Header Ads



பொது எதிரியை அடையாளம் காண, ஒன்றுபட வேண்டும் - அயதுல்லா காமெனி

காஷ்மீரில் முஸ்லிம்களை ஒடுக்கக் கூடியவர்களுக்கும், சர்வாதிகாரிகளுக்கும் எதிராக இஸ்லாமிய உலகம் வெளிப்படையாக குரல் கொடுக்க வேண்டும் என்று ஈரானின் மத தலைவர் அயதுல்லா காமெனி வலியுறுத்தியுள்ளார். 

இது தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள அயதுல்லா காமெனி, 

வளைகுடா நாடான பஹ்ரைன், காஷ்மீர், யேமன் உள்ளிட்ட பகுதிகளில் முஸ்லிம்கள் ஒடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

இப்பகுதிகளில் ரம்ஜானில் முஸ்லிம்களைத் தாக்கிய ஒடுக்குமுறையாளர்களுக்கும், சர்வாதிகாரிகளுக்கும் இஸ்லாமிய உலகம் வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். 

முன்னதாக தனது ரம்ஜான் உரையில், பொது எதிரியை அடையாளம் காண்பதில் இஸ்லாமிய உலகம் ஒன்றுபட வேண்டும் என கேட்டுக்கொண்டார். இஸ்லாமிய உலகின் முதல் பொது எதிரி இஸ்ரேல் என தெரிவித்த அயதுல்லா காமெனி, அந்நாட்டிற்கு எதிராக புனிதப் போரினை நடத்த வேண்டியது அனைவரது கடமை என குறிப்பிட்டார். 

6 comments:

  1. காஷ்மீர் அனைத்து உரிமைகளும் பெற்றுள்ள இந்திய மாணிலமாகும். இங்கு PC-களில் இதில் கால்வாசி கூட இல்லை.

    இந்தியாவின் மேலுள்ள தனிபட்ட பகை/பொறாண்மையினால் பாக்கிஸ்தான் காஸ்மீரில் பிரிவினையை ஊக்குவித்து, தீவிரவாதிகளுக்கு ஆயுதங்கள் கொடுத்து வருகின்றது.

    இந்திய இராணுவத்துக்கும் தீவிரவாதிகளுக்கும் நடக்கும் சண்டையின்போது அப்பாவி மக்கள் ஆயிர கணக்கில் கொள்ளப்படுவது உண்மை தான்.

    ஆனால், இதில் பாக்கிஸதானும் பொறுப்பாகும்.

    ReplyDelete
  2. ஒன்றுபட்டால் உன்டு வாழ்வு. சவுதி இஸ்ரேலுடன் கள்ளக்காதல்.அத்தோடு சுன்னி முஸ்லிம் சியாக்களை காபிர்களென்றும் சியா முஸ்லிம் சுன்னி முஸ்லிம்களை காபிர்களென்றும் கூவித்திரிவதால் மென்மேலும் நாம் பாதிக்கப்படடுவோமே தவிர பயன் ஒன்றுமில்லை. பகையை மறந்து ஒன்றுபட்டால் உலகில் நாம் எதிர்நோக்கும் பல பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ளலாம்.

    ReplyDelete
  3. All those do shirk openly with knowledge are not muslims. Worshipping idles, stone, dead people in gravesend, sunmekume, moon, fire or any creations of God are doing shirk. So grave worshipper are in the same pit too.

    Mr La reef Tawhend and Shirk are opposite to it each other. So there canot be religios unity o between people who worship Allah purely and those who keeps grave and it's dead people in the status of worshiping.

    Note. Wored unity is different from religious unity. Media konowedge is not enough to understand islam and it's teaching.

    May Allah guide us to pure islam as was practiced by Muhammed and his companions and not to love those who make majority of Sahara based to be k afire (asthahfirullah)

    ReplyDelete
  4. அங்கஐன் ஐக்கிய நாடுகளின் காஸ்மீர் தொடர்பான சர்வஐன வாக்கெடுப்புப் பிரேரணை தொடர்பான 1948 ஏப்ரல் 13ம் திகதிய பிரேரணையை நடைமுறைப்படுத்தாமல் பிற்போட்டு மக்களைக் கொன்று குவிப்பது பாக்கிஸ்தானா இந்தியாவா? முதலில் வரலாற்றையூம் உண்மையையூம் தெரிந்து கொள்ளுங்கள் அதன் பின்னர் எழுதுங்கள் வளம் மிக்க காஸ்மீரை அவர்கள் விரும்பினால் இந்தியாவூடன் அல்லது பாகிஸ்தானுடன் இணையவூம் அல்லது சுயாதீன ராட்சியமாக செயற்பட அந்த மக்களின் சர்வஐன வாக்கெடுப்பு மூலம் செயற்படுத்தப்படவேண்டும் இதை மறுத்து இரானுவத்தைப் பாவித்து அடக்குவது யார் இந்தியாவா பாகிஸ்தானா? (இந்தியாவூம் பாகிஸ்தானும் சுதந்திர நாடுகளாக உருவாகும் போது காஸ்மீர் தனி நாடாகவே இருந்தது)

    ReplyDelete
  5. அங்கஐன் ஐக்கிய நாடுகளின் காஸ்மீர் தொடர்பான சர்வஐன வாக்கெடுப்புப் பிரேரணை தொடர்பான 1948 ஏப்ரல் 13ம் திகதிய பிரேரணையை நடைமுறைப்படுத்தாமல் பிற்போட்டு மக்களைக் கொன்று குவிப்பது பாக்கிஸ்தானா இந்தியாவா? முதலில் வரலாற்றையூம் உண்மையையூம் தெரிந்து கொள்ளுங்கள் அதன் பின்னர் எழுதுங்கள் வளம் மிக்க காஸ்மீரை அவர்கள் விரும்பினால் இந்தியாவூடன் அல்லது பாகிஸ்தானுடன் இணையவூம் அல்லது சுயாதீன ராட்சியமாக செயற்பட அந்த மக்களின் சர்வஐன வாக்கெடுப்பு மூலம் செயற்படுத்தப்படவேண்டும் இதை மறுத்து இரானுவத்தைப் பாவித்து அடக்குவது யார் இந்தியாவா பாகிஸ்தானா? (இந்தியாவூம் பாகிஸ்தானும் சுதந்திர நாடுகளாக உருவாகும் போது காஸ்மீர் தனி நாடாகவே இருந்தது)

    ReplyDelete

Powered by Blogger.