Header Ads



பித்ரா கொடுக்கமுன், தயவுசெய்து சிந்தியுங்கள்...!

-ARM INAS-

நபி (ஸல்) அவர்கள் பெருநாள் தர்மத்தைக் கடமையாக்கி, இன்றைய தினம் ஏழைகளைத் தேவையற்றவர்களாக்குங்கள்” என்று ம் கூறினார்கள். அறிவிப்பாளர், இப்னு உமர் (ரலி) நூல்கள்: பைஹகீ, தாரகுத்னீ

அனுபவம்

நோன்பு 25 இருக்கும் “ உங்கள் பித்ராவை பணமாகவும் தரலாம். அரிசியை மட்டும் தான் பித்ராவாக தர வேண்டும் என்ற அவசியமில்லை. இதற்கு சார்பாக இமாம்கள் பலர் பத்வா வெளியிட்டுள்ளனர், மத்ஹ்ப்களிலும் அதற்கான அனுமதியுள்ளது, பித்ராவின் நோக்கத்தையே நாம் பார்க்க வேண்டும் பித்ரா நடைமுறைபடுத்தப்படுதன் மூலம் இஸ்லாம் அடைய நினைக்கும் இலக்கையே பார்க்க வேண்டும் என்று கூறி ஒரு சாரார் பித்ராவை பணமாக சேகரித்து. 29 ஆம் அன்று இரவு அவற்றின் மூலம் ஒரு குடும்பத்துக்கு பெருநாளைக்கு சமைக்கத் தேவையான அத்தனை பொருட்களையும் கொள்வனவு செய்து பொதி செய்து

அந்த பொதியுடன் சேர்த்து 1000 பணத்தையும் கையில் வழங்கினர். சுமார் 150 குடும்பங்களுக்கு இவர்கள் இவ்வாறுபெருநாளைக்கு சமைக்கத் தேவையான பொருட்கள் அடங்கிய பொதியை வழங்கினர். இந்தப் பொதியை பெற்றவர்கள் பித்ராவாக வழங்கப்பட்ட பொருட்களை பெருநாளன்றே சமைத்து சாப்பாட்டுக்கு எந்த செலவுமின்றி பெருநாளன்று  சமைத்து உண்பதனை காண முடிந்தது. அப்படி இப்பொதியை பித்ராவாக பெற்ற ஒரு ஏழை குடும்பஸ்தர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில்

“நீங்களும் வெறும் அரிசை தந்து விட்டுப் போவீர்கள் என்று நினைத்தேன். பலரும் அரிசை அள்ளி அள்ளி தந்தாலும் நமக்கு நல்ல கரி வாங்க பணம் இல்லை என்பதனை யாரும் யோசிப்பதில்லை. நீங்கள் பித்ராவை நடைமுறைபடுத்தும் இம்முறை உண்மையில் எங்களைப் போன்ற ஏழைகளுக்கு மிக பயனுள்ளதொரு முறை என தெரிவித்தார்”

மேற்கூறப்பட்ட ஏழைகளின் தேவையை இல்லாமல் செய்யுங்கள் என்ற ஹதீஸின் இலக்கை பூர்த்தி செய்யும் நடைமுறை எது?  ஏழைகளுக்கு அதிகம் பிரயோசனமானது எந்த நடைமுறை என நம்மால் தெளிவாக உணர்ந்து கொள்ள முடியும். நபியவர்கள் மேற்குறிப்பிட்ட ஹதீஸில் அடைய விரும்பும் இலக்குகளான ஏழைகள் யாரும் பெருநாளன்று பசித்திருக்க கூடாது, பெருநாளன்று ஏழைகள் சந்தோசமாக இருக்க வேண்டும்

என்ற இந்த உயர் இலக்குகளை அடைய பொருத்தமான நடைமுறை எதுவென்று நாம் தெரிவு செய்து. குறிப்பிட்ட நடைமுறையை நாம் மஸ்ஜித்வாரியாக நடைமுறைபடுத்தி அடுத்த ரமழானில் நம் நாட்டில் வாழும் அனைத்துஏழைகளுக்கும் 3ஆம் அனுபவத்தில் குறிப்பிட்டவாறான ஒரு அற்புதமான அனுபவத்தை வழங்க  முயற்சிப்போம்.

ரமழான் மாதத்தில் பாதை முழுதும், மஸ்ஜித் வாயில்கள் முழுதும் பிச்சைக்காரர்கள் குவிந்திருப்பதனை பார்த்து நாங்கள் நொந்துகொள்கிறோம் குறை கூறுகிறோம். அல்லாஹ் உயர் இலக்குகளுடன் நமக்கு கடமையாக்கிய ஸகாத், ஸகாதுல் பித்ர் போன்ற கடமைகளை நாம் மிகப் பிழையாக நடைமுறைபடுத்துவதன் ஒரு பயங்கர விளைவே சமூகத்தின் இந்த நிலைமைக்கு காரணம் என்பதனை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

குறைந்தது இம்முறையாவது

மஸ்ஜித் வாரியாகவோ, குடும்பம் வாரியாகவோ, நண்பர்கள் வாரியாகவோ உங்கள் ஸகாதுல் பித்ரை பணமாகவோ, பொருளாகவோ சேர்த்து அல்லது இவற்றை விட ஒரு சிறந்த நடைமுறையை நீங்களாகவே சிந்தித்து உங்களுக்கு தெரிந்த அல்லது உங்கள் குடும்பத்திலேயே உள்ள ஏழை அங்கத்தவனின் பெருநாள் தேவையை நிவர்த்தி செய்து மேலே குறிப்பிட்ட ஹதீஸின் இலக்கை அடைந்துகொள்ள முயற்சிப்போம். இந்த விடயம் தொடர்பில் சமூகம் கட்டாயம் கரிசணை செலுத்தி தெளிவு பெற முயற்சிக்க வேண்டும். இல்லையெனில் ஒரு ஏழை தனது கவிதையில் பாடிய நிலை தான் சமூகத்தில் பரவலாக இருக்கும்

“நோன்பு பெருநாளன்று கிடைத்த பித்ரா அரிசை வைத்துக் கொண்டு காத்திருக்கிறோம். ஹஜ்ஜூப் பெருநாளன்று குர்பான் இறைச்சி வந்து சேரும்வரை”

அரிசியுடன் இறைச்சி கரி சமைத்து சாப்பிட”

1 comment:

Powered by Blogger.