கா சொல்லுவான்

I absolutely agree with you brother. These puppets don't know even the fundamental of Islam. Islam never allow shirk under any circumstances. The culprits who organized this shirk must be punished in front of public.

I absolutely agree with you brother. These puppets don't know even the fundamental of Islam. Islam never allow shirk under any circumstances. The culprits who organized this shirk must be punished in front of public.

Post a Comment