Header Ads



முஸ்லிம்கள் பற்றி, ஜனாதிபதி கண்திறக்க மறுப்பது ஏன்..?


மைத்திபால சிறிசேன ஆகிய நான் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்திருந்தால் புதைகுழியில் புதைக்கப்பட்டிருப்பேன் அல்லது சிறை வைக்கப்பட்டிருப்பேன். இது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா கூறிய பிரபல கூற்றுக்களாகும்.

ஜனாதிபதி மைத்திரி புதைக்குழிக்கு செல்லாமலும், சிறைவைக்கப்படாமலும் தடுப்பதில் முக்கிய பங்காற்றிய பெருமை முஸ்லிம்களையே சாரும். பெறுமதிமிக்க வாக்குகளை வாரிவாரி வழங்கி மைத்திரியை, முஸ்லிம்கள் ஜனாதிபதியாக்கினார்கள். அப்படிபட்ட ஜனாதிபதி தற்போதெல்லாம் முஸ்லிம் விவகாரங்களில் கண்களை திறக்க மறுப்பது ஏன், என முஸ்லிம் கவுன்சில் தலைவர் என்.எம். அமீனை ஜப்னா முஸ்லிம் இணையம் தொடர்புகொண்டு கேட்டபோது அவர் கூறிய ஒரு சம்பவத்தை இங்கு பகிர்ந்து கொள்கிறோம்..!

சில மாதங்களுக்கு முன் கிண்ணியாவில் டெங்குவுக்கு ஆட்பட்டு 14 முஸ்லிம்கள் வபாத்தாகினர். இது ஒரு பேரனர்த்தம். முஸ்லிம் ஊடகங்கள் மாத்திரமே இதற்கு முக்கியத்துவம் வழங்கி செய்திகளை வெளியிட்டன.

இந்நிலையில் நான் ஒருமுறை மவ்பிம என்ற சிங்கள பத்திரிகை ஆசிரியரை தொடர்புகொண்டு கிண்ணியாவில் டெங்குவினால் 14 முஸ்லிம்கள் வபாத்தாகியுள்ளனர். அங்குள்ள வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகள் என பல விடயங்களை கவலையுடன் அவருடன் பகிர்ந்து கொண்டேன்.

அடுத்தநாள் மவ்பிம பத்திரிகை இதனை தலைப்புச் செய்தியாக வெளியிட்டது. 

ஜனாதிபதியின் கவனத்திற்கு இது எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் கண்கள் திறந்தன, உத்தரவுகள் பறந்தன,  அதிகாரிகள் அங்கு ஓடினார்கள், இறுதியில் கிண்ணியாவுக்கு பறந்துசென்று நிலைமையை அவதானித்தார் ஜனாதிபதி. 

முஸ்லிம்கள் பெருமளவு டெங்குவுக்கு வபாத்தாகிய செய்தியை சிங்கள ஊடகம் வெளிக்கொண்டு வந்தமையே, ஜனாதிபதி இதில் தலையிட முதன்மை காரணமாக அமைந்தது.

முஸ்லிம் சமூகம் ஆட்சியாளர்களை மட்டும் குறை சொல்வதில் பயன் இல்லை. நமது பிரச்சினைகள் அவர்களை சென்றடையவில்லை. முஸ்லிம் சமூகம் ஆட்சியாளர்கள் மீது ஆத்திரம் கொண்டிருப்பதுகூட ஜனாதிபதிக்கு தெரியாது. இதுதான் யதார்த்தம். நிலைமை இப்படித்தான் இருக்கிறது.

பெரும்பாலான சிங்களவர்கள் இனவாதமற்றவர்கள். நாம் நாட்டுக்கு ஆற்றிய சேவைகள் சிங்களவர்களை சென்றடையவில்லை. நமது நிகழ்கால பிரச்சினைகள் பற்றி ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் ஏன் சிங்கள மக்களுக்குக்கூட தெரியாது. இந்நிலை மாற்றியமைக்கப்பட வேண்டுமாக இருந்தால் நம்மைப்பற்றி, நமது பிரச்சினைகளை சிங்கள மொழியில், சிங்களவர்களுக்கு சொல்ல மிக பலமான ஒரு ஊடகம் தேவை.

நாட்டில் 3400 க்கும் அதிகமான அரபு மத்ரஸாக்கள் உள்ளன. ஆனால் சிங்கள மொழியில் முஸ்லிம்களுக்கு  என ஒரு ஊடகம் இல்லை. கொழும்பு சிலேஐலண்டில் 40 முஸ்லிம் குடும்பங்களுக்கு ஒரு மலசலகூடம்தான் உள்ளது. இதுதூன் நமது சமூகத்தின் நிலைமை என கவலையுடன்  கூறிமுடித்தார் என்.எம். அமீன்.

7 comments:

  1. இவருடைய //ஆறு கடக்கும் வரை சித்தப்பா, ஆறு கடந்தா அப்பப்பா// என்ற மனோநிலை மயிந்தையோடு அப்பம் சாப்பிடும் போதே விளங்கிட்டு. இனி என்ன செய்ய மயிந்தை வீடு போக வேண்டுமே என்பதே இவருக்கு வாக்களித்த காரணமாப் போச்சு. இவர் கடும் பௌத்த சார்பான ஒரு மனிதனும், முடிவெடுக்கும் வல்லமை இல்லாத பதர் நிஇருவாகியிம் கூட. இவரை நம்பி இனி பலனே இல்லை மக்களே. இவர் நடிகர் திலகம். பொதுவான ஒரு கதிரையிலிருந்து கொண்டு பக்கச் சார்பாக இருப்பது பயங்கர விளைவுகளை தரும்.

    ReplyDelete
  2. There truth to some extend in his reply....But not fully.

    Many ministers already have met him and explained the current situation very well.. So how come caliming that our problem did not reach him.

    Further when he met who religious committee last time Our ACJU leader explained and ask for help.. But not reply.

    He is keeping silent in the issue of BBS monk even after so many evidence.. Does it mean the message did not reach him.

    Infact in certain social issues governemnt is acting but when it comes to BBS not at all.

    Thanks for his postive approach.

    We keep Trust in ALLAH alone.

    ReplyDelete
  3. நமது நிகழ்கால பிரச்சினைகள் பற்றி ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் ஏன் சிங்கள மக்களுக்குக்கூட தெரியாது. இந்நிலை மாற்றியமைக்கப்பட வேண்டுமாக இருந்தால் நம்மைப்பற்றி, நமது பிரச்சினைகளை சிங்கள மொழியில், சிங்களவர்களுக்கு சொல்ல மிக பலமான ஒரு ஊடகம் தேவை.
    நாட்டில் 3400 க்கும் அதிகமான அரபு மத்ரஸாக்கள் உள்ளன. ஆனால் சிங்கள மொழியில் முஸ்லிம்களுக்கு என ஒரு ஊடகம் இல்லை.

    Dear Brother N.M. Ameen,

    "The Muslim Voice" cannot accept this statement the above statement made by you to Jaffnamuslims.com at all please. Your statement is wrong/incorrect.
    THE MCSL, THE Shoora Council of Sri Lanka, The ACJU, Azad Sally, Hilmy Ahamed and the Sri Lanka Muslim Media Forum had made many public statements that you all have informed, told and have even written to President Maithripala Sirisena and PM Ranil Wickremasinghe about the prevailing issues of the Sri Lankan Muslim Community. Minister Rishad Bathiudeen, Minister Rauf Hakeem, Minister Haleem and Minister Hisbullah have also publicly stated that they have communicated with the President and the PM about the plight of the Muslims of Sri Lanka at the hands of the BBS and the lack of the "Yahapalana" governments attention to the urgent needs of common amenities needed in Muslim populated areas. Your mention about the dengue epidemic in Kinniya in the Trincomalee district was a good example of the lack of health facilities in a predominantly Muslim area which led to 14 deaths. SO HOW CAN YOU SAY BROTHER N.M.AMEEN that the government does NOT know the issues/PLIGHT of the Muslim community. This statement below is also wrong/incorrect - "முஸ்லிம் சமூகம் ஆட்சியாளர்களை மட்டும் குறை சொல்வதில் பயன் இல்லை. நமது பிரச்சினைகள் அவர்களை சென்றடையவில்லை. முஸ்லிம் சமூகம் ஆட்சியாளர்கள் மீது ஆத்திரம் கொண்டிருப்பதுகூட ஜனாதிபதிக்கு தெரியாது. இதுதான் யதார்த்தம். நிலைமை இப்படித்தான் இருக்கிறது". So brother N.M. Ameen - DO NOT WHITE WASH THE FAULTS OF THE "YAHAPALANA" government. Facts will be always stubborn. The Sri Lanka Muslims are NOT PREPARED to listen to your lies anymore, Insha Allah.
    Let me recall here, that it was NOT because of a headline news item that appeared in the "MAWBIMA (Sinhala) DAILY NEWS PAPER that the president took action to monitor the situation and then later make an official visit to Kinniya (including the Kinniya Hospital) and make promises, that have still not been fulfilled, but the CREDIT has to go to Governor Austin Fernando and the District Secretary, Mr. N.A.A Pushpakumara for their foresight and dedicated services that they initiated with the help and assistance of the security forces from the time the epidemic warning was issued by the field staff and the DMO Kinniya. Furthermore, it was the consistent pressure put by the "KINNIYA PROTESTERS", that also made the President to visit Kinnya as explained below in the "newsfirst - news report. It was reported that on March 15, 700 army personnel along with health sector employees and villagers had conducted a massive clean-up operation to destroy mosquito breeding grounds in Kinniya. http://nation.lk/online/2017/03/18/deadly-dengue-engulfs-sleepy-trinco.html. This is how http://newsfirst.lk/english/2017/04/president-pledges-increase-capacity-kinniya-hospital-trinco-visit/165034 reported the situation in Kinniya on April 1st. 2017. "A protest at the Kinniya Base Hospital which was being staged over the past four days, calling on officials to increase the capacity of the hospital, came to an end today through the intervention of President Maithripala Sirisena. The president engaged in a sudden inspection of the Kinniya Base Hospital while en route to the Yovunpura camp in Trincomale. The President met with the protesters, during his visit, and pledged to resolve the issues plaguing the hospital".
    Noor Nizam - Convener "The Muslim Voice".

    ReplyDelete
  4. தனியான முஸ்லீம் ஊடகம் இதுவரை சாத்தியமாகததன் காரணம் அறியப்பட வேண்டும் .

    ReplyDelete
  5. BrNizam I am not looking these as in a petty politickle angel.this is the reality.kinniya matter after the maubima story only president intervene.

    ReplyDelete
  6. சுதந்திரமான தனியான முஸ்லீம் ஊடகம் கண்டிப்பாக அவசியம் இதற்கு உரியவர்கள் கவனம் எடுப்பார்களா?????

    ReplyDelete
  7. பத்திரிகை படித்து நாட்டு நடப்பை அறியும் தலைவர் , தமிழ் பத்திரிகையையும் இனி படிக்கட்டும் . முன்னாள் ஜனாதிபதி தமிழை படிப்பதில் ஆர்வம் காட்டினார்

    ReplyDelete

Powered by Blogger.