June 02, 2017

பள்ளிவாசலுக்கு முன், நின்ற பௌத்த பிக்குகள் - அவசரப்பட்ட முஸ்லிம்கள்

-Ahmed Fayas-

இன்னிக்கு -02-06-2017 இப்ப மஃரிப் தொழுதுட்டு வெளியே வரும் போது பள்ளிக்கு முன்னால் ஒரு வேன் நிறுத்தி இருந்தது. அதில் ஒரு ஆரேழு பௌத்த பிக்குகள் உட்கார்ந்திருந்தனர்.

இப்போ தொழுதுட்டு வெளியே வார அம்புட்டு பேரும் கூடி கூடி கதைச்சிட்டு இருக்கானுங்க. அதிலும் இங்கால ஒருத்தன் "இன்னிக்கு நான் செத்தாலும் சரி, பள்ளிக்கு கை வைக்க உட மாட்டேன்" என ஜிஹாத் பிரகடனம் செய்ய, அங்கால ஒருத்தன் யார் யாருக்கோ கோல் எடுத்து "மச்சான் பள்ளிக்கிட்ட போத்தினவங்க வந்தீக்காங்க, எதுக்கும் "சாமான்" ஐ ரெடி பண்ணி வை" என அனல் பறக்க கட்டளை இட்டுட்டு இருக்கான்.

திடீரென்று பள்ளியிலிருந்து ஒரு மனுசன் தொழுதுட்டு வர வேனுக்கு வெளியே நின்று கொண்டிருந்த ஒரு ஹாமுதுரு அவரைப் பார்த்து

"மல்லி, ஆகம கடயுது இவரத?" (தம்பி,மார்க்க வேளை முடிஞ்சா?"

ஒவ் ஹாமுதுருனே,அபி யமு ( ஆமாம் ,நாங்க போவோம்)

பிறகு அந்த மனுசன்ட விசாரித்துப் பார்த்தால் அவர்ட வாகனத்துல பிக்குகள் ஒரு குழு ஹயர் வந்தாங்களாம், இனி ஒங்கட நோம்பு மாசம் என்பதால பள்ளில நிறுத்தி,  நோம்பையும் தொறந்துட்டு தொழுதுட்டு வரும்படி அந்த பிக்குகளே இவர்ட சொன்னாங்களாம்.

இந்த கூத்தையெல்லாம் பார்த்துட்டு வீட்டுக்கிட்ட வரும்போதே கட்டார்ல இருந்து IMO இல் ப்ரண்ட் ஒருத்தன் கோல் பண்றான்

"என்ன மச்சான்? 

ஊரில் பிரச்சினையாமே? 

அவங்கட பெரிய ஆக்கள் ஒரு வேனுக்கு கத்தி பொல்லோட வந்தாமே?"

#எவன்டா சொன்னது இந்த சமூகத்திற்கு ஒரு ஊடகம் தேவை என்டு, அதான் நாங்க எல்லாரும் இருக்கிறோமே ஒன்றை ஒம்பதாக்கி சொல்ல??

12 கருத்துரைகள்:

எழுதியவர் நல்லா பெரும்பான்மைக்கு வால் பிடிக்கிறாரு. இப்ப உள்ள நிலைமைக்கு பொது மக்கள் அப்படித்தான் முடிவு எடுப்பார்கள்.

Sometime small panics this not big deals!

தப்பு நம்மவார்களில் இல்லை இதே உடையில் ஞானப் பயங்கரவாரதிகள் திரிவதால்தான் சந்தேகம்,அரண்டவன் கண்ணுக்கு இருண்டது எல்லாம் பேயாம்.

This is our foolish people. ...... Islam mean peace not war

இதுதான் நம்ம ஊரு புதுனம்

Hmmm. What ever we should be on alert.

It is real, we can not believe Any HAMATHURU nowadays

BulBulli,

Panic has no sizes , it all has one FREE SIZE !But under
the present situation , Muslims getting nervous is,
understandable . Nobody should expect Muslims to behave
perfect , specially under intimidation by a gang with
indirect support from the authorities of law and order.

இப்படியான வீரமுள்ள பொங்கி எழும் எமது சமூக பற்றுள்ளவர்களை தயவு செய்து இது போன்ற மொக்க கட்டுரைகளால் முடக்கிவிடாதீர்கள், ஒரு கட்டத்தில் திருப்பி அடிப்பதற்கு இது போன்ற உண்மையான 4 வீரர்களே தேவை அன்றி உங்களைப்போன்ற வெறும் எதிரிகளை தூக்கிப்பிடிகும் எழுத்தாளர்களல்ல.

இதில்வேறு பயத்தின் உச்சகட்டமாக உள்ளதயெல்லாம் "வெல்ல நிவாரணம்" என்று எமது பாதிக்கப்பட்ட உடன் பிறப்புக்களுக்கு கொடுக்காமல் பன்சலை முழுக்க கொடுத்து குவின்கிறார்கள்.

Post a Comment