June 08, 2017

முஸ்லீம்களால் கிழக்கில், தமிழர்கள் கொல்லப்படுவதாக போலிப் பிரச்சாரம்..!

-எம்.எல்.எம். அன்ஸார்-

"ஆபிரிக்காவில் நடந்த வாகன விபத்தொன்றின் கோரப் படமொன்றை இணைத்து முஸ்லீம் அடிப்படைவாதிகளால் கிழக்கில் தமிழர்கள் கொலை செய்யப்பட்ட காட்சியாக சித்தரித்து சில விசமிகள் இந்தக் கட்டத்தில் செய்து கொண்டிருக்கும் பிரச்சாரத்தின் அந்தரங்க காரணங்களை நாம் அறியாமலில்லை."

வபா பாரூக் Waffa Farook அவர்களின் இந்தப் பதிவை படித்த போது எட்டு வருடங்களுக்கு முன் கொழும்பில் வைத்து ஓய்வுபெற்ற இராஜதந்திரி ஒருவர் சொன்ன சம்பவம் நினைவுக்கு வந்தது.

பொய்ப் பிரச்சாரம் செய்வதன் மூலம் தமக்குரிய அனுதாபத்தை தேடி அதனூடாக தேவையான இலாபங்களை அடையக் கூடியவர்கள் விடுதலைப் புலிகள் என்ற ஒரு கருத்து சர்வதேசத்திடம் இருக்கிறது.

இலங்கை அரச படையினர் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்களை கொடூரமாக சித்திரவதை செய்து கொலை செய்வதை விபரிக்கும் ஆவணப் படம் ஒன்றை விடுதலைப் புலிகளின் ஊடகப் பிரிவு தயாரித்திருந்தது.

இந்த ஒளிப்படத்தை லிபியாவில் உள்ள வெளிநாட்டு தூதுவர்களுக்கு காண்பிப்பதற்கான ஒரு நிகழ்வை அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள்.

இதில் இலங்கை தூதுவரும் கலந்து கொண்டிருந்தார்.

படம் ஓடத்தொடங்கிய ஆரம்பத்தில் சில தமிழ் இளைஞர்களின் நாக்குகள் கூரிய ஆயுதங்களால் குத்தப்பட்டும், இன்னும் சிலரின் கன்னங்கள் கூரான கம்பிகளால் கிழிக்கப்பட்டும் அவர்கள் வதை செய்யப்படுவது போல காண்பிக்க பட்டதாம் .

அடுத்ததாக கூரான கம்பிகளை வளைத்து முதுகில் குத்திக் கிழித்து அந்தக் கம்பிகளில் கயிற்றைக் கட்டி தமிழர்களை வீதியில் இரத்தம் வழிய வழிய ஓட விட்டு சித்திரவதை செய்வதாக விபரிக்கப்பட்டதாம்

இவற்றைப் பார்த்த வெளிநாட்டு இராஜதந்திரிகள், தமிழர்களுக்கு எதிராக இலங்கையில் இவ்வளவு மோசமான கொடூரங்கள் இடம்பெறுகின்றனவா? என்று இலங்கைத் தூதுவரிடம் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.

இவை அனைத்தும் முழுக்கப் பொய். இந்த நிகழ்வுகள் தமிழர் பிரதேசங்களில் தொடர்ச்சியாக இடம்பெறுகின்ற சமய அனுஷ்டானகள். வேண்டுதலுக்காக கோயில் விஷேடங்களின் போது தமிழர்கள் இவ்வாறு தம்மைத்தாமே வதைத்துக் கொண்டு மார்க்கக் கடமையாக இதை செய்து வருகிறார்கள். புலிகள் யாருக்காக போராடுகிறார்களோ அதே தமிழ் மக்கள் பயபக்தியோடு தாம் விரும்பிச் செய்கின்ற சமய அனுஷ்டானங்களை இவ்வளவு கேவலமாக திரிவுபடுத்தி தமது பொய்ப் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தி இருக்கிறார்கள் என்று அவர் விளக்கிக் கூறினாராம்.

இதனையடுத்து இந்த நிகழ்வு புலிகளுக்கு வெற்றியளிக்காமல் பிசுபிசுத்துப் போய்விட்டது .

08-06-2017

6 கருத்துரைகள்:

அப்படி என்றால் இப்போது முஸ்லீம்களிற்கு எதிரக நநடை பெறும் சம்பவங்களும் அனுதாபத்தை பெற முஸ்லீம்களே செய்கின்றனரா.?

காத்தான்குடியில் செய்த மா பாதக கொலைகளையும், யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்களை துரத்தியடித்து அவர்களின் சொத்துக்களை கொள்ளையடித்து அவர்களின் சாபத்திற்கு உள்ளாகியதையும், தற்கொலை குண்டு தாக்குதல் எனும் கோரமான கொலைவெறிச்செயல்களையும் மறைத்து இவர்களின் தோல்வியை அனுதாபமாக மாற்றிக்கொள்ள இன்று புலி பயங்கரவாதிகளும் டயஸ்போறாக்களும் கச்சிதமாகவே காய்களை நகர்த்திக்கொண்டிருக்கின்றனர். இதில் வெற்றியும் கண்டுகொண்டே வருகின்றனர்

30வருட யுத்தத்தில் மூவின மக்களும் இழந்தவை ஏராளம். தமிழர் தரப்பில் ஒப்பீட்டளவில் சற்று அதிகம்தான். இருப்பினும் இதனை வாய்ப்பாக பயன்படுத்தியவர்களும் தமிழர்களே. மேற்குலகில் குடியேற்றம் , இந்தியாவின் அனுசரிப்பு , தாராள நிதிதிரட்டல் , கப்பம் ,கொள்ளை என ஒரு தரப்பு நன்றாகவே கொளுத்திருந்தது. ஆனால் ஏழைகளான மற்றொரு தரப்பு அரசை திட்டித் தீர்த்தாலும் அவர்களிடமும் என்ஜிஓ க்களிடமும் இருந்து நிறையவே நிவாரணங்களையும் பெற்று வாழ்க்கையை ஓட்டிவந்தன.
யுத்தம் முடிவுக்கு வந்ததும் யுத்த்த்தையே பிழைப்பாக பயன்படுத்திய புலிப்பாசிச பாசறையில் பயின்ற குமரன்களுக்கு இன்னும் பல யுத்தங்களும் கலகங்களும் தேவைப்படுகிறது. இதற்காக தனது இனத்தை தானே அழித்துவிட்டு பிறர் மீது குற்றம் சுமத்தவும் தயங்காது. இதற்காக திருட்டுத்தனமாக எதையும் செய்ய துணிந்தவர்கள் இப்பாசறைக் குமரன்களிடம் ஏராளமானவர்கள் உண்டு.
எனவே இத்தகைய கயவர்களின் இழிசெயல்களை துப்புத்துலக்கி உரிய வேளையில் உரிய தரப்புக்களுக்கு தெரியப்படுத்துவதற்கு தயார் நிலையில் முஸ்லிம் சமூகம் இருப்பது அவசியம்.
சில வேளைகளில் கிழக்கிலுள்ள பன்சலைகளில் ஏதாவது தாக்குதல்களை செய்துவிட்டு அதனை முஸ்லிம்களின் தலையில் போடுவதற்கு ஏதாவது தொப்பி போன்ற பொருள்களை அவ்விடத்தில் விட்டுச்செல்லலாம். எனவே ஒவ்வொரு விடயத்திலும் மிக அவதானமாக இருப்பது அவசியமாகும். தேவையாயின் சிங்கள சமூகத்துடன் இணைந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது பற்றியும் சிந்திக்க வேண்டும்.

இந்த கட்டுரையே முழுப்பொய்.

ஆனால், இப்படியான காட்டுமிரண்டித்தனமான தண்டணைகளை ISIS ம், வேறு சில மு... பயங்கரவாதிகளும் வழமையாக தமது கைதிகளுக்கு செய்வார்கள். இவற்றில் சில YouTupe யிலேயே உள்ளன.

ஏன் திருகோணமலையில் பள்ளியைத் தாக்கிய ஒரு இந்துக்காவி நாயை பொலிஸார் கைது செய்தது தெரியாது போல!!!!

Mr. Kumar, there is no any needs to get some benefits to Muslim from others. Allah will helps us.

Post a Comment